Monday, October 09, 2006

வானுலா

உலாத்தல் என்பது இளமைக்காலத்திற்கேயுரிய ஒரு தனித்துவம். சுற்றல், சுழட்டல், என இதற்கு வேறுவேறு அர்த்தப்பாடுகளுடன் அழைக்கப்படுதலும் உண்டு. உலாத்தல்கள் எப்போதும் உவப்பானவை.

தாயகத்தில், ஊர்கள், வீதிகள், தெருக்கள், ஒழுங்கைகள், எனச் சுழன்ற காலங்கள் மாறி, காடுகள் கரைகள் எனக் கரைந்த காலங்களுமுண்டு. எல்லாப்பொழுதுகளிலும், இன்னல்கள் நிறைந்த வேளைகளிலும், உலாத்தல்கள் என்பது, எனக்கு உவப்பானதாகவே இருந்திருக்கின்றன.

புலத்தில் உலாத்தல்கள் உயர்மலைகளில் நிகழ்ந்தபோது, அதற்கப்பாலும் உயர்ந்து உலாவரவும் ஆசைப்பட்டது மனம். அதற்குத் தேவை மனம் மட்டுமல்ல, என்பதை உணர்ந்தபோது, நெஞ்சுமூலையில் அடக்கமாக அமர்ந்துவிட்டது ஆசை. ஆனாலும் வானில் வண்ணப் பறவைகள்போல் பறக்கும் மனிதர்களைக் காணும்போது, நாமே உயரப்பறப்பது போன்ற உணர்வு வரும்.

நேற்று என்மகன் சொன்னான் " அப்பா இன்று நல்ல காலநிலை. நண்பர்கள் சிலருடன் உயரப்பறந்து உலாவரப்போகின்றேன்" என்று. சென்று வந்தவனின் உலாவிலிருந்து ஒரு சில துளிகள் உங்களுக்காகவும்....


8 comments:

வெற்றி said...

மலைநாடான்,
உண்மைதான். உலாத்தல் என்பது மிகவும் இனிமையான ஒரு விதயம். உங்கள் மகனின் வான் உலாத்தல் படங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

It is a wonderful game.
Lucky boy!
Bravo!
Johan Paris

மலைநாடான் said...

வெற்றி! யோகன்!

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

யோகன், உண்மையில் இது நல்லதொரு விளையாட்டே.

இரவு படங்களை வலையேற்றுவதில் இருந்த தாமதம் காரணமாக சில படங்களை மட்டுமே இட்டிருந்தேன். இன்று மேலும் சில படங்களைச் சேர்த்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.

நன்றி!

Anonymous said...

v.nice

கடல்கணேசன் said...

திரு.மலைநாடன்,

இந்தப்பதிவிற்கு மட்டுமல்ல..
உங்களின் பதிவுகள் சில படித்திருக்கிறேன்.. ('என் தீவிலிருந்து புறப்பட்ட டைட்டானிக்'கில் நீங்கள் குறிப்பிட்டிருந்த படகு மூழ்கி பலர் இறந்த சம்பவம் என் மனதில் இன்றும் உள்ளது.. எனது சொந்த ஊர் ராமேஸ்வரம் என்பதால் ஈழமக்களின் துயரை நன்கு அறிவேன்).

உங்கள் எழுத்து அழுத்தமானது.. அதில் உயிரோட்டம் உள்ளது.. பல பதிவுகளில் உணர்வு அனுபவமாக சொல்லப் பட்டுள்ளது..
நீங்கள் என் பதிவுக்கு வந்தது எனக்கு ஆனந்தத்தைத் தருகிறது..

உங்கள் மகன் கொடுத்து வைத்தவன். படங்கள் மிக அழகாக உள்ளன. நன்றி.

மலைநாடான் said...

கடல்கணேசன்!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
மிக அழகான படங்கள்; பூமியை ஓரளவு உயரத்தில் இருந்து பார்ப்பதே!! தனி அழகுதான். மகனது துணிவை மெச்சுகிறேன். பாராட்டுக்கள்.நம் பிள்ளைகள் வித்தியாசமாக முயல்வது;; மிக மகிழ்வே!!!
எல்லோரும் மிளகாய்த்தூள் விற்க்கக் கூடாது. வைரமும் விற்கவேண்டும்.
உங்கள் மகன் என் கணிப்பில் வைரம் விற்கிறார்.
பலே!
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

உங்கள் ஊக்கமிகு வார்த்ததைகள், அவரை நிரம்பவும் உற்சாகப்படுத்தும்.

நீங்கள் சொல்லிய எல்லோரும் மிளகாய் விற்பதில் எனக்கும் உடன்பாடில்லை.
நன்றி