Saturday, October 14, 2006

உலகமக்கள் அனைவருக்கும்

பதினான்கு வருடங்களின் முன் என்னால் எழுதப்பட்ட மற்றுமொரு கவிதை. படமும் நான வரைந்ததே. பாரிஸ் ஈழநாட்டில் பிரசுரமாகியிருந்தது. படத்தில் சில மாற்றங்களுடன் நிறவெறிக்கெதிரான பிரச்சாரத்திற்காக பொது அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டது.



Photobucket - Video and Image Hosting

10 comments:

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

கவிதையும் படமும் நல்லாயிருக்கின்றது. என் மனதில் தோன்றிய ஒரு சிறு கருத்து ஒரு சந்தத்துக்கு உட்பட்டு வரும் இந்தக்கவிதையின் இறுதியடி மட்டும் சற்று சந்தம் விலகி இருக்கின்றது. "ஒத்ததல்லோ" விற்கு பதில் "ஒன்றல்லோ" அல்லது இன்னும் பொருத்தமான இன்னொரு சொல் உபயோகித்திருந்தால் நல்லது என்று நினைக்கின்றேன்.

தனேஸ் said...

நன்றாக இருக்கிறது. கவிதையும் ஓவியமும்.

சின்னக்குட்டி said...

ஆகா...நம்ம மலை நாடர் படம் எல்லாம் வரைவாரா... பாரட்டுக்கள்..

சிரித்திரனில் கார்ட்டுன் மூலம் சிந்திக்க வைத்தது... இன்றும் அழியாத கோலங்களாக இருக்கிறது..

கார்ட்டூன் பதிவுகள் போடுங்கள் மலை நாடன்.... நேரமிருந்தால்.... அதற்கு முதல் ரசிகனாய் எப்பவும் இருப்பான் இந்த சின்னக்குட்டி விசிலடித்து கொண்டாட

மலைநாடான் said...

பிரபா!
தாமதமான கருத்துப் பகிர்வுக்கு மன்னிக்கவும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள திருத்தம் சரியென்றே நானும் கருதுகின்றேன்.

தங்கள் கருத்துக்கும், கரிசனத்திற்கும் நன்றி!

மலைநாடான் said...

காண்டீபன்! நெல்லி!

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி

மலைநாடான் said...

சின்னக்குட்டி!

எனக்குப்பிடித்தவைகளில் ஓவியமும் அடங்கும். மற்றும்படி நான் ஏதோ வரைவேன் ரகம்தான்.

சிரித்திரன் சிவஞானசுந்தரம் எனக்கும் பிடித்தமான கலைஞரே. அவருடைய கார்டுன்கள் அற்புதமானவை.

புலத்தில் எனக்குப்பிடித்த எங்கள் ஓவியர் யார் தெரியுமா? தமிழ்மணத்தில் வலைபதிவு செய்யும் மூனாதான். இதுவரை கவனிக்கவில்லையென்றால் கவனித்துப்பாருங்கள்.

Anonymous said...

கவிதையும் படமும் சூப்பர்.

Piran

மலைநாடான் said...

பிரண்!

உங்கள் பாராட்டுக்கு நன்றி. ஆனால் உங்களைப்போன்ற இளைஞர்களால் இன்னமும் சிறப்பாகச் செய்ய முடியும். அப்படி நீங்கள் செயலாற்றுவதையே நான் பெரிதும் விரும்புகின்றேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
படமும் ,கருத்தும் நன்று!!
ஒர் இடத்தில் முரண்படுகிறேன். மனிதவுடலின் இதயமும் தனித்தனி; ஓடும் இரத்தம் ஒன்றில்லை பலவாகப் பிரித்துள்ளார்கள். பெற்ற பிள்ளைக்கே சிலசமயம் இரத்தம் பொருந்துவதில்லை.அதனால் தான் இந்தக் கூத்தெல்லாம்.
"சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடல் கண்டு; சிந்தையிரங்காரடி கிளியே!!!செய்வதறியாரடி!!!;;
நூற்றாண்டுகளாக உங்கள் எழுத்துக்குத் தீனி போடுகிறார்கள். ஆனால் உங்கள் ஆதங்கத்தைச் சரியாகப் புரிந்தேன்.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யேகன்!

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இதயம், இரத்தம், குறித்த விஞ்ஞானப் பார்வைக்கும், இலக்கியப் பார்வைக்கும், வேறுபாடுகள் உண்டென்பது உண்மைதான். ஆனால் அதற்காக மனிதனை மனிதன் அடிமைகொள்ள அதை எடுகோளாக்குவது முறையல்லவே.