Tuesday, July 11, 2006

இந்திய ஏவுகணைப் பரிசோதனை - ஒரு எள்ளல்.





சுவிற்சர்லாந்தின் மிகப்பெரிய அங்காடிகளில் ஒன்றான COOP நிறுவனம், வாரம்தோறும் ஜேர்மன், பிரெஞ், இத்தாலி, என மூன்று மொழிகளிலும், வெளியிடும் Cooperazione எனும் பத்திரிகையின் இத்தாலிய மொழிப்பதிப்பின் 2006 ம் ஆண்டு 28 வது வெளியீட்டில் இக்கேலிச்சித்திரம் வெளிவந்துள்ளது.


கேலிச்சித்திரத்தின் அடியில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி வாசகத்தின் தமிழாக்கம்: - அணுஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணைப் பரிசோதனை முயற்சியில் முதல் முறையாக இந்தியா.

சித்திரத்திலுள்ள முதலாம் விஞ்ஞானி :- எவ்வளவு முயற்சித்தும் ஏவுகணையை நீண்டதூரம் செலுத்த எங்களால் முடியவில்லையே !..

தலைப்பாகை அணிந்த இரண்டாம் விஞ்ஞானி :- இயந்திரத்துக்கு, பசுமதி அரிசியை கூடுதலாகக் கொடுத்துப் பார்த்தால் ?

நண்பர்களே!

இக் கேலிச்சித்திரம்பற்றிய உங்கள் எண்ணப் பதிவுகளை இங்கே எழுதுங்கள். உங்களிடமிருந்து வரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை, இச்சித்திரத்தை வரைந்த ஓவியருக்கு சேர்ப்பிக்க முயற்சிக்கின்றேன்.

இந்த எள்ளல் குறித்த என் எண்ணங்கள் சொல்லும் பதிவு

36 comments:

வவ்வால் said...

அது தான் மேற்கத்திய நாடுகளின் மனோபாவம், அவர்களை விட முன்னேரினால் உடனே இப்படி கிண்டல் செய்வது தான் அவர்களது பிழைப்பே. இது போன்ற ஏவுகணை தொழில் நுட்ப்பத்தில் வெகு சில நாடுகளே சாதித்துள்ளது என்பது தெரியாத அந்த பத்திரிக்கைக்கு. அமெரிக்காவின் டிஸ்கவரி கூட தான் வெடித்தது அப்படி எனில் அவர்களுக்கு ஏவுகணை செலுத்த தெரியாது என்பார்களா?

பணக்கார நாடான சுவிட்சர்லாந்திடம் கூட இந்தியாவிடம் உள்ளது போன்ற ஏவுகணை தொழில்னுட்பம் இல்லை. கார்டூன் போடுவதை விட்டு அவர்களும் ஏவுகணை தயாரித்துப்பார்த்தால் தெரியும் இதில் உள்ள கஷ்டம்.

சின்னக்குட்டி said...

பசுமதி அரிசி எப்படியிருக்கும் என்று தெரியாமாலிருக்கும் சாதரண மக்களுக்கு மலிந்த விலையில் கொடுத்து பார்த்தால் சிலவேளை நீண்ட தூரம் போகலாம்...

சனத்தின்ரை வயிறு எரிய சனத்துக்கு கொடுக்காமால் ஏவுகணைக்கு கொடுத்து ஏவுகணையை எரியவிட்டால்... எப்படி நீண்ட தூரம் போறது

Udhayakumar said...

ஒரு வகையில் சொல்லப் போனால் இது உண்மை ஆகி விட்டது. இந்த முற்ச்சி தோல்வி அடைந்ததால் இன்னும் ஒரு வருடம் ஆகும் மறுபடியும் சோதனை செய்ய. இந்த பாகிஸ்தான் எலியை நசுக்க இப்பொ இருக்கும் ஏவுகனையே போதும். ஆனலும் இந்த ஏரியா பெரியண்ணன் சீனா இப்பொழுது நிம்மதியாக சிரித்துக் கொண்டு தன் அமெரிக்க ஏற்றுமதியை தொடர்ந்து கொண்டு இருக்கும்.

Anonymous said...

