Johan-Paris said...
சின்னக் குட்டியர்!உங்களுக்கும் பூக்குதா??? அடுத்த வருடம் கலப்புக் குறைந்து தனி நிறமாகச் சாத்தியமுண்டு.அந்தி மந்தாரையாமே!!! நாலுமணிப்பூ பெயரை மறக்கலாம்.நான் லண்டனில் நிற்கிறேன்.யோகன் பாரிஸ்
சின்னக்குட்டி said...
வணக்கம் யோகன்..... லண்டனிலா நிற்கின்றீர்கள்....... . உங்களுக்கொரு பின்னூட்டம் உங்கள் பதிவில் போட்டிருக்கிறேன் பாருங்கள்
குமரன் (Kumaran) said...
பூக்கள் நன்றாக இருக்கின்றன. 'நான் லண்டனில் நிற்கிறேன்' என்று யோகன் ஐயா சொல்லியிருக்கிறார். பொருள் என்ன?
சின்னக்குட்டி said...
//'நான் லண்டனில் நிற்கிறேன்' என்று யோகன் ஐயா சொல்லியிருக்கிறார். பொருள் என்ன?//வணக்கம் குமரன்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...யோகன் பாரிஸ் இல் வசிப்பவர்...லண்டனுக்கு விடுமுறைக்கு வந்திருக்கிறார் போலை... தற்போது லண்டன் வந்துள்ளேன் என்று கூறுவது தான் லண்டனில் நிற்கிறேன் என்ற கருத்து...என்னங்க இது... ஈழ தமிழை புரிய இப்படி கஸ்டப்படுகிறியள்பழைய நடிகர் லூஸ் மோகன் பேசுற உந்த கஸ்டமான மட்ராஸ் தமிழைக் கூட நாங்கள் இலகுவாக புரிஞ்சிருக்கிறோம்
குமரன் (Kumaran) said...
சின்னகுட்டி (ஐயா/அண்ணா), எனக்கு ஈழத்தமிழ், சென்னைத்தமிழ் இரண்டுமே அவ்வப்போது புரிவதில்லை. நீங்கள் சொன்ன மாதிரி தான் நானும் யோகன் ஐயா சொன்னதற்குப் பொருள் கொண்டேன். ஆனாலும் தெளிவாக அறிந்து கொள்வோம் என்றே கேட்டேன். விளக்கம் சொன்னதற்கு நன்றி. :-)
இது, சின்னக்குட்டியின் பதிவில் நடந்த பின்னூட்ட உரையாடல். இது சராசரியாக ஈழத்தவர்கள் மத்தியில் நடைபெறும் பேச்சு வழக்கு உரையாடல்தான். இதைப்பார்த்த போது, எனக்கு புலம்பெயர்ந்த புதிதில் எம்மவர் மத்தியில் இடம்பெற்ற புரியாத சில தமிழ் உரையாடல்கள் ஞாபகத்திற்கு வந்தன.
ஐரோப்பாவிற்குள் நுழைந்த முதல் நாள் நண்பனொருவனின், நண்பர் வீட்டில் நின்றேன். அங்கே தொலைபேசி எடுத்த நண்பர் என்னுடன் கதைத்துவிட்டு, என்னைக் தன்னிடம் அழைத்து வரும்படி கூறினார். அது தொடர்பாக அவர்களுக்குள் நடந்த உரையாடல் எனக்குப் புதியதாக இருந்தது.
"...சரி நீங்கள் எத்தினை மணிக்கு இறங்கப் போறியள்..?"
"இறங்கேக்க அடிசிட்டு இறங்கிறம்.."
"... வழி தெரியுமே ..? "
" எதுக்கும் இன்னுமொருதரம் சொல்லுமன்.."
