Monday, September 11, 2006

நட்சத்திர நல்வணக்கம்!


வணக்கமுன்னா வணக்கம்! இது வாசமுள்ள வணக்கம்!!
வணக்கமுன்னா வணக்கம்! இது வண்ணத்தமிழ் வணக்கம் !!


ரு நட்சத்திரத்தின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு, தமிழ்மணத்துள் காலடி பதித்தவன், இவ்வார நட்சத்திரமாகியுள்ளேன். மகிழ்வாயு(சற்றுப் பயமாகவும்)ள்ளது.

காலடி எடுத்து வைத்த கணங்களில், பின்னூட்டத்தைத் தமிழில் எழுதும் தகமை கூட இல்லாதிருந்தேன். முயற்சித்ததில், ஒருதினத்தில் வலைப்பதிவாளனாக அடியெடுக்க முடிந்தது. அதற்குப்பின் படிப்படியான உருவாக்கம். அதற்கான அத்திவாரம், என் ஆர்வம். ஒருநாளில் வந்ததல்ல இந்த ஆர்வம்.

ஏழு வயதில் வாசிப்பு ஆர்வம், ஒன்பது வயதில், எழுத்தார்வம், பன்னிரண்டு வயதில் நடிப்பார்வம், எனத்தொடர்ந்த ஆர்வங்கள் பலவாகி............... ஐரோப்பா வந்த பொழுதில் கணனியில் தமிழ் கண்டு, கண்கள் விரிந்து, விரும்பி அறிந்து, சுயமாகத் தெரிந்து கொண்டதின் தொடர்ச்சியெனக் கொள்ளலாம்.

எண்ணங்களில், எழுத்துக்களில், உயர்வுகள் காணாத சாதாரணமானவன். மிகமிகச் சாதாரணமானவன். என்னிடம் இருந்து உங்களுக்கிடைக்கக் கூடியவைகள் பற்றிப் பெரிதாக ஏதும் சொல்லவோ, எதிர்பார்ப்புண்டாக்கி, ஏமாற்றவோ எண்ணவில்லை நான்.

என் எழுத்துக்களில் அதிகமானவை, என் அனுபவ வெளிப்பாடுகளாவே இருக்கும். ஏனெனில் வாழ்க்கையை அங்கிருந்தே, அதிலிருந்தே, அறிந்து கொள்ள விரும்புகின்றேன். அதுபோன்றே என் எண்ணங்களில் சாதனையாளர்களாகத் தோன்றும், சராசரி மனிதர்கள் சிலரையும், இந்நாட்களில் உங்களோடு உறவாட எழுத்தால் அழைத்து வர எண்ணியுள்ளேன்.

எழுத்தில் எனக்கு ஆர்வமிருந்த போதும், எழுதுவதில் நான் படு சோம்பேறி.(பக்கம் பக்கமாக எழுதுபவர்ளைப் பார்த்து எப்போதும் ஆச்சரியப்படுவதுண்டு) ஆயினும் முடிந்தளவு முயற்சிக்கின்றேன் இவ்வாரத்தில். என் எழுத்துக்களைப் படித்துச் சொல்லுங்கள். என் எழுத்தால் மட்டுமல்லாது, உங்கள் கருத்துக்களாலும், பொலிவுற அமையட்டும் இவ்வாரம்.

தமிழ்மணத்தில் வலம் வருவதும் (ஒரு சில வேளைகள் தவிர்த்து) ஒரு நல்ல அனுபவமே. புதிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். பல புதிய விடயங்களையும் கற்றுக் கொள்ள முடிந்தது. இங்கு வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. எத்தனை அறிஞர்கள், எத்தனை வல்லுணர்கள், எத்தனை நுட்பவியலாளர்கள். ஏன்டா இவ்வளவு காலமும் இந்த களத்தைத் தவறவிட்டோம் எனக் கவலையுற்றதுமுண்டு.

நண்பர்களே!முண்டாசுக் கவிஞனின் நினைவுநாளில் தொடங்கும் இந்த வாரம், மேலும் சில முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட வாரமாக கருதுகின்றேன். முடிந்தவரைக்கும் சுவைபடத்தருவதற்கு முனைகின்றேன். முகஞ்சுழியாது, குறைகளைந்து, குணங்கொள்ள வேண்டுகின்றேன்.

