ஏறுபடி. இந்தச்சொற்பதத்துக்கு, யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் ஒரு தனிப்பொருள் உண்டு. என் நட்சத்திர வணக்கப்பதிவுக்கு வாழ்த்துத்தெரிவித்த நண்பர், பாரிஸ் - யோகன் “ உங்கள் திரு விழாவில் ஏறுபடிகள் எதிர்பார்க்கிறேன். “ என எழுதியிருந்தார். இதற்க்குப் பொருள் தெரிந்தவர்கள் சொல்லவும் எனக்கேட்டுமிருந்தேன். யாரும் சொல்லவில்லை. அதனால் நானே சொல்லி விடுகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் திருவிழா நடக்கும் கோவில்களில், கோவிலில் வாசிக்கும் மங்களவாத்தியக்கலைஞர்களைத் தவிர்த்து, விஷேடமாக அழைக்கப்படும் வாத்தியக்குழுவினரை, ‘ஏறுபடி மேளம் ‘ என அழைப்பதுண்டு. அதுவே காலப்போக்கில், ஏறுபடி மேளம் என்பதில், மேளம் தவிர்ந்துபோக, ஏறுபடி என்பது மட்டும், சிறப்பான அல்லது விசேடமான நிகழ்வுகளுக்கான பொதுக்குறியீட்டுச் சொல்லாக பயன் படுத்தப்பட்டது.
வாழை, தோரண அலங்காரங்களுடன் நட்சத்திர வணக்கம் சொன்னதைப் பார்த்து, குதுகலத்தில் யோகன் ஐயா, ஏறுபடிகள் கேட்டுள்ளார். அவரையும், ஏனைய தமிழ்மண நண்பர்களையும், சற்று வித்தியாசமான கலை அனுபவத்துக்கு அழைத்துச் செல்லலாமென எண்ணி, இங்கே எகிப்திய பாரம்பரிய நடனக்குழுவினரை அழைத்து வந்திருக்கின்றேன்.
மனித நாகரீகங்கள் தோன்றிய காலத்தில், பல்வேறு தளங்களிலும், பல்வேறு கலை வடிவங்களும், தோன்றின. அவற்றின் தளங்கள், இக்காலத் தகவல் தொடர்பு வசதிகளைப் பெற்றிருக்காத போதும், பல இடங்களில் ஒத்திருப்பது மனித மனங்களின் சிந்தனை வளர்ச்சியை ஒருமைப்படுத்திக் காட்டுவதாக அமைகிறது. அந்த வகையில் எகிப்திய நடனங்களின் அசைவுகள் தன்மைகள் எங்கள் நடனக்கலை வடிவங்களுடன் ஒத்துப் போவதை உணரக் கூடியதாகவுள்ளது.
இந்த நடனக்குழுவின் இயக்குனர் என் நல்ல தோழி. பல் வகை நடனங்களில் குறிப்பாக எங்களுடன் ஒத்து வரும் மூன்று நடனங்களின் சிறு பகுதிகளை மட்டும் இங்கே இணைத்துள்ளேன். பாவனை, அசைவு, ஆடை வண்ணங்கள், உபபொருட்கள், என பலவும் ஒத்து போகும் எகிப்திய நடனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த இசையும் அற்புதம்தான். நடனத்தைப் பாரத்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். குறிப்பாக ஆண், ஆடும் நடனத்தில் முக்கிய ஒரு பாவனை அல்லது செயல் உண்டு. கண்டு பிடியுங்கள்.
13 comments:
நடனப் படம் பார்க்க முடியவில்லை மலைநாடான். கிளிக்கினால் loading என்றே இருந்துகொண்டிருக்கிறது.
// நடனப் படம் பார்க்க முடியவில்லை மலைநாடான். கிளிக்கினால் loading என்றே இருந்துகொண்டிருக்கிறது //
செல்வநாயகி!
செயலி வேலை செய்கிறதே. முற்றாக மூடி, சற்றுத் தாமதிதுத் திறவுங்கள். வேறுவழியுன்டாவெனப்பார்க்கின்றேன்.
This is a private video. If you have been sent this video, please make sure you accept the sender's friend request.
இவ்வாறு என்னை youtube திட்டுகிறது என்ன செய்வது?
குமரன் எண்ணம்!
ஒளிப்பதிவு உள்ளீட்டில் தரவுத் தவறு என்று நினைக்கின்றேன். விரைவில் சீர்செய்கின்றன். அறியத்தந்தமைக்கு நன்றி.
சிரமத்திற்கு மன்னிககவும்.
அவர் ஆடுவது நம்மூரில் தீப்பந்தம் & தீ கம்பு கொண்டு சுழற்றி ஆடுவதை போல் உள்ளது.
எனக்கு நன்றாக வேலை செய்கிறது.
என்ன மாதிரி சுழண்டு ஆடுறார். தலை சுத்தாமல் ஆடுறது பெரிய விசயம்தான்.
இப்போது ஒளிச்செயலி வேலை செய்கிறது. முதலில் ஏற்பட்ட தவறுக்கும் உங்களுக்கேற்பட்ட சிரமத்திற்கும் மன்னிக்கவும்
நடனம் மிக நன்றாக இருந்தது மலைநாடன் அவர்களே. மிக்க நன்றி
செல்வநாயகி, குமரன்( எண்ணம்)!
இப்பொழுது நன்றாக செயலி வேலை செய்கிறது. நடனத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைத் தாருங்கள்.
குறும்பன்!
நீங்கள் சொல்லும் நடனம் எதுவென எனக்குப் புரியவில்லை.
வசந்தன்!
சுமார் 15 நிமிடங்கள் சுற்றியபடியே ஆடினார். எனக்கும் பெரிய ஆச்சரியமாகவிருந்தது. அதுசரி அவர் செய்யும் பாவனை ஒன்றைச் சுட்டும்படி கேட்டிருந்தேனே. கவனிக்க வில்லையா?
மலைநாடர்!
இந்த நடனத்தின் உடைஅமைப்பும்;அசைவுகளும் "கதகளி" யை நினைவுபடுத்துகின்றன; ஆணின் நடனம் துருக்கியிலும் பிரபல்யம்; நம் பரதம் போல் சமயத்துடன்;மிகத் தொடர்புடையது. இதில் இடையில் வந்த மேல் பாகக் குடை போன்ற பாகத்தை முதல் தடவையாகப் பார்க்கிறேன். துருக்கிய நடனக் கலைஞர்கள் உயரமான தொப்பியும் அணிவார்கள். தொடர்ந்து மணிக்கணக்கில் பலவித வேகத்துடன்; பாடல்களுடன் இந்த நடனத்தை;குழுவாக ஆடுவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் ஆடுகிறார்கள் போல் உள்ளது.இதுவரை நான் பெண்களைப் பார்த்ததில்லை.3 ம் பாகம்; வேகம் குறைந்த நம் கரகாட்டம் தான்.பொதுவாக இஸ்லாமிய நாடுகளில்; செறிவான கிராமியக் கலைவடிவங்கள். உண்டு. இது எனக்கு ஏறுபடியே!
யோகன் பாரிஸ்
மலைநாடர்!
இந்த ஆணின் நடனத்தில் கடைசியில் குழந்தையை ஏந்துவது போலும்; அக்குழந்தையைப் பெண்ணிடம் கொடுப்பது போலும் பாவனை வருகிறது!
யோகன் பாரிஸ்
Post a Comment