விடுதலைப்போராட்டத் தளங்களில் கலைஞர்கள் பங்கு இன்றியமையாதது. உலகின் பல்வேறு கலைஞர்களது உணர்வுபூர்வமான பங்களிப்புப் படைப்புக்கள் வரலாற்றுச் சான்றாகவும், வளரும் போராட்டங்களுக்கு வாழ்த்துக் கூறுபவையாகவும் இருக்கின்றன.
இன்று உலகின் பலபாகங்களிலும் நடைபெறும் ஈழத்தமிழர்களின் உரிமைக்குரல் போராட்டத்திற்காக, எங்கள் கலைஞன் வர்ண. ராமேஸ்வரன் தன் மாணவர்களுடன் சேர்ந்து, தயாரித்து வழங்கிய இரு பாடல்கள் இப்போதுதான் தனிமடலில் கிடைக்கப்பெற்றேன்.
இந்நிகழ்வுபற்றி ஏலவே சந்திரவதனாவும் வேறுசில நண்பர்களும் பதிவுகள் இட்டுள்ளார்கள். புலத்தில் எங்கள் தேசியவிடுதலைகுறித்த ஒரு மக்கள் செயற்பாட்டில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் தெரிந்திருந்தும், ஐரோப்பிய தொழில்முறை இயந்திரம் இடம்தராததால் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத உணர்வினை, இப்பாடல் பதிவின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
எங்கள் கலைஞனின் இந்தப்பாடலை, உரத்துப்பாடவும் கேட்கவும் அருகேயுள்ள Stickam Player ல் 1, 2 வது பாடலை தெரிவுசெய்யுங்கள்.
1 வது பாடல்: கூடுவோம் கூடுவோம்
பாடல் வரிகள்: பொன்னையா விவேகானந்தன்
இசையும் குரலும்: வர்ண. ராமேஸ்வரன்
தயாரிப்பு: C.T.R. வானொலி கனடா
2 வது பாடல்: தமிழா தமிழா
பாடல் வரிகளும் இசையும்: வர்ண. ராமேஸ்வரன்
பாடல் குரல்: வர்ண. ராமேஸ்வரனும் மாணவர்களும்.
தயாரிப்பு: தமிழர் கலை பண்பாட்டுக் கழகம். கனடா
கனடா தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினர்க்கும், கனடா C.T.R வானொலியினர்க்கும்,வர்ணம் கலைக்கூடத்தினர்க்கும் எம் நன்றிகள்.
5 comments:
நண்பர்களு!
இன்றுகாலையில் ஒரு பாடலுடன் பதிவு செய்யப்பட்டிருந்த இப்பதிவினை, மேலும் ஒரு பாடலும், குறிப்புக்களும் இணைத்து மீளப் பதிவு செய்துள்ளேன்.
நன்றி!
பாடல்களை கேட்ட தக்கதாக ருந்தது.... நன்றி முதன் முதலில் தங்களின் பதிவிலேயே கெட்டேன்
பாடல்களைப் பகிர்ந்ததுக்கு நன்றி.
யாரொ!
நன்றி. இபர்பாடல்கள் நேற்றுக்காலையில்தான் எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்தன.
வசந்தன்!
வருகை்கு நன்றி.
Post a Comment