இந்தப்படம் சிலநாட்களுக்கு முன், நண்பர் யோகன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த ஒருபடத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட படம். இந்தப்படத்தை என்னுடன் வேலைசெய்யும் ஒரு இத்தாலியரிடம் காட்டி, அபிப்பிராயம் கேட்டேன்.
"ஜப்பானியர்களுக்கு அதிக நேரம் இருக்கிறது போலும்.." என்றார். ஆனால் என்னால் அப்படி இதைப்பார்க முடியவில்லை. உருளை வடிவான தர்பூசணிப்பழத்தைச் சதுரமாக மாற்றுவதற்குள் சில பொருளாதார நுட்பங்கள் இருக்கின்றன என எண்ணுகின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ? சொல்லுங்கள். நானும் சொல்லுகின்றேன்.
9 comments:
உங்களுக்கும் அதிக நேரம் இருக்கிறது போலும். :-)))
செடியில் வளரும் போதே ஒரு வித அடைப்பான்களைப் போட்டு அது சதுரமாக வளரச் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
அந்த நடுவில் இருப்பவர் இடது கையில் எதையோ பிரிக்கிறாரே, அது போன்ற ஏதாவது........??
மலைநாடன், பாக்கிங் செலவை குறைக்க ஜெனிட்டிக் இஞ்சினியரிங் செய்து சதுரவடிவில் பழங்கள். முட்டைகள் உருவாக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன என படித்திருகிறேன்.
இயற்கையாக வண்ணம் கொண்ட பஞ்சுகளை உருவாக்க ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக நடக்கின்றன என்பதையும் அறிவேன்.
இறக்கைகள் இல்லாமல் கோழிகள் உருவாக்கப்படுகின்றன
படம் நன்றாக உள்ளது
ம.நா,
குழப்பமா இருக்குது. என்னண்டே விளங்கேலை ஐயா. நான் ஒரு ரியூப் லைற். எனக்கு இதெல்லாம் உடனை ஓடி விளங்காது. கொஞ்சம் கெதியா விடையைச் சொல்லுங்கோ. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.:)
கால்கரி சிவா சொல்வது தான் சரி. இந்த தர்பூசணிகளை அதன் பழைய வடிவத்திலேயே பாக் செய்வதானால், இரண்டு உருளைகளுக்கிடையில் கொஞ்சம் இடம் வீணாகிவிடும். அத்துடன் ஒன்றன் மீது ஒன்று இடித்து அடிபடாமல் இருக்கவும் வைக்கோல் போன்ற மென்மையான விஷயங்களை இவற்றுக்கிடையில் சொருகவேண்டிய தேவை இருக்கும்..
இவற்றை எதிர்கொள்ளவே இப்படிப் பட்ட சதுர தர்பூசனிகளை விளைக்கிறார்கள்.
தக்காளிகளில் கூட சதுர தக்காளிகளை முயல்கிறார்களாம்!
நண்பர்களே!
முதலில் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
உருளை வடிவான இப்பழங்களைச் சதுரமாகத் தோற்றுவிப்பதால், குறிப்பாக ஏற்படக்கூடிய நன்மைகள் என நான் கருதுவது,
பொதி செய்வதும்,
களஞ்சியப்படுத்துவதும் காட்சிப்படுத்துவதும்சுலபம்.
பாவனையாளர்கள் எடுத்துச் செல்வதும் கூடச்சுலபம்.
வித்தியாசமான வடிவமைப்பு பாவனையாளர்களை ஆர்வப்படுத்தும்.
ஜப்பானியர்கள் இப்படி வித்தியாசமாகச் சிந்திப்பதால்தான், பொருளாதாரத்திலும், தொழில் நுட்பத்திலும் அதிக பாச்சல் காண்கிறார்கள் எனக் கருதுகின்றேன்.
குறும்பன்
என் பணி சந்தைப்படுத்தல் சார்ந்ததாக அமைந்தததால் இதுபற்றிச் சற்று யோசித்தேன் அவ்வளவுதான் :)
எஸ்.கே
நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் எதிர்காலத்தில் கால்கரி சிவா, பொன்ஸ், ஆகியோர் குறிப்பிட்டது போன்று, மரபணு மாற்றத் தன்மையில் இது நிகழுமென நினைக்கின்றேன்.
கால்கரிசிவா
நீங்கள் சொல்வது சரியென்றே கருதுகின்றேன். எதிர்காலத்தில், மரபணுமாற்றத்தில் பல்வேறு புதிய வடிவங்கள் மனித தேவைக்குத் தக்கவாறு உருவாக்கபடத்தான் போகிறது போலும்.
பொன்ஸ்
தக்காளிப்பழங்களில் சில வித்தியாசங்களையும், உருளைக்கிழங்கில் நிற மாற்றத்தையும், பெப்பறோனி என அழைக்கப்படும் பெரிய மிளகாயில் பல வர்ணங்களையும், சிறிய வகை கரட்டுகளையும்,பார்த்துள்ளேன். சதுர வடிவில் தக்காளி இன்னமும் காணவில்லை.
வெற்றி!
கடுமையாக யோசித்து விட்டீர்கள் போலும். இது ஒரு சின்ன யோசனை அவ்வளவே. இப்போது புரிந்திருக்குமென்று நினைக்கின்றேன்.
நண்பர்களே !
உங்கள் உற்சாகமான வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் மீண்டும் நன்றிகள்!
அதுசரி
இவைகளால் பழத்தின் இயல்பான தன்மை மாறி விடாதா?
பக்கவிளைவுகள் எதுவும் இல்லையா?
//அதுசரி
இவைகளால் பழத்தின் இயல்பான தன்மை மாறி விடாதா?
பக்கவிளைவுகள் எதுவும் இல்லையா //
அடைப்பானில் இட்டு உரு மாற்றுவதால் பெரிதும் மாறுவதற்குச் சந்தர்பமில்லை. மரபணுமாற்றத்தில் என்ன மாறும் எனச் சொல்வதற்கில்லை.
நாவல்நிறத்தில் மாற்றப்பட்ட உருளைக்கிழங்கு சாப்பிட்டுப் பார்த்தேன் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை
வருகைக்கு நன்றி
Post a Comment