Wednesday, October 03, 2007

மற்றுமோர் தமிழ் நிமிர்வு.

போர்ச்சூழலினால் பாடசாலைகள் சரியாக இயங்காத நிலை, ஆசிரியர்கள் மாணவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்த நிலை, பெற்றெடுத்த தந்தை காணாமற்போன நிலை, என சூழலின் பாதிப்புக்கள் அதிகமாகவே இருந்த போதும், நடைபெற்று முடிந்த ஆண்டு ஐந்து, புலமைப்பரிசுப் பரீட்சையில் சிறப்பாகச் செயற்பட்டு அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தையும் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்று தமிழ் மாணவர்களின் கல்வித்தரத்தினை மீண்டும் ஒருதடவை நிரூபித்திருக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் செல்வன் மணிவண்ணன் மதுஸனுக்கு, மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


தமிழர்களுக்கெதிரான போரில், தமிழ் மக்களின் கல்வித்தரத்தை அழித்தொழிப்பதையும், முக்கிய இலக்காகக்கொண்டு செயற்பட்டுவரும், சிறிலங்கா அரசினதும், அதனது நேசசக்திகளினதும், நினைப்பில் மண்தூவி, நெஞ்சுநிமிர்த்திய தலைநிமிர்வு. நிச்சயம் இது மற்றுமோர் தமிழ்நிமிர்வு.

இது குறித்த முழுமையான செய்திக்கு இங்கேசெல்லுங்கள்.

11 comments:

மாசிலா said...

செல்வன் மணிவண்ணன் மதுஸனுக்கு, நானும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

பாவம், சிறுவன் இந்த வயதில் தான் பார்க்க கூடாத, அனுபவிக்க கூடாத பல இம்சைகளை அடைந்திருந்த போதிலும் கவனமாக இருந்து தீர்க்க புத்தியுடன் படித்து தமிழ் சமுதாயத்திற்கு நற்பெயர் பெற்று கொடுத்திருப்பது ஒரு மகத்தான செயலே!

அவரது சுற்றத்தினருக்கும் மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
மதுஸனைப் பாராட்டுவோம்.

கானா பிரபா said...

தகவலுக்கு நன்றிகள், எங்கள் சமூகத்துக்குக் கிடைக்கும் சில அங்கீகாரங்களில் கல்விச் சொத்து முதன்மையானது, இன்னும் வற்றிவிடவில்லை

தமிழ்நதி said...

மதுஸனுக்கு வாழ்த்துக்கள்...! பாறையினுள்ளிருந்தும் தலைநிமிர்த்தும் தளிர்.

மலைநாடான் said...

மாசிலா!

பாராட்டுக்களுக்கு நன்றி. உண்மையில் அவனது செயல் மகத்தானதே. நன்றி.

மலைநாடான் said...

யோகன்!

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

மலைநாடான் ஐயா, மணிவண்ணன் மதுஸனின் சாதனையைச் சொன்னதற்கு மிக்க நன்றி. நம் பாராட்டுகளுக்கு உரியவர் இவர்.

குறிஞ்சிநிலத்தலைவனுக்கு மலைநாடன் என்ற பெயர் சங்ககாலத்தில் இருந்ததாம். உங்களுக்குத் தெரிந்து தான் இந்தப் பெயர் கொண்டுள்ளீர்களோ?

மலைநாடான் said...

பிரபா!

\\எங்கள் சமூகத்துக்குக் கிடைக்கும் சில அங்கீகாரங்களில் கல்விச் சொத்து முதன்மையானது, இன்னும் வற்றிவிடவில்லை\\

செய்தியறிந்தபோது, அப்படித்தான் நானும் உணர்ந்தேன்.
நன்றி.

மலைநாடான் said...

தமிழ்நதி!

வரவுக்கும், பகிர்வுக்கும் நன்றி.

வெற்றி said...

மலை,
தகவல்களுக்கு மிக்க நன்றி. விடியும் போது உயிருடன் இருப்போமா அல்லது பாதுபாப்பாக பள்ளிக்குச் சென்று திரும்புவோமா என ஏங்கும் சூழலில் இச் சாதனை என்பது அளப்பரியதுதான்.


பி.கு :- இச் சிறுவனின் தந்தையா கொழும்புக்குச் சென்ற போது கடத்தப்பட்டது? எங்கேயோ படித்த ஞாபகம். சுட்டி கிடைத்தால் பின்னர் தருகிறேன்.

மலைநாடான் said...

குமரன்!

மதுஸனின் தகமை நிச்சயம் பாராட்டுக்குரியதே. நன்றி


சங்ககாலக்கதைகளும் சற்று அறிவோம். :))