1981ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் சிறிலங்கா அரசின் சூழ்ச்சியில் எரிந்து சாம்பலாகிப் போன யாழ்ப்பாண நூலகம் பற்றி, சோமியின் காற்றோடு வலைப்பதிவில் அப்பால் தமிழ் இனையத்தளத்துக்காக செளம்யன் எழுதிய கட்டுரை, பல உண்மைகளையும், செய்திகளையும் பேசுகிறது. அதிலே கல்வியறிவு மிக்க ஈழத்தமிழ் சமூகம் மீது மறைமுகமாக மேற்கொள்ளபட்ட அறிவியல் அழிப்பு என்ற செய்தி முக்கியமாகச் சுட்டப்படிருக்கிறது.
தமிழ்மக்கள் மீது சிங்களப்பேரினவாதம், இனவாத யுத்தத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வழிகளை உற்று நோக்கிக் கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தமிழ்சமூகத்தின் அறிவியல் மீது, உள்நாட்டு யுத்தத்தின் பெயரால் திட்டமிட்டு மேற்கொள்ளும், அழிப்பு நடவடிக்கை தெள்ளனெத் தெரியும்.
வடஇலங்கையில், யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்த போதும், பல்வேறு கிராமங்களிலும் இருக்கும் சனசமுக நிலையங்கள் பல, பல் வேறு சந்தர்ப்பங்களிலும் இராணுவ நடவடிக்கைகளின்போது பாதிப்புக்குள்ளானது. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொன்றும், ஞாபகத்திலிருப்பதுமானது, வல்வெட்டித்துறையில் உள்ள ஒரு சனசமுகநிலையக் கட்டிடத்திற்குள் வைத்து, இராணுவச்சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டது. அந்தகட்டிடத்தின் சூழலிலே சுற்றி வந்தவர்களின் குருதி, அந்தக் கட்டித்தின் சுவர்களிலும், படிக்கும் மேசைகளிலும், கொட்டிக்கிடந்தது.
எத்தனை பாடசாலைகள் மீது தாக்குதல் செய்திருக்கின்றார்கள். எத்தனை கல்விக்கூடங்களை இராணுவமுகாம்களாக மாற்றியிருக்கின்றார்கள். நாகர் கோவிலில் பாடசாலை மீதும், பாடசாலை மாணவர்கள் மீதும், நடாத்தப்பட்ட விமானக்குண்டுவீச்சு, செஞ்சோலையில் பள்ளிமாணவர்கள் மீது நடாத்தப்பட்ட விமானத்தாக்குதல், என்பவையெல்லாம் சொல்லுகின்ற செய்தி என்ன? இவற்றின் பின்னே மறைந்திருக்கின்ற நோக்கு, அறிவியல் அழிப்பென்பதன்றி வேறெதுவாக இருக்க முடியும். ஏன் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முகிழ்வே, தமிழ் இளைஞர்களின் அறிவியல் தரப்டுத்தலில் இருந்துதானே ஆரம்பமாகியது.
இப்படித் திட்டமிட்ட வகையில், அறிவியல் படுகொலை செய்து வரும் அரசும், அது சார்ந்த தலைவர்களும், உலகப்பரப்பில் தம்மை நாகரீக மனிதர்களாகவும், தமது அரசினைத் தார்மீக அரசாகவும் பறைசாற்றிக்கொள்வதையும், இதற்கு அகத்திலும் புறத்திலும், வக்காலத்து வாங்குபவர்களையும், வளங்கள் வழங்குபவர்களையும், என்னவென்று சொல்வது? வெட்கம் கெட்டவர்கள்.
10 comments:
இந்த இணைய யுகத்தில் ஒரு சமுதாயத்தை கல்விக்கு ஏங்க வைத்து விட்டார்கள். இது திட்டமிட்ட இன அழிப்பு. உலக அரங்கம்" நித்திரை போல் நடிக்குது" ;;;எழுப்பமுடியுமா?
யோகன்!
உண்மைதான். எங்கள் இனத்திற்கேற்பட்டுள்ள மிகப் பெரிய சோகமிது.
அண்ணை, உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்டவர்களாக உலகெங்கும் அலையும் இன்றைய தலைமுறையினர் நாங்கள்....என்னத்தைச் சொல்ல.சனசமூக நிலையங்களின் கதைகளை எங்கள் மாமாக்கள் சொல்லக் கேட்டு இருகிறேன்.மிகச் சின்ன வயதில் சனசமுக நிலையதில் அப்பாவோடு சேர்ந்து நானும் பத்திரிகை வாசித்தது மங்கலாய் நினைவிருக்கு...ம்....
தீராத வடு, ஆறாத ரணம்.....
நூலக எரிப்புக் குறித்து சிறீ அண்ணரின் பதிவையும் பார்த்திருப்பீர்கள்
http://srinoolakam.blogspot.com/2006/02/blog-post.html
சோமி!
உண்மை. ஈழத்தின் இளையதலைமுறையின் மிகப்பெரிய துயரமிது.
பகிர்வுக்கு நன்றி.
யார்தான் எப்படித்தான் எரித்தாலும். உடைத்தாலும். புதைத்தாலும்
தமிழரின் அறிவு, தைரியம், வாழ்வு எல்லாம் உயர்கிறது...உயர்கிறது...உயர்கிறது....
உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.
பிரபா!
உங்கள் கருத்துப்பகிர்வுக்கும், இணைப்புக்கும் நன்றி.
Yes. One of the strong reason to tamil guys took guns is Jaffna library. Thanks for the article.
அனானி!
உங்கள் உணர்வும், கூற்றும் உண்மையானது. பகிர்வுக்கு நன்றி.
சபேசன்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment