அன்மையில் ஓர் சந்திப்பில் ஒரு இளைஞன் தான் வடித்த இசைவடிவங்களை தன் நண்பர்கள் வட்டத்தில், அறிமுகஞ்செய்து கொண்டிருந்தான். தரமான புதிய இசைக்கோர்வைகள். கேட்டு மகிழ்ந்த நண்பர்கள் கேட்டகிறார்கள்,
ஏன் நீ முறைப்படி இசையைக் கற்றுக்கொள்ளக் கூடாது?
என்னிடம் தற்போதுள்ள இசை மறந்து போய்விடுமெனப் பயமாகவிருக்கிறது.
அவன் பதில் அனைவர்க்கும் ஆச்சரியம் தருகிறது.
குறித்த வரைமுறைகளுக்குள் இசையின் விரிவை சுருக்கிப்பார்க்க விரும்பவில்லை என்கிறான்.எத்தனை உண்மை.
இசைக்கு எல்லைகள் உண்டா? உலகப்பொதுமைக்கு உரிமம் எடுக்கும் முயற்சியோ சாஸ்த்ரீய சங்கீதம்? மனங்களை இசையவைப்பதுதானேஇசை. அதை எப்படி வரைமுறைக்குள்ளாக்கலாம்?
அவனது ஒற்றைவரிப்பதில் என்னுள் பல கேள்விகளை எழுப்பியது.
கட்டுக்கோப்பில்லாத இசைஞர் என விமர்ச்சிகப்பட்டவராக பித்துக்குளி முருகதாசை நான் அறிந்திருக்கின்றேன். நீங்களும் அறிந்திருப்பீர்கள். ' அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாதே ' பாடலை மற்றவர்கள் பாடும் அதே அடானா ராகத்தில்தான் பாடுவார். ஆனால் மற்றவர்களின் வரைமுறைக்கட்டுப்பாட்டுகளை மீறிய இசையாக அது வெளிப்படும். அவரது குரலும், அவரது ஆர்மோனியமும், குழைந்து, தவழ்ந்து,நின்று, நிமிர்ந்து, பலவாறு ஜாலம்புரியும்.
உள்ளத்தின்னுள்ளே ஊடுருவிச்சென்று உட்கார்ந்துவிடும் அவரது பாடல்களில் எனக்குப்பிடித்தமான மற்றொரு கண்ணன் பாட்டு.
ஒரு ஒன்பது நிமிடம் எல்லாற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, அமைதியாக இருந்து, கண்களைமூடிக் கேட்டுப்பாருங்கள். பாடல் முடிந்து, கண்களைத்திறக்கும்போது உங்கள் மனமும் உடலும், புத்துணர்ச்சி பெற்றிருக்கும். தயாரா?...
தயாரெனில், அருகிருக்கும் Stickam player ல் 1 வது பாடல் 'கண்ணா கண்ணாவைக் கேட்டுமகிழுங்கள்.
10 comments:
நன்று
அருமையான இசை
மிக அருமையாக இருந்தது பித்துகுளி முருகதாஸின் பாடல் ஐயா.
நன்றி மலைநாடான் ஐயா!
அருமையான பாடலை வித்தியாசமான கதியில் பளிச் என்று பாடியுள்ளார்!
பித்துக்குளி முருகதாசரின் பல முருகன் பாடல்களைக் கேட்டுள்ளேன்! அவரின் குரலும் அந்த ஆர்மோனிய இசையும் சுண்டி இழுக்கும்! ஆனால் அவரின் கண்ணன் பாடல்கள் அவ்வளவாகக் கேட்டதில்லை! அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!
அடானாவா கானடாவா
மலைநாடர்!
92 ல் சிங்கப்பூரில் சிரங்கூன் ரோட் முத்துமாரியம்மன் ஆலயத்தில் இவர் கச்சேரியில் பாடக் கேட்டேன். காந்தக் குரல் தான் ,ஆர்மோனியத்தில் விரல் விளையாடும் வேகமும் அலாதி. சுகானுபமாகத் தான் இருந்தது. நல்ல பாடல் ,நன்றி.
யோகன் பாரிஸ்
ரவி!
உங்கள் பதிவில் இணைப்புக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
பித்துக்குளியார் ' கனக மணிஅசையும் உனது திருநடனம்' வரிகளை ஒவ்வொரு நடையில் பாடுவதை நான் மிகவும் ரசிப்பதுண்டு. பாடல் நிறைவு பெறும் போது, ஏதோ ஒரு முழுக்கச்சேரி கேட்ட அனுபவம் கிடைக்கும்.
குமரன்!
தங்கள் வருகைக்கு நன்றி.
ஆதிரை!
இது அடானா அல்ல கானடாதான் தவறுக்கு மன்னிக்கவும். பதிவிலும் திருப்தியமைக்கின்றேன்.
யோகன்!
இவர் இலங்கைக்கும் வந்திருக்கின்றார். எனக்கு ஏழுவயதிருக்கும் போது முதற்தடவை நேரில் பாரத்திருக்கின்றேன். அன்று முதல் அவரது இசைக்கு அடிமை. பின் பலதடவை நேரடியாகக் கேட்டிருக்கின்றேன். புலத்திலும் ஒருதடவை . தங்கள் பகிர்வுக்கு நன்றி.
Post a Comment