Friday, November 02, 2007

தமிழ்செல்வன் மறைவு குறித்து - சுவிஸ் வானொலி


தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் துறைச் செயலர் பிரிகேடியர்: சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து, சர்வதேச ஊடகங்களில் செய்திகளும், நோக்குகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. சுவிஸ் இத்தாலிய மொழிக்கான அரசுசார் வானொலி Rete Uno இன்று மதியம் வழங்கிய செய்தியில் அன்னாரது மறைவு குறித்து, முக்கியத்துவம் வழங்கி வெளியிட்ட செய்தித் தொகுப்பில்:
சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சில், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் ஏனைய ஐந்து போராளிகளுடன் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, உலகெங்கும் வாழும் தமது மக்களுக்கு அறியத் தந்துள்ளது. இதனை சிறிலங்கா அரசும் உறுதிசெய்துள்ளது.
தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் கோரிக்ககைகளை மிக நிதானமாக வெளிப்படுத்தியவர் தமிழ்ச்செல்வன். கடந்த வருடம் தோல்வியில் முடிந்த ஜெனிவாப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
சராசரி மக்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர், அதன்மூலம் அவர்களது குறைகளை, தேவைகளை, பேச்சரங்குகளில் கொணர்ந்தவரென, தமிழ்மக்களினால் பாராட்டப்பட்டவர் எனச் சொல்லப்படும், இவரது மறைவு குறித்து பாதுகாப்புத் துறைசார்ந்து சிறிலங்காஜனாதிபதியின் சகோதரர் கருத்துக் கூறுகையில், " இவ்விதம் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒவ்வொருத்தராக நிச்சயம் அழிக்கப்படுவார்கள் " எனத்தெரிவித்துள்ளார்.
சமாதான காலத்தில் சுமார் 5000 பேரளவில் கொல்லப்பட்டிருக்கும் சிறிலங்காவில் , இதன்பின்னான சமாதான நடவடிக்கைகள் கேள்விக்குரியதாகவும், நம்பிக்கையற்தாகவும் காணப்படுகிறது.
வானொலிச் செய்தியின் மூலவடிவம்:


Rete uno News




அரசியற்துறைச் செயலர் பிரிடிகேயர்: சு.ப.தமிழச் செல்வன் அவர்களுக்கும், ஏனைய போராளிகளுக்கும் எமது அஞ்சலிகள்.

7 comments:

Anonymous said...

மலேசியா வாழ் அணைத்து தமிழர்களின் சார்பிலும் எனது கண்ணீர் அஞ்சலியை பிரிகேடியர் தமிழ்ச்செல்வனிற்கு அவர்களிற்கு தெரிவித்துகொள்கின்றேன்! அதிகமான பூர்வீக மலேசிய தமிழ் மக்களிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் தமிழ்ச்செல்வன் நன்கு பரீச்ச்யமானவர்!அவருடைய இறப்பு மலேசிய தமிழ் மக்களையும் அதிகம் பாதித்துள்ளது! இங்கு பலர் என்னிடமும் இரங்கல்களை தெரிவித்துக்கொண்டனர்! உலகெங்கும் வாழ் அனைத்து தமிழர்களின் புன்னகையும் புதைந்து போனது உண்மை! தமிழ் பெற்றெடுத்த மற்றொரு செல்வம்! இன்று மரணத்தின் பிடியில்! கலங்கும் இதயங்களில் ஒருவனாக!

பொன்ஸ்~~Poorna said...

தமிழ்ச்செல்வன் இறந்துட்டாரா?! நம்பவே முடியலை.. !!!

என்னுடைய அஞ்சலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.... :(

Anonymous said...

‘அழிந்தே போ
விமானங்களையும் அழித்து’
என ஏவியவர்களும்
அழிந்தார்கள்
விமானத்தால்
பாசிசம்
ஒரு நீர்க்குமிழி

- செ.குணரத்தினம்

Anonymous said...

//‘அழிந்தே போ
விமானங்களையும் அழித்து’
என ஏவியவர்களும்
அழிந்தார்கள்
விமானத்தால்
பாசிசம்
ஒரு நீர்க்குமிழி

- செ.குணரத்தினம்//

இனி செ.குணரத்தினம் போன்ற பச்சோந்திகளும் அழிந்தால் எல்லாம் சரிப்படும்.

Anonymous said...

அஞ்சலிகளைப் பதிவு செய்கின்றேன்

- அநாமிகன்

மலைநாடான் said...

பகிர்வுகொண்ட அனைவர்க்கும் நன்றி

Anonymous said...

செ.குணரத்தினம்,

உங்களைப் போன்ற பச்சோந்திகளின் அழிவு நெருங்கி வருகிறது. நாளை சுதந்திர ஈழம் உதயமாகும் போது நீங்களும் செத்துப்போன குணரத்தினம் என்றே பேசப்படுவீர்கள். உயிருடன் இருக்கும்போதே!