Thursday, October 25, 2007

யாருக்காக ? ஆனந்தசங்கரி!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை, விசுவாசிப்பவர்கள், விவாதிப்பவர்கள், என எல்லோரும், அநுராதபுர விமானப்படைத்தாக்குதல் குறித்து அதிர்ந்து போன தினங்கள் இவை. இருபத்தியொரு உறவுகளின் தியாகத்தில் உணர்வுகள் உறைந்துபோன தருணங்களிவை.


இந்தத் தாக்குதல் குறித்தும், தாக்குதலுக்குப் பின்னும் ...

படைத்துறை எதிர்பாராத நேரத்தில் நடந்த தாக்குதலிது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்

- அமைச்சரும் பாதுகாப்பு விவகார, அரசாங்க பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல .

அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல்

-இந்திய இராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் பி.இராமன்.

தாக்குதல்களை நடத்தியவர்களின் சடலங்கள் என்றாலும் அந்த சடலங்களுக்கு நாம் உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். சடலங்களை நிர்வாண கோலத்தில் எடுத்துச் செல்லாது மனித தன்மையுடன் எடுத்து சென்றிருக்கலாம்

- அநுராதபுரம் ஆயர் நோபர்ட்

வலைப்பதிவுகளில் புலிகளை விமர்சிக்கும் ஜனநாயகம் எனும் பதிவர் கூட இப்படி அழுதிருக்கிறார்.

புலிகள் விவகாரத்தில் முந்திரிக்கொட்டைபோன்று அறிக்கைவிடும் நாடுகளோ அல்லது ஏகாதிபத்தியத்தின் ஏககாவலர்களோ அறிக்கைவிடாமல் அடக்கிவாசிக்க,

அனுதாரபுரம் வான் படைத்தளத்தின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மிக வன்மையாகக் கண்டனம் செய்கிறது

- வீ. ஆனந்தசங்கரி

எங்கள் நிலங்களில் குண்டுகள் வீசி, எத்தனையோ தமிழ்மக்களின் உயிர்களைக் காவுகொண்ட விமானப்படைகளின் தளம் தாக்குதலுக்குள்ளானதற்காக, உங்கள் கோடிக்குள் குண்டுவிழுந்ததுபோல் கண்டனக்குரல் எழுப்பியுள்ளீர்களே.

ஆனந்தசங்கரி நீங்கள் அழுவது யாருக்காக ?

14 comments:

Anonymous said...

அவன் அழுதான் யாருக்காக?
தன் தலைமையில்லா தமிழினம் வெண்றுவிடுமோ என்ற ஆதங்கத்தில் அழுதிருப்பான்,
தன் எசமான கோபம் தன்மீது திரும்பி விடுமோ என அழுதிருப்பான்.

வெற்றி said...

மலை,
ஆனந்தச்சங்கரியரை எல்லாம் நீங்கள் சீரியசா எடுக்கிறீங்களோ! :-))

புதுவை இரத்தினதுரை எழுதிய கவிதை ஒன்றின் சில வரிகள் கீழே:


தமிழனே!
இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான்
கண்ணீர் வடிப்பாயோ?
விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே
நரகிற் கிடந்துழலும் விதியை
எவனடா எழுதினான் உன் தலையில்?

விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம்
கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும்.
நீ படை வைத்து அரசாண்ட காலத்தில்
இன்று சந்திரனுக்குச் சென்று
சாதனை படைத்தானே,
அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.

செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன்
இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான்.
கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும்
மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய்.
நீ கப்பலேறிக் 'கடோரம்' வென்றபோது
ஜப்பான்காரன் "எக்ஸ்போ" நடத்தவில்லை.
தடிக்குச்சிகளால் தட்டிகட்டித்தான் வாழ்ந்தான்.

என்ன செய்வது?
எல்லோர் தலையிலும் பிரம்மன் கையால் எழுதினான்.
உன் தலையில் மட்டும்
அழிக்க முடியாதபடி ஆணியால் எழுதிவிட்டான்.
இடைக்கிடைதான் நீ எழுவது வழக்கம்.
அப்போது கூட அடித்து விழுத்தப்படுவாய்.
அதுவும் அன்னியராலல்ல...
உன்னவரால்.