மலைநாடர்!
இந்த எள்ளலையும்; ஏளனத்தையும் ஊக்கசத்தியாக எடுக்க வேண்டியது. காலத்தில் கட்டாயம்.ஐரோப்பிய அமெரிக்கர் எல்லாம் பண்பின் சிகரங்களல்ல!
கடைசியாக நடந்த உலகக் காற்பந்துப் போட்டி- "சிடான்"தாக்குதலின் தார்பரியம் கேட்டால் இரத்தம் கொதிக்கும். ஆபிரிக்கர் ஆடும்போது ;குரங்கு போல் "ஊ" எனக் சத்தமிட்டுள்ளது. இந்த இத்தாலி நரிகள்.
"இரும்பு மனிதர்" லக்சுமி மிட்டல்; தன் பிரான்ஸ் இரும்புத் தொழிற்சாலையை வாங்கும் போது ஏற்பட்ட இந்தியன் எனும் காரணத்தையொட்டிய கசப்பான அனுபவங்களை ,இந்தியா ருடேயில் கூறியுள்ளார்.
அல்லாவைப் பற்றிக் கேலிச் சித்திரம் போட்டு மகிழ்வார்கள். பத்திரிகைச் சுதந்திரம் என்பார்கள். பெண்களின் அண்ட வெயாரில் -பிள்ளையார் படம்; காற்செருப்பில் ராமர் படம்; பராசக்தி கையில் பீர் போத்தில் போட்டு அமெரிக்கனும்;ஐரோப்பியனும் விற்பார்கள். நாம் பொறுக்க வேண்டும்.
அமெரிக்க,ரஷ்ய விண்கலங்களும் விழுந்துள்ளன. அதை மறைப்பார்கள்.
இவர்கள் இப்படித் தான்; தங்கள் ஓட்டை தெரியாதவர்கள்.
யோகன் பாரிஸ்

நாகை சிவா said...

சுவிஸ் நாடு.
அடுத்தவன் திருட்டு தனமாக பணம் கொண்டு வந்து தன் நாட்டில் சேமிப்பதற்கு ஊக்கப்படுத்தும் ஒரு நாடு அது. அது எல்லாம் இந்தியாவை கிண்டல் அடிக்குது. அந்த நிறுவனத்தை எழுதி வைத்துக் கொள்ள சொல்லுங்கள். அணுஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா வெற்றிக்கரமாக கூடிய விரைவில் பரிசோதித்து காட்டும் என்று.(அதிகப்பட்சம் 2008க்குள்)
தான் மட்டுமே நல்லா இருக்க வேண்டும், அல்லது தாங்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற எண்ணம் எப்பொழுது ஐரோப்பா நாட்டை சேர்ந்தவர்களிடம் உண்டு. அதற்கு மேலும் ஒரு உதாரணம்.

Anonymous said...

சிந்திக்க வாண்டிய சித்திரம். ஏவுகணை ஓட்டுனரைப் பாருங்கள். மக்களின் நிலை அப்படி.

மணியன் said...

இதற்கு கோபப்பட்டால் நமக்கு நகைச்சுவை உணர்ச்சி இல்லை என்பார்கள். நமது நகைச்சுவை உணர்ச்சியை அவர்களை வைத்து கார்ட்டூன் இட்டு காண்பிக்க வேண்டியதுதான் :
சுவிஸ்1: இது என்ன,கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் ஐரோப்பாவின் ஆதிக்கம் என்கிறார்கள், நாம் ஆடுவதில்லையே!
சுவிஸ்2: ஆமாம், நன்றாகத் தூக்கம் வராதவர்களின் விளையாட்டு அது. ஒருவேளை சீஸும் சாக்லெட்டும் சாப்பிடாதிருந்தால் தூங்கும் நேரம் குறையுமோ என்னவோ ?

இலவசக்கொத்தனார் said...

விட்டுத்தள்ளுங்க. அவங்க சொல்லறதுனால நாம முன்னேறாம இருக்கப் போறது இல்லை. சும்மா சிரிச்சுக்கிட்டே போகணும்.

மணியன், :-D

Santhosh said...

இவர்களுக்கு விடை சொல்வோம் வார்த்தைகளில் அல்ல அடுத்த ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி. அப்படியே சொல்லுங்கள் திருட்டுப்பணத்தில் கொழிக்கும் நாடு அல்ல எங்களது என்று.

கைப்புள்ள said...
This comment has been removed by a blog administrator.
மலைநாடான் said...

கைப்புள்ள நீங்க எழுதிய பதிவில் இருந்த சுட்டி முகவரி நீளமாக இருந்ததால்
வார்புருவை குழப்பியது. அதனால் அதை பிரதி செய்து பதிந்திருக்கின்றேன். தவறாக என்னிவிடவேண்டாம்

கைப்புள்ள இப்படிச் சொன்னார்:

