Friday, November 03, 2006

வாத்தியஇசை

என்ன வீடு கனநாளாப்பூட்டிக்கிடக்கு, விடுமுறையில் போனதோ? அல்லது விட்டெறிச்சிட்டுப் போனதோ? ஒன்டுமா விளங்கேல்ல என்டு விண்ணானம் பேசாம விட்டிருந்த நண்பர்களே! உண்ணானச் சொல்லுறன், உங்களப்போல எனக்கும் கொஞ்சம் வேலைப்பளு கூடினதால விட்டிட்டிருந்திட்டன். வேறொன்றுமில்ல.

சரிசரி, வந்தவழியில கைத்தொலைபேசிக் கருவிக் கண்ணால, சுட்டு வந்தத சுடச்சுடப் பரிமாறுகிறன். சுவைத்துச்சொல்லுங்கள்.

சுவிற்சர்லாந்தின் தேசிய வாத்திக்கருவியான அல்ப்ஹோர்ன் இசைக்கருவியில் எழும் அற்புதமான இசைவடிவமிது.




9 comments:

மலைநாடான் said...

இந்தப்பெரிய குழலை எப்படிக் கொண்டு செல்கிறார்கள் என யோசிப்பவர்களுக்கு மேலதிகத்தகவலொன்று. இதை நான்கு துண்டுகளாகப் பிரித்து ஒரு மீற்றர் பைக்குள் வைத்து சாதரணமாகப் பயனப்படுகிறார்கள். இதை வாசிப்பவர்களுக்கும், கிருஸ்ணருக்கும் ஒரு தொடர்புண்டு. முடிந்தால் சொல்லுங்களேன்.

கானா பிரபா said...

அண்ணை படங்காட்ட வெளிக்கிட்டிட்டார்:-)

உது ஹரே கிருஷ்ணா குழுவினரே?

சின்னக்குட்டி said...

//உது ஹரே கிருஷ்ணா குழுவினரே?//

ஹிஹி..... மலைநாடர்... உதிலை எப்ப சேர்ந்தது ..சொல்லவே இல்லை...

கானா பிரபா said...

வேலை நேரத்தில கேட்க/பார்க்க முடியாது. இப்பதான் பார்த்தேன். பழைய ஜெமினி ஸ்ரூடியோ பிள்ளையள் ஊதுமாப் போல இருக்குது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
இந்த வாத்தியம் வாசிப்போரும் கிருஸ்ணர் போல் மாடு மெய்ப்பவர்கள்; அடுத்து இதே வாத்தியம் தீபேத்தில் பௌத்தக் கோவில்களில் வாசிக்கப்படும். அது செப்பில் செய்ததென நினைக்கிறேன். அளவு அமைப்பு ஊதும் முறை ,நாதம் யாவும் பெரும் ஒற்றுமையுண்டு.அங்கேயும் மலைமுகடுகளில் தான் வாசிக்கிறார்கள்.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

பிரபா!

வருகைக்கு நன்றி. ஜெமினியின் சின்னத்தில் வரும் பிள்ளைகளின் குழல் சிறயதல்லவா? இவர்களுக்கும் கிருஸ்ணருக்கும் உள்ள தொடர்பு அறிய யோகனின் பதிலைப் பாருங்க.

சின்னக்குட்டி!

..ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறீர்...:)))

மலைநாடான் said...

// இந்த வாத்தியம் வாசிப்போரும் கிருஸ்ணர் போல் மாடு மெய்ப்பவர்கள்; அடுத்து இதே வாத்தியம் தீபேத்தில் பௌத்தக் கோவில்களில் வாசிக்கப்படும். அது செப்பில் செய்ததென நினைக்கிறேன். அளவு அமைப்பு ஊதும் முறை ,நாதம் யாவும் பெரும் ஒற்றுமையுண்டு.அங்கேயும் மலைமுகடுகளில் தான் வாசிக்கிறார்கள்//

யோகன்!

உங்கள் ஒப்பீடு மிகவும் சரியானதே. உலகின் பல இடங்களில் வாழும் மக்களின் சில விடயங்கள் ஒரேவிதமான ரசனையோடு அல்லது சிறுமாற்றங்களோடு இருப்பதை அவதானித்திருக்கின்றேன். தங்கள் பகிர்வு்கு நன்றி!

Anonymous said...

இவர்கள் வாசிக்கும் கருவி நாதஸ்வரம் போல் தானே இருக்கின்றது?
piran

மலைநாடான் said...

பிரன்!

இவர்கள் வாசிக்கும் வாத்தியம் நாதஸ்வரம் போல் குழல் வடிவமாக இருந்தாலும், அதற்கும் இதற்கும் நிரம்ப வித்தியாசங்கள் உண்டு. இக்குழலுக்குத் துளைகள் இல்லை. வாசிப்பவர்களின் காற்று அழுத்தத்திலும், உதட்டுக்குவிப்பிலும்தான் இதன் சுரவரிசை உருவாகிறது. அந்தவகையில் வாசிப்பதற்குச் சற்றுச் சிரமமாயிருக்கலாம்.