நீ நிமிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு நேரத்திலும்
நெஞ்சுக்குப் பாய்கிறதே நெருப்புக்குண்டு.
குண்டெறிபவன் வேறு யாருமில்லை.
கூடப்பிறந்தவனென்பதைக் குறித்துக் கொள்.

கராம்பும், கறுவாவும் வாங்கத்தான்
பீரங்கியோடு புறப்பட்டு வந்தான் வெள்ளைக்காரன்.
வந்தவனுக்கு உந்தன் வரலாறு தெரிந்ததும்
வல்லமையைக் காட்டி வரி கேட்டான்.

பாஞ்சாலங் குறிச்சியில் மட்டும்
ஒருவன் பணிய மறுத்தான்.
வெள்ளைக்காரனால் அவனை விழுத்த முடியவில்லை.
பக்கத்திருந்த பாளையக்காரன்
அவனும் தமிழன்,
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்
காட்டிக்கொடுத்துக் கழுத்தை முறித்தான்.

வன்னியிலும் இதே வரலாறுதான்.
வெள்ளைக் கொக்குகளுக்கு எதிராக
கறுப்புக் காகமொன்று கச்சை கட்டியது.
துரத்தித் துரத்தி கொக்குகளைக் கொத்தியது காகம்.
வன்னியனை வளைத்துப் பிடிக்க முடியவில்லை.
காட்டிக்கொடுத்தது இன்னொரு காக்கை
அவனும் தமிழன்.
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்.

அத்துடன் முடிந்ததா அந்த வரலாறு?
இல்லையே... இன்றும் தொடர்கிறது.
எல்லோரின் தோள்களிலும்
இன்று சூரியன் சுடர்கிறது.
உன் தலையில் மட்டும் இன்னும் இருட்டுத்தான்.
என்ன விதியடா உனக்கு?

Anonymous said...

21 மனித உயிர்களால் தாக்கியழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹெலிகெப்டர்கள் மற்றும் பயிற்சிரக, வேவுபார்க்கும் சிறிய விமானங்களை இலங்கை அரசாங்கம் இன்னும் ஒரு சில மாதங்களில் திருப்பி வாங்கிக்கொள்வார்கள். ஆனால் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட 21 மனித உயிர்களையும் தாக்குதலின்போது கொல்லப்பட்ட 14 மனித உயிர்களையும் ஒரு போதும் ஈடுசெய்ய முடியாது. இந்தவகையான தாக்குதலினால் இலங்கை விமானப்படையின் வன்னிமீதான குண்டு வீச்சு நிற்கப்போவதில்லையென்பதை தாக்குதலின் பின்னான கடந்த 4 நாட்களாக இலங்கை விமானப்படை நிருபித்தவண்ணமுள்ளனர்.
தற்கொலையென்பது ஒரு முட்டாளின் காரியம். ஒருவனின் தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவன் ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்தவனாக சட்டத்தால் கருதப்படுகின்றது. புலிகளின் தலைவரிலிருந்து இவ்வாறான கரும்புலிகளின் தற்கொலைகளை ஆதரிக்கும் புலிகளின் கீழ்மட்டம்வரை இதுவரை நடந்துமுடிந்த கரும்புலிகளின் தற்கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்களாக கருதப்பட வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்கொலைப் படையென்பதை நாகரீக சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. தற்கொலைப் படையென்பதின் உருவாக்கத்தில் காட்டுமிராண்டிகளே ஈடுபடுவார்கள் என்பதை தமிழ் சமூகம் உணராதவரை தமிழ் சமூகத்திற்கு விடிவே கிடையாது.

திவாகர்

Mayooran said...

திவாகர் என்ற இந்த நபர் ஆனந்த சங்கரியின் இடத்துக்குப் போட்டியிடுகிறார் போல தெரிகின்றது சகல பதிவுகளிலும் அவர் ஒரே கருத்தையே விதைக்கின்றார் அவரது கருத்தை பிரசுரிக்காத உங்களுக்கு நன்றிகள்

மலைநாடான் said...

வெற்றி!

அவரை நான் சீரியசாக எடுக்கவில்லையென்டாலும், சீரியசாக எடுப்பவர்கள் இல்லையென்று சொல்லிவிட முடியாது. அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.