அடுத்தவர் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க மாட்டாத ஒரு சாராரின் கேலிச் சித்திரம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஏவுகணையைச் செலுத்துவதாக சித்தரிக்கப் பட்டிருக்கும் அந்த மனிதனைப் பாருங்கள்...மெலிந்த தேகமும், தாடியும், அரை நிர்வாணமாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறான். ஏழை நாடான உங்களுக்கு எதுக்கடா ஏவுகணை எல்லாம் என்று எள்ளியிருக்கிறார் கேலிச்சித்திரத்தை வரைந்தவர். என்ன தான் 'Freedom of expression' என்று அவர்கள் சப்பைக் கட்டுக் கட்டினாலும் இக்கேலிச் சித்திரம் "is in bad taste" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இம்மாதிரியான ஏவுகணைகளைச் செலுத்தக் கூடிய cryogenic engines தொழில்நுட்பமும் இந்தியர்களிடத்தில் உள்ளது. உலகின் ஐந்தாறு பணக்கார நாடுகளிடம் மட்டுமே இத்தொழில்நுட்பம் உள்ளது. கீழே உள்ளச் சுட்டிகளைக் காணுங்கள்.

http://www.goodnewsindia.com/
index.php/Supplement/article/340/

http://www.goodnewsindia.com/
Pages/content/institutions/isro.html



நாகை சிவா கூறியதை நானும் வழிமொழிகிறேன். ISRO என்ற இந்த ஸ்தாபனத்தின் வளர்ச்சியை வரும் நாட்களில் ஸ்விஸ் நாட்டவரைக் கவனிக்கச் சொல்லுங்கள். அதற்குப் பின்னரும் கேலிச்சித்திரம் வரைகிறார்களா என்று பார்ப்போம்.

July 11, 2006 3:26 PM

கைப்புள்ள said...

//தவறாக என்னிவிடவேண்டாம்//

இல்லை மலைநாடான். தவறாக எண்ண ஒன்றும் இல்லை. தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

Machi said...

கார்ட்டூனில் தவறு. அது இப்படி இருக்க வேண்டும்.

சித்திரத்திலுள்ள முதலாம் விஞ்ஞானி :- எவ்வளவு முயற்சித்தும் ஏவுகணையை நீண்டதூரம் செலுத்த எங்களால் முடியவில்லையே !..

தலைப்பாகை அணிந்த இரண்டாம் விஞ்ஞானி :- இனிமே சுவிஷ் கடிகாரம் பார்த்து ராக்கெட் விட கூடாது.
இனிமே சுவிஷ் கடிகாரம் பார்த்து ராக்கெட் விடாதிங்க அது தேவையான நேரத்தில் சரியாக மணி காட்டாது. தெரியுமா, சேலஞ்சர் 7 பேரோட கடலுக்குள் போனதுக்கு காரணம் சுவிஷ் கடிகாரதில் மணி பார்த்து அமெரிக்கர்கள் ராக்கெட் விட்டது தான் நாசா வில் கேளு சொல்லுவாங்க.

(Timing missed that's why rocket failed)

நாமக்கல் சிபி said...

இந்திய ஏவுகணைமீது அவர்களூக்கு நம்பிக்கை அவ்வளவுதான் என்றால் Testingகு அவர்கள் நாட்டையே டார்கெட் வைக்கலாம். பாசுமதியோட பவர் எப்படினு தெரியும்.

Muse (# 01429798200730556938) said...

இந்த ஒன்றை மட்டும் வைத்து முழுவதும் முடிவு செய்துவிட முடியாது. மற்ற விஷயங்களில் அவர்களது கருத்து என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது எப்போதும் இந்தியாவை மட்டம் தட்டுகிறார்களா என்று பார்த்தே முடிவு கட்ட வேண்டும். அங்கனமில்லாமல் இது போன்ற கார்ட்டூன்கள் எப்போதாவது ஹாஸ்யத்திற்க்காக வருமானால், சிரித்துக் கொண்டு போவதுதான் நமது தெளிந்த மனநிலையைக்காட்டும். இல்லாவிட்டால் ஃபத்வா உலகில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

Costal Demon said...

எத்தனையோ சாட்டிலைட்டும், ஏவுகனைகளும் வெற்றிகரமா செலுத்தினோமே அப்ப பாராட்டி கார்டூன் போட வேண்டியதுதானே... அல்ப புத்தி, அல்ப சந்தோசம்

மலைநாடான் said...

/அது தான் மேற்கத்திய நாடுகளின் மனோபாவம், /

வணக்கம் வவ்வால்!

உங்கள் கூற்றில் உண்மையில்லாமல் இல்லை

மலைநாடான் said...

சின்னக்குட்டி!

உங்கள் எண்ணப்பாடு உயர்வானதே. கருத்துக்கு நன்றி.

மலைநாடான் said...

இந்த ஏரியா பெரியண்ணன் சீனா இப்பொழுது நிம்மதியாக சிரித்துக் கொண்டு தன் அமெரிக்க ஏற்றுமதியை தொடர்ந்து கொண்டு இருக்கும்

உதயகுமார்!

