துளசிம்மா!
பாடலை உங்களுக்கு அனுப்பி, உங்கள் பதிவிலிடலாமென்றே முதலில் நினைத்தேன். நட்சத்திரவாரத்தில் உங்களைக் குதுகலப்படுத்தலாமே தவிர, குழப்பக்கூடாது என்பதனால் உங்கள் சார்பாக இங்கேயே இட்டு விடுகின்றேன். இதுவும் உங்கள் பதிவுதான். ஓகேயா..?
துள்ளித் துள்ளிப் பாடலாமா..?
பாடல் இடம்பெற்ற படம்: சிப்பிக்குள் முத்து
பாடியவர்கள் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான்.
13 comments:
என்னங்க மலைநாடான்,
இப்படிப் பாட்டெல்லாம் போட்டு என்னைத் 'திக்குமுக்காட'வச்சுட்டீங்களே!!!!!
இந்த அன்புக்கெல்லாம் என்ன கைமாறு இருக்கு?
ரொம்ப சந்தோஷமா இருக்கு.
துளசிம்மா!
அன்பும், மகிழ்வும்தானே, வாழ்வின் உன்னதங்கள்.
பாட்டு ஜோர்தானே..? :)))
கவனிச்சுப் பாருங்க , உங்க முப்பரிமானத் தோற்றத்துக்க உங்களுக்கென்றே ஒரு மரியாதை செய்திருக்கேன். எங்கே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
பிரமிச்சு நின்னதுலே இதைச் சொல்ல விட்டுப்போச்சு.
முப்பரிமாணமுன்னு சொல்லி அஞ்சு கலர் போட்டு
ஐம்பெரும் பரிமாணம் பண்ணிட்டீங்களே:-)))
நட்சத்திர வாரத்தில் டீச்சர், நீங்கள் பாடப் பாட நாங்கள் துள்ளி துள்ளி ஆடப் போகிறோம்!
அந்த மாதிரி டாப் டக்கர் பதிவுகள் போட்டு மேலும் மேலும் அசத்தப் போறீங்க என்று பின்னால் வருவதை முன்னாலேயே சொல்கிறார் மலைநாடன் சார்!
பாட்டுடன் நட்சத்திரக் கச்சேரி களை கட்டும்படி செய்த மலைநாடன் அவர்களுக்கு என் நன்றி! பாட்டு செலக்சன் அருமை சார்!
//உங்க முப்பரிமானத் தோற்றத்துக்க உங்களுக்கென்றே ஒரு மரியாதை செய்திருக்கேன். எங்கே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.//
துள்ளித் துள்ளி நீ பாடு "அம்மா"!
அதுல நம்ம ராதிகா "அக்கா"!
இந்தப் பாட்டைச் சொல்லித் தருவதால் "டீச்சர்"!!!
அட அம்மா, அக்கா, டீச்சர்
இதுவும் முப்பரிமாணம் தான் :-)
//பாட்டுடன் நட்சத்திரக் கச்சேரி களை கட்டும்படி செய்த மலைநாடன் அவர்களுக்கு என் நன்றி! பாட்டு செலக்சன் அருமை சார்!
//
நன்றி சார். நம்ம அம்மாவுக்குப் பண்ணாம..?
ஆனா அந்த மரியாதை என்னன்னு கண்டுபிடிக்கேல்லையே..
துளசி செடி,துளசிமாடம்... அது இது.. ஏதாவது தொக்கி நிற்குதா..சீதைக்கு வேறுபெயர் துளசி என்று இருககுதா...
மலை நாடர்!
புளக்கருக்கு; புளக்கர் மரியாதை இவ்வளவு அமர்க்களமாகச் செய்வது இது தான் முதல் தடவை என நினைக்கிறேன்.
எனினும் அக்காவின் சேவைக்கு இது தகும்.இதில் எங்களையும் சேர்த்துக்கங்க!!!
நல்ல பாடல் தெரிவு.நன்றி
யோகன் பாரிஸ்
சின்னக்குட்டி!
பாட்டுக்கும் அதற்கும் தொடர்பேயில்லை.
யோகன்!
அதுதான் நீங்க சொல்லீட்டீங்களே, அக்காவின் சேவைக்கு இது தகுமென்று. அதுதான்..
அதற்கும் மேலாக அம்மாமீது எனக்கிருக்கும் ஒரு மரியாதைதான்...
பாட்டு சூப்பர் :-)
மலைநாடான்,
உங்கள் பாடலை எனது கணிணியில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
ஆனால் பாட்டு கேட்டிருக்கிறேன்.
மனதுக்கு அமைதியைத் தரும் நல்ல பாட்டுத்தான்.
எப்போது இனி நம் தேசத்தில் இம்மாதிரியான பாட்டுச் சத்தங்கள் ஒலிக்குமோ?
இப்பத்தான் நீங்க இந்தப் பாடலை ஏற்கெனவே போட்ருக்கறதா துளசிக்கா சொன்னாங்க. அதான் வந்து பார்த்தேன். நன்றி.
நேரமிருந்தா பாலுவுக்காக நான் வச்சிருக்கற வலைப்பதிவுக்கு வந்து உங்க கருத்துகளைச் சொல்லுங்க. http://myspb.blogspot.com
நன்றி.
சுந்தர்!
உங்களுடைய தளத்திற்கு நான் பலதடவைகள் வந்திருக்கேன். பார்த்திருக்கிறேன். பாடல் கேட்டு ரசித்திருக்கின்றேன். ஆனால் பின்னூட்டம் போட்ட ஞாபகம் இல்லை. சோம்பல்தான்காரணம்:)
மற்றும்படி பாலுவின் குணம், பாடலில் அவர்காட்டும் நளினங்கள், எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.
நன்றி!
Post a Comment