இந்த அரியவாய்ப்பைத் தந்த தமிழ்மண நிர்வாகத்தினரையும், என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் அத்தனை உள்ளங்களையும் இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கின்றேன்.

தினமும் ஒரு பதிவு எழுத வேண்டுமென்பது நட்சத்திரவாரத்தின் பிரதான விதி. பார்ப்போம்....

தமிழ்மணநிர்வாகம் தெரிவுசெய்தவகையில் நட்சத்திரமாக நான் அறியப்பட்டபோதும், என்னைப் பொறுத்தவரையில் இவ்வாரத்தில் என்னுடன், என் எழுத்துக்களுடன் உறவாட வரும் நீங்கள் ஒவ்வொருவருமே, நட்சத்திரம்தான். வாழைகட்டி, மாலையிட்டு, மரியாதைகளுடன் வரவேற்றுக்கொள்கின்றேன். வாருங்கள்! கரங்கொடுங்கள்! சேர்ந்து சிறப்பித்து, மனம் மகிழ்வோம்.!

மகிழ்வோடு உங்களை வரவேற்க மற்றுமோர் இசை வணக்கம்

36 comments:

வெற்றி said...

அடடா!
மலைநாடான் நீங்களா இவ்வார நட்சத்திரம்?! தமிழ்மண வாசகர்களுக்கு இனியதொரு வாராமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
வாருங்கள். நல்ல பதிவுகளைத் தாருங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.

ஈழபாரதி said...

வணக்கம் மலைநாடான் உங்கள் அனுபவங்களை அறிந்து கொள்ள ஆவலுன் காத்திருக்கிறோம்.
நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.

சின்னக்குட்டி said...

வணக்கம் ...மலைநாடன்......நட்சத்திர வாழ்த்துக்கள்........ பல்முக ஆளுமையுடைய நீங்கள் கலக்கலான பதிவுகளை இந்த வாரம் வழங்குவீர்கள்... கொண்டாட்டம் தான்

துளசி கோபால் said...

அடட......... நீங்களா இந்த வார நட்சத்திரம்!

ஜமாய்ச்சுருவீங்க அதெல்லாம்.

தோரணவாயில் ஒரே அட்டகாசமா இருக்கு.

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு.
இது ரொம்பப் பிடிச்சிருக்கு.

வாழ்த்து(க்)கள்.

Udhayakumar said...

வாருங்கள் நட்சத்திரமே!!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நம்ம மலைநாடர்! நட்சத்திரமாகிட்டார்! விடிவெள்ளியாக ; பிரகாசியுங்கள்! வழமை போல் பின்னூட்டமிடுவேன்.எனக்கு அதுதான்; தெரியுமே! உங்கள் திரு விழாவில் ஏறுபடிகள் எதிர்பார்க்கிறேன்.
யோகன் பாரிஸ்

ENNAR said...

மலை நாடான்
நல்ல பாடல் நல்ல பதிப்பு வாழ்த்துகள்

நாமக்கல் சிபி said...

மலைநாடன் அவர்களே!

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்!

தோரணத்துடன் இசை வணக்கம்!
கலக்கல்!

நாமக்கல் சிபி said...

நட்சத்திரம் பிரகாசமாக ஜொலிக்க என் வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் மலைநாடன்.
எங்களுக்குப் படிக்க , உங்களிடம் நிறைய கருத்துகள் உண்டு.

தோரணம் மிக அழகாக இருக்கிறது.
ஆவலுடன் காத்திருக்கிறொம்.

Sivabalan said...

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!!

ILA (a) இளா said...

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்!

தோரணத்துடன் இசை வணக்கம்!
கலக்கல்!

SP.VR. SUBBIAH said...

வாருங்கள் நண்பரே வாருங்கள்!
தோரண வரவேற்பு பிரமாதம்!
அடியேன் சைவம்
விருந்தைப் பார்த்துப் போடுங்கள்!

பொன்ஸ்~~Poorna said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் மலைநாடன்,

இசையும் தோரணமும் கலக்கல்..

மருதநிழலடியிலும் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..

செல்வநாயகி said...

