Monday, August 14, 2006

எரியும் கொள்ளி எடுத்து.....


14.08.06 திங்கள் (இன்று) காலையில், வன்னிப்பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவுக்கு அண்மையில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில், சிறிலங்கா வான்படைகள் நடத்திய கோரத்தாக்குதலில் 60 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். அண்மைக்காலமாக, யுத்த நிறுத்த உடன்பாடு இன்னமும் செயற்பாட்டிலுள்ளது, எனச் சொல்லிக் கொண்டு தமிழர்கள் மீது தொடர்ச்சியாக பல வழிகளிலும் தாக்குதல் தொடுப்பதன் மூலம் அப்பாவித்தமிழர்கள் பலரைக் கொன்றுள்ளது. அந்த வரிசையில் இன்று நடந்துள்ளது மிகக்கொடூரமானதும், மிலேச்சத்தனமானதுமாகும். இந்த அநாகரிகச் செயலினை வன்மையாகக் கண்டிப்பதுடன், இக்கோரச் சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரினதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து அஞ்சலிக்கின்றோம்.


சிறிலங்கா அரசின், பாடசாலை மாணவர்கள் மீதான தாக்குதல் இதுவொன்றும் முதல் தடவையல்ல. இருப்பினும் இம்முறை நடந்திருக்கும் இத்தாக்குதல் மூலம், சிறிலங்காஅரசு, எரியும் கொள்ளி எடுத்து முதுகு சொறிகிறது என்று சொல்லலாம்.

2 comments:

சின்னக்குட்டி said...

//சிறிலங்காஅரசு, எரியும் கொள்ளி எடுத்து முதுகு சொறிகிறது என்று சொல்லலாம்//

முற்றிலும் உண்மை ...மலைநாடன்

கானா பிரபா said...

காலமும் களமும் பதில்சொல்லும் இவர்களுக்கு