இந்தியாவின் பிரபலமான தமிழ்பத்திரிகையாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் எழுத்தாளர் வாஸந்தி. இவரது எழுத்துக்கள் சிலவற்றை நானும் விரும்பிப் படித்திருக்கின்றேன். இவ்வார ஆனந்தவிகடனில் அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாரதிராஜா சந்தித்ததையிட்டு விசனம் தெரிவித்து ஒரு கட்டுரை வரைந்துள்ளார். வாஸந்தி அவர்களுக்கிருக்கும் கருத்துச் சுதந்திரத்தினடிப்படையில் கட்டுரை வரைந்துள்ளமையிட்டு எனக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர் கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில, பரந்த நோக்கின்றி ஏதோ ஒரு குறித்த நோக்கில் சொல்லப்பட்டிருப்தாக உணர்கின்றேன். அது குறித்த கேள்விகளுடனேயே இப்பதிவு. (வாஸந்தியின் கட்டுரைக் கருத்துக்கள் நீலநிறத்தில் எழுதப்பட்டுள்ளன)
சென்ற விகடன் இதழில், பிரபல இயக்குநர் பாரதி ராஜாவின் பேட்டிக் கட்டுரை எனக்குக் கவலை அளிக்கிறது. பாரதிராஜாவிடம் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்டு அவர் பிரமித்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவர் முன்வைக்கும் சில வாதங்கள் ஏற்கும்படியாக இல்லை.
ராஜீவ் காந்தியின் மரணத்துக்காக இந்தப் பூமி உள்ளவரை ஒரு இனத்தையே மொத்தமாகப் புறக்கணிக்க முடியுமா என்கிறார். தமிழ் மக்களை யார் புறக்கணித்தார்கள்? இலங்கைத் தமிழர்கள் சாரி சாரியாக, அகதிகளாக நமது நாட்டுக்கு வருவதைத் தடுக்கிறோமா?
இந்த வரிகளின் பின்னாலுள்ள சிந்தனை என்ன? இலங்கைத்தமிழர்களுக்குச் சொல்லப்படும் செய்தி என்ன? இலங்கையில் புலிகளும் அரசும் யுத்தம் செய்யட்டும், தமிழ்மக்களெல்லோரும் இந்தியாவுக்கு வாருங்கள் என்கிறாரா? அல்லது வாழ்வுரிமை கேட்கும் மக்களுக்கு அதுதான் தீர்வாகுமா?
உலகம் முழுவதும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைப் புறக்கணித்துவிட்டதால், இப்போது புலிகளுக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், திரைப்படங்கள் எல்லாம் ஆபாசமானவை என்று தடை விதித்திருக்கும் புலிகள், இப்போது நமது பத்திரிகைகளில் விளம்பரம் தேடுகிறார்கள். பட இயக்குநர்களை அழைத்துத் தங்களைப் பற்றிப் படம் பண்ணச் சொல்கிறார்கள்!
தமிழ்நாட்டுத்திரைப்படங்கள், பத்திரிகைகள், குறித்து விமர்சனங்கள் தமிழ்நாட்டில் இல்லையா? தமிழ்த்திரைப்படங்கள் குறித்த காட்டமான விமர்சனக்கருத்துக்கள் வாஸந்தியிடம் இல்லையா? அப்படியிருக்கும்போது, புலிகள் அதைத் தடைசெய்தது எப்படிப்பிழையாகியது?
புலிகள் பட இயக்குநர்களை அழைத்தார்கள் என்றால், எத்தகைய இயக்குநர்களை அழைத்தார்கள். தரமிக்க, தனித்துவமிக்க, மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரை அழைத்து, தங்கள் பகுதியிலுள்ள கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, தரமான கலைவளத்தை உருவாக்க முயற்சிக்கின்றார்கள். இதில் எரிச்சல்பட என்ன இருக்கிறது?
