Thursday, March 23, 2006
திருகோணமலை -ஒருபார்வை- பகுதி2
கோணேஸ்வரர் ஆலயத்தையும், பாபநாசச்சுனையையும், உள்ளடக்கி நிற்கும் தற்போதுள்ள கோட்டையை, அந்நியர்கள் புராதனமான கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்தே கட்டினார்கள் என்பதற்குச் சாட்சியாக இருப்பது, கோட்டைவாயிலில் காணப்படும் கற்களில் உள்ள, கோணேஸ்வரர் ஆலயக் கல்வெட்டு வாசகங்களும்,
படம் :- கன்னியா வெந்நீருற்று பாண்டிய அரசாட்சி இலட்சனையான இரட்டைக்கயல் மீன் இலட்சனையுமாகும். இந்தக்கோட்டையைக் கட்டியவர்களும், கைப்பற்றிக் கொண்டவர்களும், தங்கள் பாதுகாப்புத் தளமாகவும், திருகோணமலைக்கு அப்பால் கிழக்கு நோக்கி விரியும் பரந்த கடற்பரப்பைக் கண்கானிப்பதற்கும், பயன்படுத்தி வந்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சிவிட்டு நீங்கியபோது, இலங்கை அரசுக்குச் சொந்தமானது.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலங்களில், திருகோணமலை பல்லின மக்கள் வாழுமிடமாக விளங்கியபோதும், பெரும்பாண்மையாகத் தமிழர்கள் வாழும் தமிழ்பிரதேசமாகவே இருந்தது. இந்து, முஸ்லீம், பெளத்தம்,கிறிஸ்தவம், எனும் நான்கு மதங்களைச்சார்ந்த மக்கள் தமிழ, சிங்களம், எனும் இருமொழி பேசியிருந்தார்கள். சிவராத்திரி காலத்தில், நகர்வலம் வுருகின்ற கோணேஸ்வரப்பெருமானைக் கும்பிடாத சிங்களவர் இருக்கமாட்டார்கள், வெசாக் பண்டிகை கொண்டாட்டதில் கலக்காத தமிழர்கள் இல்லை, என்ற அளவிற்கு அவர்கள் வாழ்வு இணைந்திருந்தது.
என்று சிங்களபேரினவாத் தலைதூக்கத் தொடங்கியடதோ, அன்றிலிருந்து இனங்களுக்கிடையில் பகைமை தொடங்கிற்று. இந்தப்பகைமையுணர்வை ஊக்கி வளர்ப்பதில் பேரினவாதம் மெதுமெதுவாக, ஆனால் பல்மாகவும், பவ்யமாகவும், செயற்பட்டத. தென் இலங்கையின் கரையோரங்களிலிருந்து, மீன்பிடித்தொழிலுக்காக வந்து வாடி அமைத்தும், சந்தைவைத்துக் கொண்டுமிருந்த சிங்களவர்கள், திருக்கோணேஸ்வரத்தின் வாசலிலே தங்கள் வழிபாட்டிற்கென ஒரு புத்தகோயிலை நிறுவியபோது, வழிபாட்டுத்தலம்தானே என தமிழ்மக்கள் வாளாதிருந்தததனால், பின்னர் கோட்டை வாயிலில் இருந்த பிள்ளையார் "கண தெய்யோ நாண்ட கியா" என ( பிள்ளையார் குளிக்கப் போயிற்றார் எனும் தமிழ் அர்த்தம்) சிங்களத்தில் எழுதப்பட்டு, பலதடவை கடலுக்குள் வீசப்பட்டார். பிள்ளையார் மட்டுமா வீசப்படார்? பின்னாளில் பல தமிழ்பிள்ளைகளுமல்லவா கடலில் வீசப்பட்டார்கள்.
புராதன தமிழ்நகரம ஒன்று, படிப்படியாகத் திட்டமிட்டு அழிக்கபடும் சோகம் ஆரம்பமாகியது. மகாபாரதக்கதையில், குருஷேத்திரக்களத்தில் அபிமன்யு பத்மவியுகத்தில் சிக்க வைத்துக் கொன்றார்கள் அல்லவா? அதுபோல், தமிழ் மக்களைக் கொன்றழிக்க சிங்கள்ப் பேரினவாதம் ஒரு பயங்கரமான பத்ம வியுகம் வடித்தது. அதுதான் சிங்களக்குடியேற்றங்கள்.
சிங்களக் குடியேற்றங்கள்ஆரம்பத்தில், நல்லெண்ண முயற்சி போலவே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அது ஒரு நச்சு மரம் என்பதை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்ட போது, வெள்ளம் கழுத்துக்கு மேல் வந்து விட்டது.
