Saturday, October 20, 2007

ஐரோப்பிய அரசியலில், அடிவைக்கும் தமிழிச்சி

"மனித உரிமை மீறல்கள் எங்கு நடைபெற்றாலும் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு. அதிலும் முக்கியமாக எமது இரத்த உறவுகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம் எனக்குண்டு.இது இயல்பானது. ஆனால் இது விளம்பரங்கள் இல்லாமல் செய்யப்படும் போது அதன் செயற்திறன்(Efficiency) மிகவும் உயர்வாக இருக்கும்" இப்படிச் சொல்கின்றார், ஏதுமற்ற ஏதிலிகளாக, சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, வந்த நாட்டில் வசவுகளுக்கும், வடுக்களுக்குள்ளும், வாழ்ந்து கொண்டிருந்த போதிலும், சுவிற்சர்லாந்தின் தேசிய அரசியலுக்குள், தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஈழத்தின் இளைய தலைமுறைப் பெண் செல்வி: சுஜிதா வைரமுத்து.

21.102007 ல் சுவிற்சர்லாந்தின் பாராளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் சோசலிசக்கட்சியின் சார்பில், தேசிய பாராளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் சுஜிதா, " முரசம்" இணைய சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியையும், ஏனையோரது கருத்துக்களையும் இங்கே , இங்கே , இங்கே காணலாம்.

தட்டுக்கழுவிகள் என்றும், தகமையற்ற அகதிகளென்றும், எள்ளப்படுகின்ற ஒரு சமுகத்தின் இளையதலைமுறைப் பெண்ணொருத்தியின், அந்நியதேசத்து அரசியல் பிரவேசம் அசாத்தியமானதுதான். அது சாத்தியமாகட்டும் என வாழ்த்துரைப்போம்.



செய்திகள், படங்களுகாக: முரசத்துக்கு நன்றி.

9 comments:

கானா பிரபா said...

பதிவுக்கு மிக்க நன்றி அண்ணை

இண்டைக்கு ஆயுத பூசையாம் ;)

Anonymous said...

இன்றைய சிறந்த உள்குத்துப் பதிவாக இப்பாடல் தேர்ந்தெடுக்கப்படுகின்றது.

கொண்டோடி said...

'விளம்பரம் இல்லாமல் செய்ய வேணும்' எண்ட உடன நானும் அதிர்ந்து போனன். பிறகு பாத்தா உது வேற தமிழிச்சி. நீங்களும் வித்தியாசம் காட்ட 'ழி' பாவிச்சிருக்கிறியள்.

theevu said...

ஐரோப்பிய அரசியலில், அடிவாங்கும் தமிழிச்சி என்று அவசரமாக தலைப்பை வாசித்துவிட்டால் இது வேறு

ஆயுதபூசை சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். :)

சயந்தன் said...

வெல்லட்டும்.
அப்பத்தானே நானும் பிரான்ஸ் மேயரைத் தெரியும் பரீஸ் பாதரைத் தெரியும் எண்டு சொல்லுற மாதிரி சுவிஸ் பொலிட்டிசியனைத் தெரியும் எனச் சொல்லலாம்.

(உண்மையாவே தெரியும். :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எங்கள் பிள்ளைகள் டொக்டர்,இஞ்சினியர் என்றில்லாமல்
கட்டாயம் அரசியலிலுள்ளும் வரவேண்டும்.
Rama YADE : secrétaire d’Etat auprès du ministre des Affaires étrangères et européennes, chargée des Affaires étrangères et des Droits de l’Homme
Rama Yade est née en 1976 au Sénégal.(1976 ல் செனகலில் பிறந்த இந்த ரமா யாட் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்- அத்துடன் மனித உரிமை விவகாரப் பொறுப்பாளர்.)
இந்தச் செனகல் பெண் பிரன்சு அரசியலில் முக்கிய புள்ளி.
நம் பிள்ளைகளாலும் முடியும்>

சோமி said...

சயந்தன் & மலைநாடன் அந்த பிள்ளையை எனக்கும் அறிமுகம் செய்யுங்கோவன்.
எனக்கும் அரசியலில் நுழைய ஆசை தாய்நாட்டில் மண்டடயில போட்டுவாங்கள்.இப்ப இருகிற நாட்டில வாய்ப்பே இல்லை
நான் இப்ப என்ன பண்ண???????

அந்த பிள்லைக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

சரி இவங்களுக்கு ஓட்டு கிடைச்சுதா?

மலைநாடான் said...

பிரபா

ஓமோம் ஆயுதபூசை முடிஞ்சு வாழைவெட்டும் முடிஞ்சுது :)

அனானி

இதே வசனத்தைப் பெயரிலி பதிவிலும் பார்த்தேனே?

கொண்டோடி

அட வித்தியாசத்தைக் கண்டு பிடிச்சிட்டீரே. கொண்டோடியா கொக்கா..:)

தீவு

எதிலையும் அவசரப்படக் கூடாது பாருங்கோ.

அதென்ன ஆளாளுக்கு ஆயுதபூசையை சொல்லிக்கொண்டு வந்திருக்கிறயள். பூசை எல்லாம் நல்லா முடிஞ்சுதுதென்டு அறிஞ்சிருப்பியள்தானே?

சயந்தன்


நீரும் பிரச்சாரக் கூட்டத்தில நிண்டதா அறிஞ்சன். நல்லது நடக்கட்டும்.:)

யோகன்

சுவிற்சர்லாந்தில் Claude Janiak என்பவரும் இந்த நாட்டிற்கு அகதியாக வந்த ஒரு குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையில் வந்தவர்தான். இவர் இங்குள்ள அரசியலில் சிறப்பான பங்கு வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோமி

உமக்கென்டொரு இடம் இல்லாமலா போய்விடும்.:)