நமது அரசியல்வாதிகள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. பத்திரி-கையாளர்கள், கலைஞர்களின் பார்வை அதற்கு அப்பால் சென்று ஊடுருவ வேண்டும். மனித நேயம், மனித உரிமைக்கான உண்மைக் குரல் எப்போதும் சார்பற்றதாகவே இருக்கும். இருக்க வேண்டும்!
இறுதியில் இவ்வளவு தீர்மானமான கருத்துக்களுடன் கட்டுரையை நிறைவு செய்யும் வாஸந்தியின் பார்வை, ஏதோ ஒருபக்கம் நோக்கி எழுதப்பட்டிருப்பதாகவே கட்டுரையை வாசிக்கும்போது உணர முடிகிறது. இதை இந்திய மேலாதிக்க சிந்தனையின் தாக்கம், எனக் கொள்ளலாமா?
மனதிற்கினிய கீதம் ஒன்று கேட்க
30 comments:
வாஸந்தியின் கருத்தோடு எனக்கு ஒப்புதலே, திரு. மலைனாடன்.
உங்கள் போராட்டத்தை நீங்களே பார்த்துக் கொள்ள முடிவு செய்து விட்ட போது, இந்தியாவின் இறையாண்மையை மதிக்காத போது, இந்தியப் பிரதமரையே கொலை செய்த போது எங்களால் தார்மீக ஆதரவு ஒன்று மட்டுமே கொடுக்க முடியும் என்பதை எப்படி மறந்தீர்கள்!
தமிழர்கள் என இங்கு வரும் போது உங்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம்!
ஆனால் இலங்கைத் தமிழர் என்றால், அப்போதே நீங்கள் எங்களில் இருந்து வேறுபடுகிறீர்கள், தமிழர் என்ற ஒன்றைத் தவிர!
அதாவது, நீங்கள் இலங்கை என்னும் அடைமொழியை விடத் தயாரில்லை என சொல்லுகிறீர்கள்!
அப்போது, எந்த வகையிலான உதவியை நாங்கள் செய்ய முடியும், நீங்கள் விரும்பாத போது?
இதுதன் எங்கள் எல்லாருக்கும் இருக்கும் தர்ம சங்கடம்!
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
பிராபகரனின் நோக்கம் உன்னதமானது.
செயல்முறை..... கேள்விக்குரியது.
இதுதான் நான் சொல்வது.
மலைநாடன் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள், ஆதரவாளரும் இருக்கிறார்கள் எதிர்பாளரும் இருக்கிறார்கள். நாம் எப்படி பார்க்கவேண்டும் என்றால் தமிழுக்காக தமிழ் இனத்துக்காக தம்மை கொடுக்கக்
கூடியவர்களாக வைகோ,ஜயா பழநெடுமாறன்,டாக்டர் ராமதாஸ்,திருமாவளவன்,சுபவீரபாண்டியன்,மகேந்திரன்,
வைரமுத்து, பாரதிராஜா வரிசையில் வாஸந்தி இருக்கிறாரா என பார்க்கவேண்டும்.இல்லை என்றால் நான் முதல் கூறியவற்றில் அவர் எந்தவகையினரை சேர்ந்தவர் என முடிவு கட்டிவிடலாம், இது
ரெம்ப இலகு, அவருக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் பாரதிராஜாவுக்கும் உண்டு என வாஸந்தி மறுக்கமாட்டார் என நினைக்கிறேன்:-)
வாசந்தி ஏதோ புதிதாக எழுதியிருப்பது போல அதிசயப் படுகிறீர்கள். நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள பகுதியில் எதுவும் பொய்யாகச் சொல்ல வில்லை. வழக்கமாக நடுனிலை சோற்றுக்குள் பூசனிக்காய் பொய்யை புதைத்து வைப்பதில் வல்லவர். 1985 - 86 வாக்கில் கல்கியில் ஒரு தொடர் ஒன்றை எழுதினார், சென்னையிலோ கொழும்பிலோ இருந்து கொண்டு யாழ்ப்பாணத்துக்கு சுதந்திரமாகச் சென்று வந்தது போல் கப்சா விட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்திய இராணுவம் இலங்கைக்குச் செல்லவுமில்லை, இராஜீவ் கொலை செய்யப் படவுமில்லை. ஆனால் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் சிண்டு முடிய என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்து (இராஜீவிடம் கோள் மூட்டுவதைத்தான்) கொண்டிருந்தது ஒரு கூட்டம். இன்றும் செய்து கொண்டிருக்கிறது.