திருகோணமலையை தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவர, சிங்களப் பேரினவாதம், ஏன் இவ்வளவு அக்கறை கொள்கிறது. அதன் பின்புலச் சூட்சுமம் என்ன ?... மறுபகுதியில் பார்ப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
கிரிஸ்துவர்கள் இந்துக்கோவில்களை இடித்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறீர்களே அய்யா! என்றைக்கு கிரிஸ்துவர்கள் இந்துக்கோவில்களையோ முஸ்லீம் மசூதிகளையோ இடித்திருக்கிறார்கள்? பொய் சொன்னால் பொருந்தச் சொல்லவேணும். இன்றைக்கு தாயாய் பிள்ளையாய் வாழ்ந்து வரும் இந்துக்களையும் கிரிஸ்துவர்களையும் பிரித்தாளவா முயற்சிக்கிறீர்கள்?
நண்பரே!
மன்னிக்கவும். அந்நிய ஆக்கிரமிப்பினை வரலாறு பதிவு செய்த வகையில் குறிப்பிட்டிருக்கினிறேன். கோணேஸ்வரர் ஆலயம் சம்பந்தமான குறிப்புக்கள் கூட திருகோணமலையில் தமிழர்களின் வாழ்வின் தொன்மையைச் சுட்டவதற்காகவே எடுத்தாளப்பட்டிருக்கிறது.எங்கள் நிலம் பறிபோகும் துயரினை பதிவு செய்ய முற்படும் முயற்சிதனை, தயவு செய்து மதசார்பான விடயமாக மலினப்படுத்தி விடவேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி!
//கிரிஸ்துவர்கள் இந்துக்கோவில்களை இடித்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறீர்களே அய்யா!//
"According to the KALVETTU (a Tamil stone inscription referred to by Codrington), the temple of KONESAR is said to have been founded by KULAKOTTAN, son of Manuwentan in the Kaliyuga year 512 (B.C. 2591) It was destroyed by Constantine de Sa in 1624, and the material used for the construction of the Fort." [Journal of the Royal Asiatic Society (Ceylon Branch) Vol. XXX].
Read more here.
'அன்னியரால் இடிக்கப்பட்டது' என்பதை, வசதியாக 'கிறிஸ்தவரால் இடிக்கப்பட்ட'தாகச் சொல்லும் அநாமதேயத்துக்கு எந்த உள்நொக்கமும் இல்லையென்றே வைத்துக்கொள்வோம். (அந்த அன்னியர்கள் கிறிஸ்தவர்கள் தான் என்ற அளவிற்காவது அவருக்கு வரலாறு புரிந்திருக்கிறது.)
அந்த அநாமதேயத்துக்கு (ஏதாவது பெயர் போட்டு எழுதினால் அப்பெயர் சொல்லி அழைக்கலாம்) இலங்கை வரலாறு பற்றி ஏதாவது தெரியுமா? தெரியாத பட்சத்தில் "கூசாமல் பொய் சொல்கிறீர்களே?" என்று எப்படி கேட்க முடியும?
யாழ் கோட்டைகூட நல்லூர் கந்தசாமி ஆயத்தை இடித்து அதன் கற்களைக் கொண்டே கட்டப்பட்டதென்ற வரலாறுண்டல்லவா?
இது மதத்தலங்களை அழித்தல் என்பதைவிட, அவர்களுக்கு அக்கற்கள் தேவைப்பட்டன என்றே சொல்லலாம்.
நிற்க,
வந்த அன்னியர்கள் இந்துக் கோவிலை இடித்தார்கள் என்ற கருத்துக்காக எவனுமே இங்கே சண்டைபிடிக்கும் சூழலில்லை. அவன் இடித்தான் என்பதற்காக எந்தத் தமிழ்க் கிறிஸ்தவனும் குற்றவுணர்வு கொள்வதுமில்லை. எல்லோருக்குமே அவர்கள் அன்னியர்தான்.
இலங்கையில் ஒருகட்டத்தில் (1992 என்று நினைக்கிறேன்) முப்படைத்தளபதிகளுமே கத்தோலிக்கர்கள்தான். அது தெரியுமா?
அவர்களின் தலைமையில் இந்துக்கோயில்கள் அழிக்கப்பட்டனவென்ற காரணத்துக்காக எந்தத் தமிழனாவது தங்களுக்குட் சண்டை பிடித்தார்களா? அப்படியொரு சூழ்நிலைதான் வருமா?
