பாடல்: ஆடுகின்றான் கண்ணன்..
பாடியவர்: சிறிநிவாஸ்
இசை: சத்யா
பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது என்று கேட்கின்றீர்களா? அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு உதவித்தகவல். சிலகாலங்களுக்கு முன், தமிழ்நாட்டில் கணவன்மார்களுக்கு வெறுப்பினைத் தந்திருக்கக் கூடிய பாடல். உண்மையில் நல்ல இசைக் கோப்புடனான பாடல். என் குடும்பத்தில் அனைவர்க்குமே பிடித்தபாடல். பாடலைக் அருகேயுள்ள Stickam player ல்
3 வது பாடலைக் கேளுங்கள்.
8 comments:
மிகவும் நன்றாக இருந்தது! நன்றி!
நன்றி SK!
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. பாடல் பற்றிச் சொல்ல சில விடயங்களுண்டு. சற்றுப் பொறுத்திருங்கள்.
என்னுடைய ப்ளாகில் கமெண்ட் மொடெரேசன் செய்துள்ளேன் ஆனாலும் மறுமொழி திரட்டியில் காணவில்லை என்ன செய்வது? விளக்கவும்
மகேந்திரன்!
நீங்கள் ஏன் என்னிடம் இக் கேள்வியைக் கேட்டீர்களோ தெரியாது. ஆனால் உங்கள் சிரமம் புரிகிறது. நானும் பட்டு வந்தவன்தானே. கீழே காணும் முகவரியில் உள்ள பதிவில் உங்கள் குறையினை பின்னூட்டமாக இடுங்கள். தமிழமணநிர்வாகிகள் விரைவில் ஆவன செய்து தருவார்கள்
நன்றி!
http://thamizmanam.blogspot.com/
மலை நாடன் அருமையான பாடல்!
மிருதங்கம்,புல்லாங்குழல்;வயலின்,வீணை யுடன் பாட்டுக்கேட்டு எவ்வளவோ! நாளாச்சு!
இப் பாடலை முதல் முறையாகக் கேட்கிறேன். (உண்மை); பாடல் ;சண்டை ஓடவிட்டதால் ,ஓட விட்டு பிட்டேனோ தெரியவில்லை.
படத்தைச் சொல்லுங்கள்!!! பார்ப்போம்.
யோகன் - பாரிஸ்
This song is the title song for the SUN TV serial in the same namE!!
SK. உங்கள் ஊகம் சரியானதே. இது திரைப்படப் பாடல் அல்ல. ஆடுகின்றான் கண்ணன் தொலைக்காட்சித் தொடரின் தலைப்பபுப் பாடலிது. இத்தொடரை நாம் பார்ப்பது இல்லை. ஆனால் இந்த பாடலை மட்டும் ரசிப்போம்.
யோகன்!
நீங்கள் சொல்வது மிகமிகச் சரி. இப்பாடலினை மெருகேற்றுவது வாத்தியங்களின் அபரிமிதமான கூட்டு. அந்தப் புல்லாங்குழல் மிக அழகாக வருகிறது. தாளவாத்தியங்குளும்தான், சத்யாவின் இசையும், சிறிநிவாஸின் குரலும், குறிப்பிடத்தக்கவை.
சத்யா என்ற இவ்விளங்கலைஞன்தான் பிரபலமான ராகமாலிகா தொலைக்காட்சி இசைநிகழ்ச்சியின் இசையமைப்பாளர் என்று நினைக்கின்றேன்.
நன்றி!
Post a Comment