Wednesday, October 18, 2006

தசையாடிய தமிழகக் கலைஞர்களுக்கு!

இப்போதுதான் "ஆணிவேர்" பார்த்துவிட்டு வந்தேன். வந்ததும் உடன் எழுதுகின்றேன். ஆனால் இது படத்திற்கான விமர்சனம் அன்று. விமர்சனத்துக்கு அப்பால் படம் அவ்வளவு சிறப்பாக இருக்கிறதா எனும் கேள்விகளுக்கும் இப்போது பதில் இல்லை.



ஆணிவேர் எங்கள் போரியல் வாழ்வை பொய்யுரைக்காது சொல்லியிருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்வேன். இன்னுமொன்று சொல்வேன், தமிழக நண்பர்களே! குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழக நண்பர்களே! உங்கள் நாடுகளில் ஆணிவேர் திரையிடப்படும் போது, எந்தவித விருப்புவெறுப்புகளுமின்றி, ஒருதடவை சென்று பாருங்கள். தயவு செய்து சென்று பாருங்கள்.

இதைச் சொல்ல மட்டுமல்ல இப்பதிவு. தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்று சொல்வார்களே, தமிழீழத்திற்கும், இந்தியாவுக்குமான, தொப்புள்கொடி உறவின் வழிவந்த கலைஞர்கள் நந்தா, மதுமிதா, நீலிமா, ஜான், ஆணிவேரில் எங்கள் உறவுகளாக வாழ்ந்திருக்கிறார்கள். நன்றி என்று சொல்ல நா எழவில்லை. அந்த உறவுகளை உரிமையோடு வாழ்த்திட, உணர்வோடு கரங்குலுக்கவே இப்பதிவு.


நடிப்பும், இயக்கமும், என்பது இக்கலைஞர்களுக்குத் தொழில். தொழிலாகவே எண்ணி இத்திரைப்படத்தில் இணைந்திருந்தாலும், படத்தின் முழுமையும் முடிந்தபின், திரையில் பாரத்திருப்பார்களாயின், அவர்கள் கூட அழுதேயிருப்பார்கள் என்பது நிச்சயம் .

நந்தா, மதுமிதா, நீலிமா, ஜான், மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களே! உங்களின் உளமார்ந்த அர்ப்பணிப்புக்கு, எம் நெஞ்சார்ந்த நேசங்கள்.

15 comments:

கானா பிரபா said...

பதிவுக்கு நன்றி மலைநாடான், அவுஸ்திரேலியாவிலும் போட முயற்சிஎடுத்திருக்கிறோம், வெகு விரைவில் வெண்திரையில்:-)

யாரோ - ? said...

மலைநாடன் அவர்களுக்கு தங்களது பதிவுக்கு நன்றி,
கானா பிரபாவுக்கு தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

நாகராஜ் said...

மலைநாடான் அண்ணா உங்கள் இந்த பதிவை எங்கள் மன்றத்தில் இட்டுள்ளேன். உங்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளேன்.

குமரன்@முத்தமிழ்மன்றம்.கொம்

Anonymous said...

FINE. EVERY TAMILAN MUST SEE THIS FILM. MANY MANY THANKS.
Kulakkodan

மலைநாடான் said...

பிரபா!

நல்ல முயற்சி. முடிந்தவரைக்கும் தமிழக நண்பர்கள், வெளிநாட்டு நண்பர்கள், ஏனையோரையும் பார்வையிட அழையுங்கள்.

மலைநாடான் said...

யாரோ!

எங்களுக்கான ஒரு சினிமாமொழி உருவாகி வருவது எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டியதுதானே?

மலைநாடான் said...

முத்தமிழ் குமரன், குளக்கோடன்!

உங்களின் வருகைக்கும், ஆதரவுக்கும், நன்றி!

Chandravathanaa said...

மலைநாடான்
படத்தைப் பற்றிய மற்றைய கருத்துக்களையும் நீங்கள் எழுதுpயிருக்கலாம்.
நீங்களே இத்துறையில் ஆர்வமுள்ளவராக இருப்பதால் குறை நிளைகளை உங்களால் இலகுவாகக் கண்டு பிடிக்க முடியும்.

மலைநாடான் said...

சந்திரவதனா!

படம்பற்றிய எனது பார்வையை விபரமாக விரைவில் தருவதற்குள்ளேன். படம்பார்க்கவிருப்பவர்களின் சிந்தனையாற்றலை எனது பார்வையால் மட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதனாலேதான் முதலில் அதைத் தரவில்லை. தற்போது பலரும் படத்தைப்பார்த்தது , கருத்துக்கள் பகிரப்பட்டும் உள்ளன. ஆகையால் எனது கருத்துக்களையும் நிச்சயம் தருவேன்.

Anonymous said...

As soon as I enter I was happy to note that there is welcome message mentioning the country I live. How it is possible. Are you taking my computers IP address.? Many time the IP addresses shown wrong location too. Can you please explain. ( Sorry for my message in English)

சின்னக்குட்டி said...

மலைநாடன்...லண்டனில் படம் போட்டார்கள்... அந்த சந்தர்ப்பத்தை...தவற விட்டு விட்டேன்...பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்... இனி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தப்ப விடமாட்டன்...

மலைநாடான் said...

படிப்பவன்!

உங்கள் கேள்விக்கான பதில் யாவும், அந்த எழுத்துக்களின் மேல் கிளிக்கினால் வரும் இணைப்பில் கிடைக்கும். நன்றி.

மலைநாடான் said...

சின்னக்குட்டி!

மறுமுறையாயினும் சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள். அவசியம் பாருங்கள்.

நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
இவ்விடம் திரையிட்டது; தெரியாததால் தவறவிட்டு விட்டேன். பார்ப்பேன்.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

சின்னக்குட்டிக்குச் சொன்னதே உங்களுக்கும். அடுத்த தடவையாவது தவறாது பாருங்கள்.