Monday, May 29, 2006

கெல்வெத்தியாவின் முன்னால் தமிழீழத்தின் உரிமைக்குரல்



29.05.2006 பிற்பகல் 2.00 மணிக்கு சுவிற்சர்லாந்து பாராளுமன்றமான கெல்வெத்தியா விற்கு முன்னால், கொட்டும் மழையில் திரண்டெழுந்த தமிழீழ மக்கள், தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். வருட இறுதிப்பரீட்சைக்காலமாகவும், கடமைநாளாக இருந்த போதும், ஆயிரக்கணக்கில் குழுமிய மக்கள் மத்தியில், சுவிஸ் பசுமைக் கட்சியின் தலைவி, பேராசியர் ஜான் மரிய ஜுலியா, உட்பட பலர் உரையாற்றினார்கள். இளைய தலைமுறை உறுப்பினர்களால் சுவிஸ் மொழியிலும், தமிழ்மொழியிலும், உரிமைக்குரல்பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுவிஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சில நம்பிக்கைக் கூற்றுக்களும் வாசிக்கப்பட்டது.

4 comments:

Anonymous said...

பதிவுக்கு நன்றி... மலைநாடான்..

வசந்தன்(Vasanthan) said...

சுவிஸ் பதிவுக்கு நன்றி மலைநாடான்.
இம்முறை எதிர்பார்த்தது போல் எல்லா இடமும் சிறப்பாகவே நிகழ்வுகள் நடந்துள்ளன.

குமரன் (Kumaran) said...

உரிமைக்குரலுக்கு என் ஆதரவினைப் பதிவு செய்கிறேன் மலைநாடான்.

மலைநாடான் said...

நண்பர்களே!

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள்