Saturday, November 18, 2006

திரைக்குப் பின்னாலும், முன்னாலும்.

திரைப்படத்துறைசார்ந்த ஆர்வம் எப்படி வந்ததென்பதை பிறிதொரு சந்தர்ப்த்தில் சொல்கின்றேன். இங்கே சென்ற வாரத்தில் வெளிநாட்டுத்திரைப்படக் குழுவினரோடு சேர்ந்து, ஒரு சில காட்சிகளில் , பணியாற்றிய அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன்

அவர்களோடு பணியாற்றியபோது பெற்றுக் கொண்ட அனுபவத்தில் கண்டுகொண்ட சில உண்மைகள்.

தென்னிந்தியச் சினிமாவுலகம் தொழில்நுட்பத்தில் இவர்களுக்கிணையாக நிரம்பவே முன்னேற்றம் கண்டுள்ளது.


நம்மவர்கள் எங்கே கோட்டைவிட்டு விடுகின்றார்கள் என்றால், திரைக்கதை அமைப்பிலும், படத்தொகுப்பிலும் எனலாம். படத்தொகுப்புக்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் தரவுகளும், அக்கறையும் நிரம்பவே எனலாம்.


நடிகர்கள் பந்தா எதுவுமில்லாமல், வெகு இயல்பாக இருக்கின்றார்கள். சமயத்தில் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதே தெரிவதில்லை. துணைநடிகர்களுடன், அரட்டை அடித்தபடியோ, அல்லது படப்பிடிப்பைப் பார்வையிடும் மக்களுடனோ கலந்துவிடுகின்றார்கள்.

ஒரு திரைப்படத்தில் இருக்கக்கூடிய அதிக மனிதஉழைப்பை இங்கேயும் காணலாம்.

இங்கும் இயக்குநர், சமயத்தில் படப்பிடிப்புக்காக தன் குளிர்தாங்கு அங்கியைக் கூடத் தாரைவார்த்தது விட்டுப் பரிதாபமாகத்தான் நிற்கின்றார்.

உதவி இயக்குநர்களின் நிலை இங்கு கேவலமாக இல்லாவிடினும், பரபரப்ப மிக்கதாவே இருக்கிறது. எல்லாவகையான தேவைகளையும் ஈடுகொடுக்கின்றார்கள். சமயத்துக்கு துணை நடிகர்களாகவும் தலைகாட்டுகின்றார்கள். அந்தவகையில் அடியேனுக்கும் வெளிநாட்டுத்திரைப் படத்தில் தலைகாட்டும் வாய்ப்புக்கிடைத்தது. (எங்கே படத்தைக்காணவில்லை பிரபா சத்தமிடுவது கேட்கின்றது. சற்றுப் பொறுங்கள். படத்தொகுப்பாளரின் கத்தரிப்புக்குள் காணாமல் போகாது தப்பிப்பிழைத்து திரைக்கு வந்தால், அறிவிக்கின்றேன்)எவ்வளவுதான் கடுமையான பணியாக இருந்தபோதும், இந்தக் கலைஞர் களிடத்தில் இழையோடியிருந்த ஒருவித நட்புணர்வு உற்சாகம் தருவதாக இருந்தது.


ஏற்ற இறக்கம். உயர்வு தாழ்வு பார்க்காத, அந்த நட்புறவுக்காகவும், மேலும் நல்ல பலவிடயங்களை அறிந்து கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் ஒருபடத்திலேனும், முற்று முழுவதுமாக இணைந்து பணியாற்றவேண்டுமென எண்ணியுள்ளேன்.

17 comments:

Anonymous said...

vanakkam.naan ungal pahuthikku puthumugam.aayinum arimugamanavan.ennaiponravanin kanavaga iruntha valaipinnal nanavaga enkannmun inru valaiyaai ertkanave pinnapatullathu.,em thamil annaikku thaangum valaiyai kaatchi alithathu ennakku poorippai irukkinrathu.iv valaipinnalai alahaha koerkka ungal anubavangal valai noolaaga kai kodukkinrathu.thodarum valaipinnalil ennajum thaankikkollungal.naan ungalukku paarama irukka mmaten.uramaga irukinren.pathil valajai parakka vidungal.patri pidikkinren.

மலைநாடான் said...

நண்பரே!

நீங்கள் யாரென்று என்னால் ஊகிக்க முடியவில்லை. உங்கள் கருத்துக்களை புரிந்து கொள்ளவும் சிரமமாயிருக்கிறது. தமிழில் எழுதலாமே

கானா பிரபா said...

தங்கள் திரைப்படத்துறை அறிமுகப் பதிவுக்கு நன்றி, நான் எதிர்பார்ப்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள், காத்திருக்கிறேன்:-)

Anonymous said...

மலை நாடர்!
படம் வரும் போது சொல்லுங்கோ!!! "நம்ம கூட்டாளி நடிச்சதென "கொலரைத் " தூக்கி விட்டு நான் பந்தாவுடன் சொல்ல!!
யோகன் பாரிஸ்

சயந்தன் said...

http://sayanthan.blogspot.com/2006/11/blog-post_18.html
இந்த இணைபஇபை பாருங்க.. ஒரு மாதிரி நான் இயக்க போற படத்துக்கு உதவி இயக்குனர் கிடைத்து விட்டார். உங்களைதான் சொல்றன்..

Anonymous said...

கலக்கறீங்க மலைநாடன்.. உங்கள் திரைப்படத் துறைப் பயணம் இனிதே தொடரட்டும் :)

சின்னக்குட்டி said...