அன்று அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த வாசந்தி, சோ. இராமசாமி, சுப்பிரமணியசாமி, சேசன், வெங்கடராமன், தீக்சித், பண்டாரி போன்ற பிறவிகளின் இன்றைய தொடர்ச்சிதான் இராம், இராமன், நாராயணன். இந்தக் கும்பலில் பாராட்டப் பட வேண்டிய ஒரே நபர் சோ. இராமசாமி மட்டும்தான், ஏனென்றால் அது மட்டும் தான் ஈழத்தமிழரிடம் அனுதாபம் இருப்பதாக எந்தக் காலத்திலும் வேடம் போட்டதில்லை. தன்னுடைய இனவெறியை அன்றிலிருந்து இன்று வரை நேர்மையாக, வெளிப்படையாக எழுதி வருகிறது.
இவர்களுடைய இனவெறிக்கு துணையாக இருந்தது இராஜீவ் கொலை என்பது. இராஜீவ் இந்தக் கும்பலால் அனியாயமாக பலியானவர். புலிகள் சற்றும் யோசிக்காமல் தங்களது பழி வாங்கும் குணத்தை பயன்படுத்தி அப்படியொரு வலுவான ஆயுதத்தை இந்தக் கும்பலுக்கு கொடுத்து விட்டனர். ஒன்று மட்டும் உண்மை, இராஜீவ் இருந்தாலும், இல்லாவிட்டாலும், புலிகள் அல்லாமல் அமிர்தலிங்கமே அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்தாலும், அனைத்துத் தமிழர்களுமே சுடுகாடு சென்றாலும் இந்தக் கும்பல் தமிழர்களை சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் பண்ணி சாப்பிட்டுக் கொண்டிருங்கள் அமைதி திரும்பும் என்று கூறி பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கும்.
வேறு நடக்கக் கூடிய வேலையைப் பாருங்கள் ஐயா!
///ஆனால் இலங்கைத் தமிழர் என்றால், அப்போதே நீங்கள் எங்களில் இருந்து வேறுபடுகிறீர்கள், தமிழர் என்ற ஒன்றைத் தவிர!///
நகைப்புக்கிடமாய் இருக்கிறது.
தமிழீழம் கிடைத்தால் இந்தியாவை விட மிஞ்சிவிடும் என்று இந்தியாவிற்குப் பொறாமை ஐயா.. பொறாமை :P
http://1about.wordpress.com/2006/08/28/tamil-india-ltte-tamils-nadu/
_______
CAPital
மலைநாடன்,
இந்தக் 'கட்டு'ரையை வாசித்த போது எனக்கும் இதேக் கருத்துக்கள் தாம் தோன்றின!
/தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், திரைப்படங்கள் எல்லாம் ஆபாசமானவை என்று தடை விதித்திருக்கும் புலிகள்,/
எல்லாத் திரைப்படங்களுமே ஆபாசம் என்று எப்போது தடை விதித்தார்கள் என்று தெரியவில்லை...
/இறுதியில் இவ்வளவு தீர்மானமான கருத்துக்களுடன் கட்டுரையை நிறைவு செய்யும் வாஸந்தியின் பார்வை, ஏதோ ஒருபக்கம் நோக்கி எழுதப்பட்டிருப்பதாகவே கட்டுரையை வாசிக்கும்போது உணர முடிகிறது. /
உணர்ந்துகொண்டீர்கள் அல்லவா?? விட்டுத்தள்ளுங்கள்... அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை...
