புத்தாண்டில் ஒரு புதிய முயற்சி. புதிய முயற்சி என்று சொல்லலாமோ எனத் தெரியவில்லை. ஆனாலும் எடுத்துக்கொண்ட விடயத்தினடிப்படையில் புதிய முயற்சி எனச் சொல்கின்றேன். புதிர் போதும்...
..விடயம் இதுதான். ஐரோப்பாவிலிருந்து 24 மணிநேர தமிழ்ஒலிபரப்புச் சேவையினை வழங்கிவரும், ஐரோப்பியத் தமிழ் வானொலி யில், கானம் கலைக்கூடத்தின் தயாரிப்பில், '' இணையத்தில் இன்பத்தமிழ் '' எனும் வாரந்தர நிகழ்ச்சியொன்றைத் தயாரித்து வழங்கத் தொடங்கியுள்ளேன்.
பிரதி ஞாயிறு தோறும் ஐரோப்பிய நேரம் மாலை 19.30 மணிக்கு, இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இவ்வொலிபரப்பினை செய்மதியூடாக ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், பண்பலை வரிசைகளில், கனடாவில் ரொறன்ரொவிலும், மொன்றியலிலும், இணையவழியாக உலகம் முழுவதிலும் இவ்வொலிபரப்பினைக் கேட்கலாம்.
இந்நிகழ்ச்சியில், இணையப்பரப்பில் தமிழ்கூறு நல்லுலகம் சார்ந்த படைப்பாளர்கள், பதிவாளர்கள் பலரதும் , நல்ல படைப்புக்களை, எழுத்துக்களை, ஒலிவடிவமாக்கி வான்பரப்பில் தவழவிட முனைகின்றேன்.
அந்த வகையில் தமிழ்மணத்தில் வலைப்பதியும், சகநண்பர்கள் சிலரது படைப்புக்களை நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்துள்ளார்கள். மேலும் சிலரிடம் கேட்கவுள்ளேன். அவ்வப்போது நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் தாங்கி வரும் படைப்புக்களை இனைத்துக்கொள்ள எண்ணியுள்ளேன். அத்தருணங்களில் நிச்சயம் படைப்புக்களைப் பதிவு செய்த நண்பர்களிடத்தில் தொடர்புகொண்டு அனுமதி பெற்றுக் கொள்வேன்.
இந்நிகழ்ச்சி மூலம், வலைப்பதிவுலகுக்கும் அப்பால் உள்ள தமிழ்மக்களிடத்தில், இணையப்பதிவுகளில் உலாவரும் சிறப்பான கருத்துக்களை கொண்டு செல்லலாம். நிகழ்சிகளின்போது வலைப்பதிவுகள் பற்றித் தெரியப்படுத்துவதன் மூலம், மேலும் பல புதியவர்கள் வலைப்பதிவுகள் பற்றி அறியவும், பதியவும், கூடும் என்றும் எண்ணுகின்றேன்.
முதலாவது நிகழ்ச்சி இன்று 21.01.07 ஞாயிறு மாலை ஒலிபரப்பானது. சென்ற வருடத்தில் இங்கே நான் பதிவு செய்த ஒரு பாடல்பதிவுடனும், நண்பர் வசந்தனின் ஒரு குரற்பதிவுடனும், இந்த முதலாவது நிகழ்ச்சி அமைந்தது. முதலாவது நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய குறைகள் சிலவற்றுடன், ஒலிபரப் பான அந்நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை கீழேயுள்ள செயலியில், கேட்கலாம்.
நண்பர்களே! ஒலிப்பதிவினைக் கேட்டு, உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்கள் நிகழ்ச்சியை மேலும் செழுமைப்படுத்துமென்று நம்புகின்றேன்... செய்வீர்களா?
Inpaththamil 1.wma |
17 comments:
முதலாவது "வாழ்க" வேறு யாரும் இடமுன்னால்...
மலைநாடான்,
வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி. வாழ்த்து மலைநாடன்.
.....
/கனடாவிலும், மொன்றியலிலும்/
கனடாவில் மொன்றியலிலும்... என்று வந்திருக்கவேண்டுமா?
வாழ்த்துக்கள் மலைநாடான்
என்னுடைய வாழ்த்தும் பாராட்டும்.
தற்போது எதுவும் கேட்க முடியாத நிலை.
பின்பு கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.