சும்மா முட்டாள்தனமான கதைகளை விட்டுவிட்டு வரலாற்றைப் பாருங்கள்.
well said kozuvi.
i believe mr. anonymous got triggered with calgary siva's blog. but contemporary ezam is not the place for flaming saivite christian war.
அனாமதேய ஐயா! ஐரோப்பியர் வந்த போது அவர்களுடன் வந்த கிருஸ்தவர்கள்;சைவாலயங்களை இடித்தே கோட்டைகளைக் கட்டியது மாத்திரமன்றி சைவ மக்களைக் கிருஸ்தவராக்க பலகொடுமைகள் செய்ததுடன்; பணம் பதவி ;மது; மாது ஆசைகாட்டி மாயவலையில் சிக்கவைத்த உண்மைகளை ஐரோப்பியரே ஒப்புக் கொண்டாலும்; இவர்கள் வெட்கத்தால் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் போலும்; ஆனால் நாங்கள் அதை இவர்கள் தவறல்ல!! என்பதைப் புரிந்துதான். சகோதரர்களாக ஏற்று இன்றும் ;வாழ்கிறோம்.
மலைநாட்டான் உள்ளதை உள்ள படி எழுதுங்க!
யோகன்
பாரிஸ்
"ஐரோப்பியர் வந்த போது அவர்களுடன் வந்த கிருஸ்தவர்கள்;சைவாலயங்களை இடித்தே கோட்டைகளைக் கட்டியது மாத்திரமன்றி சைவ மக்களைக் கிருஸ்தவராக்க பலகொடுமைகள் செய்ததுடன்; பணம் பதவி ;மது; மாது ஆசைகாட்டி மாயவலையில் சிக்கவைத்த உண்மைகளை ஐரோப்பியரே ஒப்புக் கொண்டாலும்; இவர்கள் வெட்கத்தால் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் போலும்;"
இவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்? தமிழீழ கிரிஸ்துவர்களையா?
**
"(1992 என்று நினைக்கிறேன்) முப்படைத்தளபதிகளுமே கத்தோலிக்கர்கள்தான். அது தெரியுமா? அவர்களின் தலைமையில் இந்துக்கோயில்கள் அழிக்கப்பட்டனவென்ற காரணத்துக்காக எந்தத் தமிழனாவது தங்களுக்குட் சண்டை பிடித்தார்களா?"
முப்படைத்தளபதிகளும் இந்துக்களாக இருந்து, கிரிஸ்துவ தேவாலயங்கள் அழிக்கப்பட்டிருந்தால், தமிழர்கள் தங்களுக்குள் சண்டை பிடித்திருக்க மாட்டார்கள் தானே?
இந்துக்களை ஒழிக்காமல் கேடு கெட்ட இந்து மதத்தை ஒழிப்பது எங்ஙணம்?
இந்துக்கோவில்களை அழிக்காமல் இந்து மதத்தை ஒழிப்பது எங்கணம்?
கேடு கெட்ட சாதியை ஒழிக்க ஐரோப்பியர் செய்த நற்காரியமாய் பார்க்கவேண்டுமே அல்லாமல், தவறாய் பார்ப்பது எங்கணம்?
-Alex
guyz now the problem is not who demolished what five hundred years ago. if one wants to dig it he has a hidden agenda against ezam. let the hindu muslim christian fighting for malarmannan & co. it is not your call in ezam
//கேடு கெட்ட சாதியை ஒழிக்க ஐரோப்பியர் செய்த நற்காரியமாய் பார்க்கவேண்டுமே அல்லாமல், தவறாய் பார்ப்பது எங்கணம்?
//
அலெக்ஸ்,
நீங்கள் நக்கலுக்குச் சொல்கிறீர்களோ என்னவோ,
உது 'புலிகள் சாதியை வளர்க்கத்தான் யாழ்பாணத்தில் பனை நட்டார்கள், இப்ப அந்தச் சாதி வேற்றுமையை அழிக்கத்தான் சிங்களவன் பனைகளை ஆயிரக்கணக்கில வெட்டுறான்" எண்டு சிலர் சொல்லுற மாதிரிக் கிடக்கே?;-)
முன்வந்த அநாமதேயத்தாருக்கும் பின்வந்த யோகன்-பாரிசுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை.