இந்தியாவில் ஒரு கும்பல், குறிப்பாக பார்ப்பன கும்பல்(கவனிக்க -ஊடகத்துறையில் இவர்கள் தான் மேலாதிக்கம் செய்கிறவர்கள்) இலங்கை தமிழர் பிரச்சனையில் குட்டையை குழப்பி விளையாடுவது மிகவும் பிடிக்கும். இங்கு இருக்கும் சாதாரண தமிழனை கண்டாலே வெறுப்படையும் இவர்கள் பக்கத்து நாட்டில் துன்புறும் தமிழனை கண்டு முதலை கண்ணீர் வடிப்பது வேடிக்கை.
மலை நாடர்!
"மறதி இயற்கை மனிதனுக்குக் கொடுத்த நல்ல மருந்தாம்"- அக்கட்டுரை படித்து மறந்தும் விட்டேன். சாத்தான் வேதமோதாது.எனக்கும் தமிழன் என்று சொல்ல விருப்பமாக இருக்கிறது. ஆனால் "சிலோனா?? என இன்னுமொரு கேள்வி வருதே???.
யோகன் பாரிஸ்
ஆட்கொல்லி விசத்தை தேனில் குழைத்துத் தடவுவது வாஸந்தியின் கைவந்த கலையென்பது அண்மையில் நிற்க நிழல் வேண்டும் என்ற அவரது நாவலைப் படித்த போதுதான் புரிந்தது ஏதோ இலங்கைத் தமிழர் நலனில் அக்கறையுள்ளவர் போன்ற புறத்தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இலகுவாக தனது கருத்துகளை விதைத்திருந்ததை வாசித்தபோது இவ்வாறானவர்கள் ஊடகத்துறையில் இருப்பதால் ஏற்படும் அபாயத்தை விளங்கிக் கொண்டேன்.
ஈழத்தமிழர் மீது மட்டுமல்ல தமிழ் நாட்டுத் தமிழர்கள்,திராவிடக் கட்சிகள் மீது அவர் கொண்டிருக்கும் வன்மத்தை தீராநதியில் எழுதும் தொடரில் கக்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டு சினிமா முழுவதுமே ஈழத்தில் தடை என்று புளுகுவதிலிருந்தே அவர் எங்கு குறிபார்த்து அடிக்கிறார் என்பது புரிந்திருக்கும்.
எஸ். கே ஐயா!
வணக்கம். முதலில் தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்பதிவில், புலிகள் என்ற இடத்தில், உங்களுக்குப் பிடித்தமான வேறொரு விடுதலை அமைப்பை வைத்து வாசித்துப்பாருங்கள். வாஸந்தியின் கருத்து மீது நான் சொல்லும் விமர்சனம் தெளிவாகப் புரியும்.
அடுத்த பதிவு நிச்சயம் உங்களுக்குப்பிடிக்கும் மறக்காமல் வாருங்கோ!
நன்றி!
இவ இந்தியா ரூடே இன் தமிழ் பதிப்புக்கு அண்மைக்காலம் வரை ஆசிரியராக இருந்தவ... இவவும் எலும்பு துண்டுக்கோ.. அல்லது இவவும் அவாள் பாஸை பேசிறவவா ...நாய் வாலை நிமிர்த்த முடியாது...
வாஸந்தியின் கருத்து ஒரு பேத்தல்.
பத்திரிக்கையில் ஆபாசம் இல்லை என்று தான் பத்திரிக்கை நடத்துபவர்/ஆசிரியர் சொல்லுவார். ( படிக்கிறவங்களுக்கு தெரியுதே ஆபாசம் என்ன செய்ய)
தமிழ் திரைப்படங்களில் ஆபாசம் இல்லை என்று அதை பார்ப்பவர்கள் எப்படி ஐயா சொல்லமுடியும். ( கண்ணை மூடிக்கிட்டு பார்த்தா வேணா சொல்லலாம்)
இலங்கை தமிழர்கள் சாரிசாரியாக என்று வாஸ்ந்தி சொல்லி இருந்தாலும் நீங்கள் பதிலில் 'இலங்கை தமிழர்' என்று சொல்லியிருக்கக்கூடாது 'ஈழ தமிழர்' என்று சொல்லி இருக்கனும். ஏனென்றால் கப்பலில் சாரி சாரியாக வருபவர்கள் 'ஈழ மக்கள்', இலங்கை மக்கள் அல்ல.