நல்ல மிக்சிங்கோடு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். பித்துக்குளியாரையும் போட்டுவிட்டீர்கள் ;-)
வசந்தனுக்கு எப்பவும் பிறேக் பிரச்சனைன் தான், ம் என்ன செய்வது.
all the best
zas/-
வாழ்த்துக்கள் மலைநாடான்
வாழ்த்துக்கள் மலைநாடன்
பெயரிலி!
முதலில் வந்து வாழ்த்தியிருக்கின்றீர்கள். மகிழ்ச்சி.
வெற்றி!
வாழ்த்துக்களுக்கு நன்றி.
மலைநாடர்!
நேரம்!! ஏன் இல்லை என்பது புரிகிறது. பாராட்டும் வாழ்த்துக்களும். புதுவருடம் புது அவதாரம்..
என் அபிப்பிராயம் உங்கள் விபரிப்பில் மிகச் சிறு வேகம்(தவறாகப் புரிய வேண்டாம்-அடுத்தவர்கள் அபிப்பிராயத்தையும் கேட்கவும்); பாடல் கட்டாயம் சேர்க்கவும். ஆரம்பப் பாடலே பித்துக்குளியார் மிகப் பொருத்தம். வசந்தனின் உரையாடலை என்னால் மிக உயர் சத்தத்துக்கு வைத்தும் தெளிவாகப் புரிய முடியவில்லை. தொலைபேசிப் பதிவா??அல்லது எனக்கு மாத்திரம் தான் இச் சிக்கலா??
எனினும் வீட்டிலும் முயல்கிறேன். வானொலி இல்லை. இணையத்தில் தான்.
யோகன் பாரிஸ்
நல்லமுயற்சி தொடருங்கள்! ஒலிப்பதிவை கெட்டேன்.
டி.ஜே!
வாழ்த்துக்கும், தவறைச்சுட்டியமைக்கும், நன்றி. திருத்தம் செய்துவிட்டேன்.
இ.கொத்தனார்!
வாழ்த்துக்கு நன்றி.
வசந்தன்!
வாழத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
பிரபா!
நீங்களும் ஒரு ஒலிபரப்பாளன் என்ற வகையில், உங்கள் வாழ்த்துக்கள்
அனானி நண்பரே!
வாழ்த்துக்களுக்கு நன்றி.
செல்வநாயகி!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
யோகன்!
முதலில் தாமதமான பதிலளிப்புக்கு மன்னிக்கவும்.
//புதுவருடம் புது அவதாரம்..//
புது அவதாரம் என்று சொல்வதற்கில்லை. புது நிகழ்ச்சி அவ்வளவே.
//என் அபிப்பிராயம் உங்கள் விபரிப்பில் மிகச் சிறு வேகம்(தவறாகப் புரிய வேண்டாம்-அடுத்தவர்கள் அபிப்பிராயத்தையும் கேட்கவும்);//
நீங்கள் கூறியவற்றில் தவறாக நினைக்க என்ன உண்டு? தனி மடலில் இன்னுமொரு நண்பரும் இதே கருத்தைச் சொல்லியுள்ளார். பார்ப்போம்.
//பாடல் கட்டாயம் சேர்க்கவும்.//
தெரிவு செய்த பாடல்களை மட்டும் சேர்ப்பதாக எண்ணம்.
//ஆரம்பப் பாடலே பித்துக்குளியார் மிகப் பொருத்தம். //
பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது.
//வசந்தனின் உரையாடலை என்னால் மிக உயர் சத்தத்துக்கு வைத்தும் தெளிவாகப் புரிய முடியவில்லை. தொலைபேசிப் பதிவா?//
வசந்தனுடைய பதிவிலிருந்து எடுத்த ஒலிப்பதிவுதான் அது. ஏற்கனவே பதிவு செய்த போதே அந்தத் தவறு வந்திருக்கலாம்.
தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்!
மேலே சொல்லப்பட்டதுதான், இருந்தாலும்...
வசந்தனின் குரற்சொருகல் தெளிவில்லாமலிருந்தது. பொதுவாகவே இன்னும் கொஞ்சம் அதிக ஒலியளவில் இருந்திருக்கலாம். பித்துக்குளியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
சுந்தரவடிவேல்!
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்கநன்றிகள். இனிவரும் காலங்களில், நீங்கள் சுட்டிய தவறினைக் கவனத்திற்கொண்டு, செயற்பட முனைகின்றேன்.
Post a Comment