சென்ற வார இறுதி முதல், இவ்வார இறுதிவரை, வெளியூர் வாசம். இந்தக் காலப்பகுதியில் கண்டுணர்ந்த அநாகரீகத்தின் எச்சம் பற்றிப் பேச விருப்பம். ஆனால் இன்றல்ல.. மனங்களைத்த தருணமாகவிருக்கிறது. மறு இடுகையில் அது பற்றிப் பேசலாம். அதற்கு முன், நிறைவான ஒன்றுபற்றி இன்று. ஆக இது அடுத்த இடுகைக்கான ஒரு முன்.... அவ்வளவே. :)
பூப்பெய்தும் காலம்.
இந்தத் தலைப்பு யோசிக்கப்பட்டபோதே, இதன் எதிர்வுகள் பற்றியும் சிந்திக்கப்பட்டது. ஆனாலும் நிறைவில் அதுவே பொருந்தியுள்ளது.
ஆம், சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ் நீள் திரையோவியம், " பூப்பெய்தும் காலம்" திரையிடலுக்குத் தயாராகியுள்ளது.
புகலிட வாழ்வியலில், தடைகள் பல தாண்டி, வெற்றிச்சிகர முகடுகள் தொடும், வாலிபக்கதைகள் பல. அதில் ஒரு கதையிது. சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்களின் கொதிநிலை வாழ்வின் பிம்பமாக, ராப், ஹிப்ஹொப், இசைவழியிணைந்து திரை வழி விரிகிறது கதை.
சுமார், ஒரு மணித்தியாலம், முப்பது நிமிடங்கள் வரையில், திரையில் காட்சியாகும் இத்திரையோவியத்தில், சுவிற்சர்லாந்தின் இளந்தலைமுறைக் கலைஞர்கள் பலரும், வண்ணம் சேர்த்துள்ளார்கள். இசையும் வாழ்வுமாக வரும் கதையினை ஏ.ஜி. யோகராஜா எழுத, எஸ். இரமணன் நெறியாள்கை செய்ய, ஈழத்துத் தமிழ்திரையுலகப் பெருமைமிகு கலைஞர்களான, மூத்த கலைஞர் திரு.இரகுநாதன் அவர்கள் முக்கிய பாத்திரமொன்றிலும், சிறந்த நெறியாளராக தன் படைப்புக்களினூடு நிறுவிய திரு.கா.ஞானதாஸ் முதன்மை படைப்பு நெறியாளராகவும், பங்குகொண்டு அணிசேர்த்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசையமைப்பு, நடிப்பு, மற்றும் அனைத்துப் பகுப்புக்களிலும், சுவிஸ்வாழ் இளையதலைமுறைக்கலைஞர்கள் பங்குகொள்ள, "பூப்பெய்தும் காலம்" திரையோவியத்தை, சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழியில் முதலாவது நீள்திரையோவியம் எனும் சிறப்போடு ஏப்ரல் மாதம் 5ந்திகதி, காலை.10.30 மணிக்கு, Bern, KINO ABC, திரையரங்கில், 'தமிழ் சினி சேர்க்கிள்' முதல் திரையிடலை நிகழ்த்துகிறது.
சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ் குறும்படமான " முடிவல்ல.." தயாரிப்பில் சுயம் படைப்பகத்தின் சார்பிலும், சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ் நீள் படமான " பூப்பெய்தும் காலம்" தயாரிப்பில், தமிழ் சினி சேர்க்கிள் சார்பிலும், நண்பர்கள் யோகராஜா, ரமணன், ஆகியோருடன் இணைந்த மகிழ்வில் திரையிடல் காண, வரமுடிந்த நண்பர்கள் அனைவரையும் வருமாறு அழைக்கின்றோம். வாங்கோ..!
மேலும் வாசிக்க இங்கே மற்றொரு செய்தியுண்டு.
13 comments:
மகிழ்ச்சி மலைநாடான்.
படம் தொகுப்பிலிருக்கும்போது காட்சிகளைப் பார்த்தேன்.
வெளிப்புறக்காட்சிகள் எடுகப்பட்டிருக்கும் விதம் அசத்தல்.
தொழிநுட்பரீதியிலும் பலவாறும் தமிழ் புலம்பெயர் சினிமாவில் முக்கிய மைல்கல்லாய் அமையும்.
வாழ்த்துக்கள்.
மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.
வலையேற்றுவீர்கள்தானே?