அரசியல் ரீதியான உங்கள் நோக்கு சரியானது என்றே கருதுகின்றேன்.

ரவி said...

இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என்றுதான் பொருள்...

அறிந்தோ அறியாமலோ அவங்க புத்தகத்தில இந்தியாவைப்பத்தி நல்லதாவோ கெட்டதாவோ எழுதவேண்டி இருக்கு...

சந்தோஷப்படவேண்டியதுதான்.

Amar said...

//அணுஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணைப் பரிசோதனை முயற்சியில் முதல் முறையாக இந்தியா.
//

மிக தவறான தகவல்.

ஏற்கனவே இரானுவத்தில் சேர்க்கபட்ட அக்னி-I-SR மற்றும் அக்னி-2 ஏவுகனைகள் அணுகுண்டுகளையும், தேவைபட்டால் மலர்களையும் அதிகபட்சம் 3000 கி.மீ தூரம் வரை எடுத்து செல்லும்.

கைப்பு அன்னன், கிரியோஜெனிக் என்ஜின்களை பற்றி சொன்னார்.அவைகளுக்கும் அக்னி ஏவுகனைகளுக்கும் சம்பந்தமில்லை.அவை செயற்க்கைகோள் ஏவ பயன்படுத்தபடும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்களில் பயன்படுத்தபடுபவை.

மேலும் இன்றுவரை நாம் ரஷ்ய கிரியோஜெனிக் என்ஜின்களை தான் பயன்படுத்தி வருகிறோம்.நம் நாட்டில் தயாரிக்கபடும் என்ஜின்கள் அடுத்த ஆண்டு தயாராகலாம்.

இவைகளை தவிர கைப்பு சொன்னதில் எனக்கும் முழு உடன்பாடு,

மலைநாடான் said...

யோகன்!

உங்கள் கூற்றுக்கள் மறுக்கமுடியாதவை

மலைநாடான் said...

நாகைசிவா!

தங்கள் ஆக்ரோசமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

மலைநாடான் said...

பெயர் குறிப்பிடா நண்பரே!

நீங்கள் சித்திரத்தை உண்ணிப்பாகக் கவனித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

மலைநாடான் said...

மணியன்!

நீங்கள் சொல்வது போல்தான் நானும் சொல்வதுண்டு. அதிலும் நீங்கள் சொல்லிய ஜோக் இம்மியும் பிசகாமல் அப்படியே சொல்லி, என் பிள்ளைகளிடம் திட்டும் வேண்டி இருக்கின்றேன். இது ஒரு ஆச்சரியமான ஒற்றுமை

மலைநாடான் said...

இலவசக்கொத்தனார்!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மலைநாடான் said...

சந்தோஷ்!
நிச்சயம் முயற்சி திருவினையாக்கும்.

மலைநாடான் said...

//இக்கேலிச் சித்திரம் "is in bad taste" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. //

கைப்புள்ள!

நீங்கள் என் பதிவுக்கு வருவது இதுதான் முதற் தடவை என நினைக்கின்றேன். ஆனால் நான் உங்கள் பதிவுகள் பலவும் பார்த்துள்ளேன். அப்போதெல்லாம் கைப்புள்ள ஒரு வெளையாட்டுப்புள்ள என்று நினைப்பதுண்டு. இப்போ சொல்கின்றேன் கைப்புள்ள ஒரு பொறுப்பான தல என்று
:-))

மலைநாடான் said...

குறும்பன்!

நீங்கள் குறிப்பிட்ட தகவல் எனக்குப் புதியது. தகவலுக்கும் கருத்துக்கும் நன்றிகள்

மலைநாடான் said...

வெட்டிப்பயல்!

நீங்க விவகாரமான ஆள்போல..:-)

வருகைக்கு நன்றிங்க

மலைநாடான் said...

மூசே!

நியாயபூர்வமாகச் சிந்தித்திருக்கிறீர்கள். நண்பர்கள் கருத்தாடலின் இறுதியில் இது குறித்த ஒரு தொகுப்பினைத் தருவேன். பார்த்துச் சொல்லுங்க

மலைநாடான் said...

ராம்ஸ்!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மலைநாடான் said...

செந்தழல் ரவி!

உங்கள் கருத்துக்கு நன்றி

மலைநாடான் said...

சமுத்ரா!

இத்துறை பல தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி.

Anonymous said...

this has to be taken seriously...they dont have to appreciate the efforts we take..they can atleast stop degrading our efforts...

யாத்ரீகன் said...

Looking at the half naked phakir sitting on the missile, shows that they still believe India is full of Snakes,Dancing ropes and Magical Saints..

It's them who has to remove thier blindfold and ignorance.

Our answers will be in Action, when the next missile is on space.