அனானி!
உங்கள் பகிர்வுக்கு நன்றி.

தமிழ்நதி said...

மலைநாடன்!ஆனந்தசங்கரி ஐயா யாருக்காக அழுவாரென்பதை கடந்தகாலம் நமக்குச் சொல்லித்தரவில்லையா என்ன...? விட்டுத் தள்ளிவிட்டு வேலையைப் பார்ப்பதுதானே விவேகம்.

Anonymous said...

yoyooooooooooo thoooooooo Mr.Thivaakar,

amaithiyai irunthu iavlavum ilanthudom....... Are you mad??? paithiyam paithiyam........

enaku thaanda thriyum singalavn da thuvesam....

sari naan ketkiran enna thaan thamil makkalai seiya solrai?????

Anonymous said...

இவங்கள் புலியள் பாக்கிற வேலை.பேசாமல் அந்தாளுககும் ஒரு சீட்டை குடுத்திருக்கலாம்தானே..அப்ப அழத்துவங்கின மனுசன் இன்னும் நிப்பாட்டேல்லை.

சோமி said...

அவசியமான பதிவுதான்.
இந்திய ஊடகவிலாளர்கள் அதிகம் கலந்துகொள்லும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் சங்கரி ச்ந்திப்பும் ஒன்று.

இப்போதாவது அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

சகிப்புத்தன்மைக்கு(!?) ஐ.நா வின் பரிசு பெற்றவர் ஏன் புலிகள் மீது மட்டும் உணர்ச்சிவசப் படுகிறார்

Anonymous said...

mutaal thanamaga ularathirgal mr thivagar.

Anonymous said...

சிங்களம் மக்களில் பல புத்திஜீவிகள் தமிழர்களின் நியாமான கோரிக்கைகளை நன்கு அறிவர்! அவர்களின் போராட்டத்தின் ஆதங்கத்தையும் அறிவர்! ஆயினும் வெளிப்படையாக இதை அறியா சிங்கள மக்களிற்கு எடுத்துரைக்கமாட்டார்கள்! அவர்களின் மொழிப்பற்றும், மதப்பற்றும, அவர்கள் நேசிக்கும் மக்களும் இதற்கு காரணம்! ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நியாயம் இருப்பதாக அவர்கள் பக்கம் கொடிபிடிக்கும் சில தமிழ் புத்தி(இல்லா)ஜீவிகள் வெளிப்படையாகவே இப்படி கண்டனங்களும் பிரச்சாரங்களும் மேற்கொள்வார்கள்! இதை நிச்சயமாக வெளியுலகம் சீரியஸாக எடுத்து அக்கருத்துக்களும் முக்கியத்துவம் கொடுக்கும்! இதனால் தான் தமிழினம் தலை நிமிர நெருங்கிவரும் காலம் தூரச்செல்கிறது! என்று அழியும் இந்த எட்டப்பன் வம்சாவளி! எட்டிப்பிடித்து அழிப்பவர் யார்?

Anonymous said...

திவாகருக்கு மறுமொழி,
மேலோட்டமாகப் பார்த்தால் திவாகர் தீவிர மனித நேயராகத் தோற்றமளிக்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல.
தற்கொலை காட்டுமிராண்டித்தனம் என்றால், இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொல்வதற்கு என்ன பெயர்?
இராணுவத்தில் பணிக்குச் சேர்வதே தற்கொலைக்கு ஒப்பானதுதான். இதில் தற்கொலைப் பிரிவுக்கும் மற்ற பிரிவுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு இருக்கிறது? கரும்புலிகளைக் கண்டிக்கும் திவாகர் அனைத்துவகையான ராணுவ நடவடிக்கைகளையும் கண்டிக்கட்டும்.

மலைநாடான் said...

திவாகர்

உங்களுக்கான பதில் இங்கே பின்னூட்டங்களில் வழங்கப்பட்டுவிட்டதென நம்புகின்றேன்.

தமிழ்நதி!

நாமறியாத ஆனந்தசங்கரியல்ல. ஆனால் இங்கே ஒரு சிலருக்கு அவரது கபடத்தை அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.

மலைநாடான் said...

வித்யா!

நீங்கள் சொல்வதை அவதானித்தேன். நன்றி