".. பச்சையில....காட்டுவான், அத எடுத்திட்டு வர வலது பக்கம் நீலத்தில இறக்குவான்..... அதை எடுத்திட்டு வாங்கோ "
இந்த உரையாடலை அன்று கேட்கும்போது எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்று நானும் அப்படித்தான் கதைத்துக் கொண்டிருக்கின்றேன். ஐரோப்பா தவிர்ந்த மற்றைய நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இது புரிகிறதா எனச் சொல்லுங்கள் பார்ப்போம்...உங்கள் நாடுகளில் உள்ள புதிய மொழி நடைகளையும் குறிப்பிட்டால் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
சின்னக்குட்டி குறிப்பிட்டிருக்கும் மற்றுமொரு விடயம் முக்கியமானது. தமிழகத்தின் வட்டார வழக்கு உரையாடல்கள் பலவற்றையும், தமிழீழ மக்கள் இலகுவில் பரிந்து கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியச் சினிமா என்றே கருதுகின்றேன். ஆனால் தென்தமிழீழ சொல்லாடல் வடதமிழீழத்திலும், வடதமிழீழச் சொல்லாடல் தென் தமிழீழத்திலும் புரிதலில் சிரமங்கண்டுள்ளது. இது குறித்து வசந்தன் ஒரு பதிவு எழுதியிருந்ததாக ஞாபகம். விரைவில் மருதநிழலில் இதுபற்றி விரிவாகப் பேசுவோம்.
13 comments:
மலைநாடர். நீங்கள் சொன்ன உரையாடலில் எனக்குப் புரிந்ததைச் சொல்கிறேன். சரியா என்று சொல்லுங்கள். :)
'...சரி நீங்கள் எத்தனை மணிக்கு இங்கே வருகிறீர்கள்?'
'..ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் வந்துவிடுகிறோம்'
'..வழி தெரியுமல்லவா?'
'எதற்கும் இன்னும் ஒரு முறை சொல்லுங்களேன்'
'...(நெடுஞ்சாலையில்) பச்சை போர்டில்...வழியைச் சொல்லியிருப்பான். அதனைத் தொடர்ந்து வர வலப்பக்கத்தில் நீல நிற போர்டில் திரும்பச் சொல்லுவான். அந்த வழியைப் பின்பற்றி வாருங்கள்'.
வணக்கம் மலை நாடர்... நல்ல இனரஸ்ரிங்கான தலைப்பை தொடங்கியிருக்கிறியள்.. உது பற்றி விபரமாக பதில் பின்பு போடுறன்...
அவனை போட்டாச்சு... இவனை தூக்குவமே...... ஹிஹி.... இது எப்படி இருக்கு.
மலை நாடர்!
மற்றும் நண்பர்களுக்கு " நான் இரு வார விடுமுறையில் லண்டன் வந்துள்ளேன். மீண்டும் பாரிஸ் திரும்பியதும், உங்கள் பதிவுகள் வழமைபோல் படித்துப் பின்னூட்டுவேன்.அது எனக்குப் பதிவிடுவதிலும் சுலபம்.
என் பதிவுகளுக்கு பின்னூட்டாததால் பலர், பதிலுக்குக் காத்திருந்ததால் சற்று நேரமோதுக்கினேன்.
ஏனையோர் பதிவுகள் படிக்க நேரம் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.
மலை நாடர் மிக நல்ல வேலை. நன்றி
யோகன் பாரிஸ்
நல்ல சுவாரசியமான விசயம்.
நான் நினைக்கிறன், இந்தச் சொல்லாடல்களில் பெருமளவுக்கு போரின் சாயலுள்ளது.
பெரும்பாலும் முன்னாட் போராளிகள், போராட்டம் சார்ந்தவர்கள், போராளிகளோடு நெருக்கமாயிருந்த மக்கள் மூலம் பரப்பப்பட்ட சொல்லாடல்களா இருக்கலாம்.
அடிச்சிட்டு இறங்கிறது, அவனைத் தூக்கிறது, போடுறது எல்லாம் மிகமிக நேரடியான போரியற் சொற்கள்.
இன்னும் பல சொற்களை அறிய ஆவலாயுள்ளேன்.
ஏற்கனவே டி.சே, தர்சன் போன்றவர்களுட்பட பலர் இச்சொல்லாடல் பற்றி எழுதும் அவசியத்தைக் கதைத்திருந்தார்கள்.
//"...சரி நீங்கள் எத்தினை மணிக்கு இறங்கப் போறியள்..?"//
அது சரி, எத்தின மணிக்கு வரப்போறியள்?
//"இறங்கேக்க அடிசிட்டு இறங்கிறம்.."//
பஸ்ஸில இருந்து இறங்கேக்க போன் பண்ணிறம்.
//அதை எடுத்திட்டு வாங்கோ//
அத follow பண்ணி வாங்கோ!!!
--- மற்றக்காள் மாதிரி மட்டை போட்டு உழைச்ச காசில்லை மச்சான்
இராப்பகலாய் தும்பு அடிச்சு சுழன்ற காசு..