இலங்கை ஒரு நாடு ஈழம் வேறொரு நாடு அதை உங்களாலயே இன்னும் அழுத்தமா சொல்ல முடியவில்லையே. ம்
/பத்திரி-கையாளர்கள், கலைஞர்களின் பார்வை அதற்கு அப்பால் சென்று ஊடுருவ வேண்டும். மனித நேயம், மனித உரிமைக்கான உண்மைக் குரல் எப்போதும் சார்பற்றதாகவே இருக்கும். இருக்க வேண்டும்!
/
அவர் பேட்டி அவ்வாறு இல்லையே? என்ன செய்வது பத்திரிக்கை காரர் பேட்டி கொடுத்தால் சார்பற்ற தன்மை என்ற வார்த்தைகள் நிறைய இடங்களில் வர வேண்டும்
அப்படி வந்தா தான் பத்திரிக்கைகாரன் என்று விதி இருக்கிறதே. ஆகையால் வாஸந்தி ஒரு பத்திரிக்கைகாரர்.
நீங்கள் புலி ஆதரவாளர் என்பதால்
வாஸந்தியின் கருத்தை உங்களால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
அவ்வளவுதான்.
ஐயா சின்னக்குட்டியாரே உங்க மது
உரைஞர் பாலஅசிங்கத்தின் பேட்டி
உட்பட புலிகளின் செய்திகள் பலவும்
இந்த பார்ப்பனா விகடன் பத்திரிகையில்
தானே வந்திச்சுதுங்கோ அப்போ
அந்த நேரத்தில மட்டும் பார்ப்பனா
நாய் வாலநிமித்தி விட்டா செய்திகளும்
பேட்டிகளும் போட்டார்கள்.
ஈழபாரதி!
உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். ஒரு சிலரின் கருத்துக்காகக, நாம் தமிழகச் சகோதர்களை நிராகரிக்கக் கூடாது.நிச்சயமான உண்மை, ஆனாலும் தவெறனப்படும்போது, அதைச் சுட்டிக்காட்டத்தானே வேண்டும்.
நன்றி!
அனாநி!
நீங்கள் சொல்லிய கருத்துக்களில் பல உண்மைகள் தொக்கி நிற்கின்றன. என்ன செய்வது பெரும் நீர்சூழலுக்குள் அகப்பட்டது போன்றாகிவிட்டது எங்கள் வாழ்க்கை
நன்றி!
கப்பிடல்!
தங்கள் வருகைக்கும் , பதிவுக்கு நன்றி!
அருட்பெருங்கோ!
உண்மைதான். உணரமறுப்பவர்களிடம், உணர்த்துவது மிகக் கடினம்.
முதல் முறையாக என் தளத்துக்கு வந்திருக்கின்றீர்கள் என எண்ணுகின்றேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அனானி!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
//பிராபகரனின் நோக்கம் உன்னதமானது.
செயல்முறை..... கேள்விக்குரியது.
இதுதான் நான் சொல்வது.//
அதெப்படி நோக்கம் உன்னதமாகும்....அப்போ நம்ம காஸ்மீர பாகிஸ்தானுக்கும், ஹிமாசல சைனாவுக்கும் கொடுத்துடலாமா?
ஸ்கே,
பிரபாகரன் செய்வது/செய்தது எல்லாமே கேள்விக்குரியது...
//அந்த நேரத்தில மட்டும் பார்ப்பனா
நாய் வாலநிமித்தி விட்டா செய்திகளும்
பேட்டிகளும் போட்டார்கள்//
ஹிஹி.... நான நினைக்கிறன் சில சமயங்களில் அந்த பத்திரிகைகள் வியாபாரத்துக்காக சந்தர்ப்பவாதமாக தாமாகவே வாலை நிமிர்த்துவதாக பாவனை செய்துவி்ட்டு... மீண்டும் தாமாகவே சுருட்டிகொள்கின்றன...