புலம்பெயர் தமிழர்களின் இந்த முயற்சிக்கு, என் வாழ்த்துக்கள்!
"பூப்பெய்தும் காலம்" திரையோவியம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
//மகிழ்ச்சி மலைநாடான்.
படம் தொகுப்பிலிருக்கும்போது காட்சிகளைப் பார்த்தேன்.
வெளிப்புறக்காட்சிகள் எடுகப்பட்டிருக்கும் விதம் அசத்தல்.
தொழிநுட்பரீதியிலும் பலவாறும் தமிழ் புலம்பெயர் சினிமாவில் முக்கிய மைல்கல்லாய் அமையும்.//
மயூரன்!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.
புலம்பெயர் சூழலில் மேற்கொள்ளப்பட்ட, சினிமா சார்ந்த அநேக முயற்சிகள் தென்னியந்திய சினிமாச்சாயலையே கொண்டிருந்தன. அந்த வகையில் நிச்சயம் இதுமாறுபாடான தன்மையில், புலம்பெயர் தமிழ்ச்சினிமாவிற்கான அடையாளத்தை ஒரளவுக்கேனும் கொண்டிருக்குமென நம்பலாம்.
இதில் திரு. ஞானதாஸ் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி.
//வலையேற்றுவீர்கள்தானே?//
துளசிம்மா!
வாழ்த்துக்களுக்கு நன்றி.
சுவிற்சர்லாந்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட சினிமா முயற்சிகளில் இது மிக அதிகமான பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆதலால் வலையேற்றம் உடனடியாக சாத்தியமில்லை. ஆயினும் ஒளிவட்டாக வரலாம். ஆதலால் நீங்களும் பார்க்கலாம். :)
நன்றி.
புலம்பெயர் சூழலில் மேற்கொள்ளப்பட்ட, சினிமா சார்ந்த அநேக முயற்சிகள் தென்னியந்திய சினிமாச்சாயலையே கொண்டிருந்தன. //
அப்பிடி நம்பிக்கொண்டிருந்தேன்.
நேற்று விடுதலை மூச்சு பார்த்தேன்.
படம் முடிந்த பிறகு இருவர் பேசி சென்றார்கள்.
படத்த நல்ல ஸ்டைலிஸ் ஆக எடுத்திருக்கிறாங்கள்.
அது உண்மைதான் :((
தஞ்சாவூரான்!
வரவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள். தஞ்சாவூரில் எந்தப் பக்கமுங்க..? :)
காண்டீபன்!
வாழ்த்துக்கு நன்றி.
பூப்பெய்தும் காலம் மூலக்கதை, வெறுமனே திரையோவியமாக மட்டுமல்லாது, ஜேர்மன், தமிழ் மொழி, இனைந்த அரங்கியல் நிகழ்வாகவும் நிகழ்த்தப்படுகிறது என்பது மேலதிக தகவல். ஆனால், இரு வடிவங்களிலும் அவற்றுக்குரிய தன்மைகளோடு கையாளப்படுகிறது. கலைஞர்களும் அவ்விதமே. :)
கொழுவி!
உங்கள் ஆதங்கம் புரிகிறது. மிக நீண்டகாலமாக எம்முள் வனிக சினிமா ஏற்படுத்திய தாக்கமிது.இதிலிருந்து நம் ரசனை மாறுவதற்கு முறையான மாற்று தேவை. இதுபோன்ற முயற்சிகள் அதனைச் செய்யலாம்.
நன்றி.
நாகரீகத்தின் உச்சமும், அநாகரீகத்தின் எச்சமும் என்னும் இந்தலைப்பினை வைத்து சின்டுமுடிய வந்த சின்னபுத்திக்காறா, இங்க வேணாம் உன் விளையாட்டு. அதற்குரிய தளங்கள் நிறைய உண்டு அங்கே வைத்துக் கொள் உன் ஆட்டத்தை.
பூப்பெய்தும் காலம் எனும் தலைப்பை வைத்துப் பார்க்கும்போது, இது பெண்கள் கதையாக இருக்குமோ? எனிவே வெற்றிபெற வாழ்த்துக்கள்.
அனானி!
வாழத்துக்களுக்கு நன்றி. அதற்கேன் அனானியாக வருகிறீர்கள். தலைப்பை வைத்து நீங்கள் எதிர்பார்ப்பது சரியாகவிராது என்றே கருதுகின்றேன்.
நன்றி.
Post a Comment