வாழ்த்துக்கள் மலைநாடான்.

மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரம் மலைநாடனுக்கு வாழ்த்துக்கள்.

சிறந்தப் படைப்புகளை அளித்து வெற்றியடைய வேண்டும்.

வாழ்த்துக்கள்.

Kanags said...

வாழ்த்துக்கள் இவ்வார நட்சத்திரமே! சுவிஸ் இலிருந்து உலகெங்கும் மின்னட்டும்!!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் வணக்கங்களுடன் மலைநாடர்

கானா பிரபா said...

ஆஹா, இந்தவார நட்சத்திரம் நம்ம ஆளா,
உங்கள் ஒவ்வொரு பதிவுமே நட்சத்திரப்பதிவுகள் தான் , கலக்குங்கள் ஐயா

மணியன் said...

வாழைத் தோரணத்துடனும் தமிழ்வணக்கத்துடனும் நட்சத்திர வாரத்தை துவக்கியிருக்கிறீர்கள் !! வாழ்த்துக்கள்!!

கதிர் said...

வாழ்த்துகள் மலைநாடான்!

சுவைமிகு வாரமாக இந்த வாரத்தை மாற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

G.Ragavan said...

மலைநாடன், உங்கள் பெயரைப் பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது ஒரு கன்னடப் பாடல். "மலை நாட ஹெண்ணா மை பன்னா" அதாவது "மலை நாட்டுப் பெண்ணா மெய் சிறப்பா" இது நேரடி மொழி பெயர்ப்பு. பீ.பி.ஸ்ரீநிவாசும் எஸ்.ஜானகியும் பாடியது.

நீங்கள் நட்சத்திரமானதிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் [GK] said...

மலைநாடன் அவர்களே ! வாருங்கள் ... வாழ்த்துக்கள்..!

குறிஞ்சிமலரின் வாசம் தமிழ்மண வாசமாக ஒருவாரம் இனி வீசட்டம் !

மலைநாடான் said...

வெற்றி!
உங்கள் ஆர்வத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள்.

ஈழபாரதி!
மிக்க நன்றி.

சின்னக்குட்டி!
உங்கள் நம்பிக்கையை வீணாக்காதிருக்க முயற்சிக்கின்றேன்.

துளசி அம்மா!
உங்கள் வருகையும், வாழ்த்துக்களும் எப்போதும் என்னை மகிழ்ச்சிப்படுத்துபவை.

இறையடியான் said...

வாழ்த்துக்கள் மலைநாடான் அவர்களே!
உங்களிடமிரூந்து இன்னும் சிற்ப்பாக எதிர்பர்க்கிறோம்.

அன்புடன்,
இறையடியான்

இறையடியான் said...

வாழ்த்துக்கள் மலைநாடான் அவர்களே!

மலைநாடான் said...

உதயகுமார், யோகன், என்னார், நாமக்கல் சிபி!

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தோரணம் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதென்றே நம்புகின்றேன். அதன் பொருளும் அதுதானே.

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் மலைநாடான்!!

மலைநாடான் said...

வெட்டிப்பயல், வள்ளி,சிவபாலன், இளா!

உங்களின் வருகைக்கும், அன்புக்கும், மிக்க நன்றிகள்.

மலைநாடான் said...

சுப்பையா, பொன்ஸ்!

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், நன்றி.

உங்களுடைய வேண்டுகோள்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

மலைநாடான் said...

செல்வநாயகி, மோல்ஸ், மஞ்சூர் ராசா !

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

மலைநாடான் said...

கனக்ஸ், குமரன், மணியன், பிரபா

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மலைநாடான் said...

தம்பி, ராகவன், கோவி. கண்ணனன்!

உங்கள் வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும், நன்றிகள்.

ராகவன்!
முடிந்தால் அந்தப்பாடலை தனி மடலில் தாருங்கனே்

Chandravathanaa said...

வாழ்த்துக்கள் மலைநாடான்.
உங்கள் வருகையே அமர்க்களமாக இருக்கிறது.

மலைநாடான் said...

இறையடியான், கப்பிப்பய !

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

மலைநாடான் said...

சந்திரவதனா!

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் மேலும் இவ்வாரத்தைச் சிறப்பிக்கும்.