இன்னும் வரும---------------------
குமரன்!
ஒரு 75 வீதம் சரியாகப்புரிந்திருக்கிறீர்கள். மற்றவர்களுடைய கருத்துக்களையும் பார்த்துவிட்டு முழுயான பதில் தருகின்றேன். சற்றுப் பொறுத்தருள்க.
நன்றி!
"...சரி நீங்கள் எத்தினை மணிக்கு இறங்கப் போறியள்..?"
- சரி, நீங்கள் எத்தனை மணிக்குக் கிளம்புகிறீர்கள்?
"இறங்கேக்க அடிசிட்டு இறங்கிறம்.."
- கிளம்புகையில் போன்செய்து சொல்லிவிட்டு கிளம்புகிறோம்
"... வழி தெரியுமே ..? "
- வழி தெரியுமா?
" எதுக்கும் இன்னுமொருதரம் சொல்லுமன்.."
- எதற்கும் இன்னுமொருதரம் சொல்லுங்களேன்..
".. பச்சையில....காட்டுவான், அத எடுத்திட்டு வர வலது பக்கம் நீலத்தில இறக்குவான்..... அதை எடுத்திட்டு வாங்கோ "
- பச்சையில் ... என்று எழுதி இருப்பார்கள், அந்த வழியில் வந்து, தொடர்ந்து நீல நிற போர்டில் வலதுப்புறம் திரும்பச் சொல்லி இருக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து வாருங்கள்..
வசந்தன், அடிச்சிட்டு இறங்குதல் என்பதை போன் செய்துவிட்டு கிளம்புவது என்ற பொருளில் நாங்கள் கூட பயன்படுத்துறோமே?! [சென்னை (ரௌடித்) தமிழ்னு சொல்லிடாதீங்க :)]
தூக்கிறது, போடுறது போன்ற சொற்கள் இல்லாத தமிழ்ப் படங்களே இப்போவெல்லாம் இல்லை :-D
//இறங்கேக்க அடிசிட்டு இறங்கிறம்..//
"
- கிளம்புகையில் போன்செய்து சொல்லிவிட்டு கிளம்புகிறோம்//
இறங்கங்கை அடிச்சிட்டு.... என்பது... கனடாவிலை அவதானிச்சிருக்கிறன்... முன்பு நம்மவர்கள் பல அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தமையால்.... இறங்கிறது ஏறுறது வந்திருக்குமென்று நினைக்கிறன்...
சின்னக்குட்டி!
இதென்னப்பா தமிழ்சினிமா வசனமெல்லாம் பேசுறீங்கள்?..:))
யோகன்!
உங்கள் விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள். நீங்கள் எங்க நின்டாலும் எங்களோடதானே.. பிறகென்ன
வசந்தன்!
போராட்ட களத்தில் பேசப்படும் சொல்லாடல்களாக இருப்பினும், புலத்தில், அவ்வழி தொடர்பாக வந்திருக்கலாம் என்பது கேள்விக்குரியதே. பார்ப்போம்.. மற்றவர்களும் இது பற்றி என்ன சொல்கின்றார்களளென்று
கனக்ஸ்!, குமரன்!
அந்த உரையாடலுக்கான பொருளினை நீங்கள் புரிந்துகொண்டது அநேகமாகச் சரியெனவே கொள்ளலாம். அதன் சரியான விளக்கம், பின்வருமாறு அமையும்.
//"...சரி நீங்கள் எத்தினை மணிக்கு இறங்கப் போறியள் //
நீங்கள் எத்தனை மணிக்குப் புறப்படப்போகிறீர்கள்.
//இறங்கேக்க அடிசிட்டு இறங்கிறம். //
புறப்படும்போது தொலைபேசியில் சொல்லிவிட்டுப் புறப்படுகின்றோம்.
// பச்சையில....காட்டுவான், அத எடுத்திட்டு வர வலது பக்கம் நீலத்தில இறக்குவான்..... அதை எடுத்திட்டு வாங்கோ //
பச்சைப் பலகையில் காட்டும் வழித்தடத்தில் வரும்போது, நீலப்பலகையில் காட்டப்படுமிடத்து , அதைப்பின்பற்றி வரவும்
உங்கள் ஆர்வத்துக்கும், பங்கேற்புக்கும் நன்றி.
Post a Comment