வாஸந்தி தன் கொள்கையில் உறுதியாக இருக்கிறார். பாவம் அவருக்கு உலக அனுபவம் போதாது. நிறையக் கருத்துப் பிழைகள் கொண்ட அவரின் கருத்தையெல்லாம் இந்த நட்சத்திர வாரத்தில் எடுக்க வேண்டுமா?
அன்பு மலைநாடான்,
சில நாட்களாக ஊரில் இல்லை. பதிவுகளை படிக்க முடியவில்லை.
முதலில் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் எழுதிய இந்த வாஸந்தி விஷயத்தை நான் படித்தேன். அவர் எழுத்து பொதுவாகவே நடுநிலைமை போர்வையில் விஷம் கக்கும் எழுத்து.இவரை போல் பலர் இருக்கிறார்கள்.
யோகன்!
புரிந்துணர்வுகள் பலவழிகளிலும், ஏன்தமிழ்மணத்தாலும் கூட, ஏற்பட்டு வருகின்ற இந்தத் தருணங்களில், இப்படிப்பட்ட கருத்துக்கள் கவலை தருகின்றன.
//தமிழ்நாட்டு சினிமா முழுவதுமே ஈழத்தில் தடை என்று புளுகுவதிலிருந்தே அவர் எங்கு குறிபார்த்து அடிக்கிறார் என்பது புரிந்திருக்கும்//
ஈழநாதன்!
சமூகப் பொறுப்பிலுள்ளவர்களே இப்படிச் செய்வதுதான் சங்கடமாகவிருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சின்னக்குட்டி!
காலம் மாறும்என நம்புவோம். அப்போ இவர் கருத்துக்களும் கூட மாறலாம்.
வருகைக்கு நன்றி!
\\இலங்கை ஒரு நாடு ஈழம் வேறொரு நாடு அதை உங்களாலயே இன்னும் அழுத்தமா சொல்ல முடியவில்லையே. ம்\\
குறும்பன்!
தவறுதான். ஈழம் என்பதன் தனித்துவம் ஒருபோதும் மறக்கபட்ட முடியாதது என்பதில் எனக்கும் உடன்பாடே. அவசரத்தில் தவறிவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.
தங்கள் கருத்துக்கு நன்றி!
\\நீங்கள் புலி ஆதரவாளர் என்பதால்
வாஸந்தியின் கருத்தை உங்களால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
அவ்வளவுதான்\\
அனானி!
உங்களின் மகத்தான கண்டுபிடிப்புக்கு நன்றி.:))
முத்து தமிழினி!
அதுதானே பார்த்தேன் ஆளை இந்தப்பக்கம் காணேல்லையே என்று. பறவாயில்லை, அதுதான் வந்தீட்டிங்களே. ஆறுதலாகப் படித்துச் சொல்லுங்கள்.
வருகைக்கு நன்றி
\\அதெப்படி நோக்கம் உன்னதமாகும்....அப்போ நம்ம காஸ்மீர பாகிஸ்தானுக்கும், ஹிமாசல சைனாவுக்கும் கொடுத்துடலாமா?\\
Mr.anonymous,
thamizhan thannudaiya poorveega thamizh mannai athan meethu avanuku ulla urimayai vittu kodukalama?
thamizhan than thanmaanaththai vida mudiyuma?
than inaththuke azhivu varum podhu summa irukka mudiyumaa?
enn mahatmaa ghandhi pakistanai vittu koduththaar?
avar seythathum kelvikuriyathu thaane?
neer seyvathum thaan!
anonymous
///தமிழீழம் கிடைத்தால் இந்தியாவை விட மிஞ்சிவிடும் என்று இந்தியாவிற்குப் பொறாமை ஐயா.. பொறாமை ////
Nice Comedy....
Post a Comment