மலைநாடர் வாழ்த்துக்கள்... உங்கள் திரைபட துறை பற்றிய செய்திகளை கேட்க சந்தோசமாயுள்ளது...

யோகன் சொன்ன..மாதிரி என்ன படம் என்று சொன்னால் நாமளும் கொலரை இழுத்து விடலாமல்லவா.....

85 ஆண்டு பகுதியில். ஜெர்மனியில். ஆங்கில பட சூட்டிங்கில் என்னை நடிக்க கூப்பிட்டவங்கள்...

ஹிஹி.. பிறகு தான் விளங்கிச்சு.... அந்த கூட்டத்தோடை கூட்டமாக நிக்கதான் கயர் பண்ணி கூட்டியண்டு போனவங்கள்... என்று...

மலைநாடான் said...

பிரபா!

எனக்குத் தெரியுந்தானே நீங்கள் என்னபோடு போடுவீங்களென்று.:))

//நம்ம கூட்டாளி நடிச்சதென "கொலரைத் " தூக்கி விட்டு நான் பந்தாவுடன் சொல்ல//

யோகன்!

திரும்பவும் வடிவா வாசித்துப்பாருங்கோ, தலை காட்டினது என்றுதான் எழுதியிருக்கின்றேன்...:))

மலைநாடான் said...

//இந்த இணைபஇபை பாருங்க.. ஒரு மாதிரி நான் இயக்க போற படத்துக்கு உதவி இயக்குனர் கிடைத்து விட்டார். உங்களைதான் சொல்றன்.. //

சயந்தன்!
ஏதோ திட்டத்தோடதான் இருக்கிறீங்கள் என்பது தெரியுது. பார்ப்போம். ஆனால்... வேண்டாம் பிறகு கதைப்பம்:)

Anonymous said...

நீங்க படப்பிடிப்பின் போது கமெரா திரைக்கு பின்னால அல்லது முன்னாலயா நின்றீர்கள்?

dont mistaken me.
just for fun i asked in comparison with u r heading.

my best wishes for u to see u on the film

மலைநாடான் said...

பொன்ஸ்!

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தாயீ :))

என் மகனின் தோழி ஒருத்திதான் இந்தப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர். அவளது தந்தைதான இயக்குநர். தாய்தான் கதாசிரியர். ஒரு குடும்பமே ஒன்றுபட்டு ஒரு துறையில் இயக்குவதன் மகிழ்ச்சி எத்தகையது என்பதைக்கூட இதில் காணமுடிந்ததும் மேலதிகஅனுபவமே.

தங்கள் வருகைக்கு நன்றி.

மலைநாடான் said...

//அந்த கூட்டத்தோடை கூட்டமாக நிக்கதான் //

சின்னக்குட்டி!

இங்கேயும் அதுதான். ஆனால் இத்துறைசார் பலவிடயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக இருந்தது.

மலைநாடான் said...

நவன்!

இந்தச் சின்னவயசுக்காறங்களின்ர கேள்விக்குள்ளேயே ஏதாவது சூட்சுமம் இருக்கும். ஆனால் நீங்களே சொல்லி விட்டீர்கள் சும்மாதானென்று.

அதுதான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே, கமெராவுக்கு முன்னாலும், பின்னாலும் என்று.

muunaa said...

மலைநாடான் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.

மொனிற்றருக்கு முன்னால் இருப்பவரது நிறம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அது நீங்கள் இல்லைத் தானே?

Anonymous said...

மலை நாடர்!
நம்ம வாத்தியார் கூட ஆரம்பத்தில்; தலைதான் காட்டினவர்; வேல் பிடித்துக் கொண்டு வாயில் காப்போனாக நின்றாராம். அது கூட 2 நொடிகள்; என "நான் ஏன் பிறந்தேன்" தொடரில் படித்த ஞாபகம்; உங்கள் தலைகாட்டலைச் சரியாகப் படித்தேன்.
அதே எனக்குப் பெருமைதான்!!!காரணம் சுவிசில் எத்தனையோ வேறு தமிழர்களும் இருக்கிறார்கள்; ஆனால் நீங்கள் தானே!!! தலையாவது காட்டியுள்ளீர்கள்..;
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

//மொனிற்றருக்கு முன்னால் இருப்பவரது நிறம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அது நீங்கள் இல்லைத் தானே? //

மூனா!

அடடா. நீங்களா? ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் ஓவியர் ஓவியர்தான் என்பதை நிரூபித்துவிட்டீர்களே?.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்நபர் நானில்லை. ஆனால் எங்கள் நிறம்தான். ஆபிரிக்க வம்சாவழிவந்த சுவிஸ் பிரஜை. அவர்தான் படத்தின் இயக்குநர். என் மகனின் தோழி ஒருத்தியின் தந்தை. மிகநல்ல மனிதர்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மலைநாடான் said...

சுவிசில் எத்தனையோ வேறு தமிழர்களும் இருக்கிறார்கள்; ஆனால் நீங்கள் தானே!!! தலையாவது காட்டியுள்ளீர்கள்..;

யோகன்!
மிகத்தவறான அபிப்பிராயம். இத்துறைசார் ஆர்வமிகு என் நண்பர்கள் சிலர் ஏற்கனவே சுவிஸ் படங்களில் நடித்துள்ளார்கள். ஒரு நண்பர் முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். அதைவிடவும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்திலும் என் நண்பர்கள் சிலர், சுவிற்சர்லாந்தில் நடந்த படப்பிடிப்பில் நடித்திருந்தனர். ஆனால் அக்காட்சி திரைப்படத்தில் வெட்டப்பட்டு மிகச்சிறிய பகுதியே வருகிறது.