ஆனால் வணிக நுகர்வுக்குக் கலாச்சார மாற்றமும், நில நிகழ்வின் துயரங்களும், எங்கள் இளையவர்களை அதிலிருந்து வெகுதூரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அவ்வாறு தொலைதூரம் சென்று , நம் தொன்மம் தொலைந்து போகாதிருக்கும் முயற்சியாக இந்தக் கதை சொல்லிகள் புறப்பட்டிருக்கின்றார்கள்.
இக் கதை சொல்லிகள் சொல்லும் கதைகள் எமக்குத் தெரிந்தவையாகவும் இருக்கலாம். ஏனெனில் அக் குழுமத்தின் முதல்நிலையாளனாகிய ஞானதாஸ் காசிநாதர் " எமது பண்பாட்டில் .கதைகள், வயற்காட்டிலும், வரம்புகளிலும், வடலி வழியவும், தெருவோரங்களிலும், மதவுகளிலும், சந்தி வழியவும் சொல்லப்பட்டது. நாங்கள் பள்ளிக்கூட கழிவறைக்குள், சிறுநீர் கழித்தபடி கூட கதைகளும் பகிடிகளும் சொன்னதுண்டு.. " எனக் குறிப்பிடுவதுபோல், எல்லா இடங்களிலும் நீக்கமற இருந்த எங்கள் கதைகளை மறந்து போனவர்களானோம்.
அவ்வாறு மறந்து போன கதைகளையும், கணினி விளையாட்டுக்களுக்குள் தங்களைத் தொலைத்துக் கொள்ளக் கூடிய இளைய தலைமுறையையும் மீட்டெடுத்து, விழியத்தின் வழியே இணையத்தில் கொண்டு வர முயல்கின்றார்கள் இக் கதை சொல்லிகள்.
No comments:
Post a Comment