இரண்டு அநாதைகளுக்கும்;(அனாமதேயத்துக்கும் இதுக்கும் வேறுபாடு இல்லை)
வெட்கத்தால் ஒப்புக்கொள்ள மறுக்கும்;ஈழ; இந்திய மற்றும் எல்லா கிருஸ்தவர்களையும் தான் குறிப்பிடுகிறோம். ஆனால் அவர்கள் எவர்மேலும் எங்களுக்கு; எந்த வித மனத்தாக்கமும் இல்லை.என்பதை இதன் மூலம் தெளிவாகக் கூறவிரும்புகிறேன்.மறப்போம்; மன்னிப்போம் என்பது நாம் மதத்தால் கற்றது.இன்று வரை உலக ஊடகங்கள் யாவும்; ஹிட்லர் ;யூதமக்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டுகிறது.ஐரோப்பிய, அமெரிக்கரின் ஆபிரிக்க கறுப்பின மக்களை அடிமை வியாபாரம் செய்ததைக் காட்டுகிறது. அதை செய்யவேண்டாமென எவருமே தடை போடவில்லை.எதிர்காலத் தலைமுறைகள் அறிந்து திருந்த வேண்டுமென்பதால்,அவை ஆவணங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இத்தருணத்தில்,எம் தமிழ்ச்சமுதாயத்துக்கும் தமிழ் மொழிக்கும்; பலவழிகளில் சேவை செய்த அன்புள்ளம் கொண்ட பல்லாயிரம் கிருஸ்தவர்களை ;உள்ளார்ந்த அன்புடன் நினைவு கூருகிறேன். கல்வி;மருத்துவத்தில் அவர்கள் செய்த சேவை அளப்பரியது.அதனால் நடந்த சரித்திரங்கள், மறைக்கப்பட வேண்டுமெனவோ!; மறக்கப்பட வேண்டுமெனவோ; நினைப்பது தவறு என்பதை; நீங்கள் புரிந்தால் போதும்.
"நாம் தென்னாடுடைய சிவனே போற்றி!; என்னாட்டவருக்கும் இறைவா போற்றி "என்று சொன்னவர் வழிவந்தவர்கள். உங்கள் மேலோ; உங்கள் மதத்தின் மீதோ; எனக்கு வெறுப்பே இல்லை. உங்கள் மரியே; எங்கள் மாரி. அந்தோனியார் எனக்கு முருகன் போல் தெரிகிறார்.உண்மை கூறுதலை;குத்திக் காட்டல் ,எனக் கொள்ள வேண்டாம்.
சேவைக்கு மறுபெயர் கிருஸ்தவம்; இதற்கு மாற்றுக் கருத்தில்லை.எங்கள் மதத்து சங்கராசாரியாரை விட அன்னை திரேசா பலமடங்கு கருணை உள்ளம் கொண்டவர்;எனக்கருதுபவன் நான்.
எங்கும் தவறு உள்ளது போல்;இந்து மதத்திலும் பெரும் தவறுகள் உண்டு. நண்பர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார் போலும்; அதற்க்காக வேதனைப்படுகிறேன்;வெட்கப்படுகிறேன்.அதைப் போக்க அவர் கூறும் வழி நடைமுறைக்குச் சாத்தியமா? வீட்டில் எலியென வீட்டைக்கொளுத்தியதற்குச் சமமான செயல், ; இதையெல்லாம் தடை செய்த சீனாவே தளற்த்திவிட்டது.எல்லாத் தரப்பினரும் மாற்றத்துக்கான காலம் வந்துவிட்டதென்பதனைப் புரிந்தால் போதும்.
யோகன்
பாரிஸ்
வலைப்பதிவு வாசக நண்பர்களே!
இப்பதிவுக்கு முதலில் பின்னூட்டம் இட்ட பெயர் சொல்லா நண்பருக்கு , மறுமொழியிடுதலிலேயே, இப்பதிவின் நோக்கம் குறித்துத் தெளிவுபடுத்தி எழுதியுள்ளேன். ஆயினும் பின்னூட்டமிடும் நண்பர்கள் தொடர்ந்தும் கட்டுரையின் கருத்துப் போக்கினை திசைமாற்றிவிடும்போக்கில் எழுதிவருகின்றார்கள். ஆதலால் தயவுசெய்து பின்னூட்டமிடும் நண்பர்கள் இதனைக்கருத்திற்கொண்டு எழுதுமாறு கேட்டுக்கொள்கின்றேன். கட்டுரையின் உள்ளடக்கதிற்கு மாறாக எழுதப்படும் பின்னூட்டங்கள் இனி பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை இப்பதிவினை எழுதிவருபவன் என்ற வகையில் பணிவுடன் அறியத்தருகின்றேன்.
Post a Comment