Wednesday, September 05, 2007

நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள்.


சற்று மெளனம் காத்தபின், மறுபடியும் வரும்போது, அதிகம் பேசியிருப்பது தெரிந்தது. உறவொன்றின் உயிரிழப்பு, உற்றவனின் உடல் இயல்மறுப்பு, என்பன தந்த அதிர்வுகளால், எழுதாது, மோனத்திருந்த போதும், அவ்வப்போது உங்கள் குரல்கள் அதிர்ந்தது அறிவேன். இவையெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டோ என் எண்ணியவாறு, அறிந்தவனுடன் உரையடிக்கொண்டிருந்த போது, அவனின் குழந்தை நறுக்கெனச் சொன்னான், " நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள் " என்று. கணத்தில் கலகலத்து, பின் மெளனமானோம்.


எங்கள் காலப் பெரியவர்களைப் பார்த்து, என்றோ நாம் சொன்னவார்த்தைகள்தான் "நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள்". இன்று எம்மைப்பார்த்து அதே வார்த்தைகள் வீசப்படுகின்றன. யோசித்துப்பார்க்கும் போது, உண்மையொன்று புரிந்தது. எம் முன்னவர்களிடம் சொன்னவார்த்தைகளில் பொதிந்திருந்த பொருள், அதிகம் பேசுகின்றீர்கள் ஆனால் ஆக்குவது அதிகமில்லை. அதே தவறு, அதே ஆக்குதல், எங்களிடமும் போதுமானதாய் இருக்கவில்லை. ஒருவேளை இருந்திருந்தால், குழந்தை அப்பிடிக் கேட்கும் வாய்பு வந்திராதோ?


"யூ ஆர் டோக்கிங் டூ மச்.."

நித்திலா!
தலைப்பிடவும், தலைப்புள்ளடங்கவும் வகைசெய்தாய். நன்றி கண்ணா!... என்னடா செய்வது, கதைகளில் உலகளந்த பெம்மான்கள் நாங்கள். நீங்களாவது நிஜங்களில் அளந்து வாருங்கள். உலகை மட்டுமல்ல, உள்ளன அனைத்தையும்...
படம்: ரமணீதரன். நன்றி!

14 comments:

கானா பிரபா said...

நீண்ட நாளைக்குப் பிறகு சந்திக்கிறம், குறுகிய பதிவு என்றாலும் நானும் அடிக்கடி சிந்திக்கும் விடயம் இது.

அதிகம் கதைக்கிறோம், அலட்டுறோம், ஆளுக்காள் தமிழ்க்காவலர், தேசியப்பற்றாளர் என்று முழங்குகின்றோம், செயல்வீரர்கள் குறைந்து விட்டார்கள்

கொழுவி said...

//செயல்வீரர்கள் குறைந்து விட்டார்கள்//

நாங்க இருக்கிறம். :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதிகம் பேசி பேசி மற்றவர் பேசுவதையே கூட கவனிப்பதை விட்டுவிட்டேனென்று நான் வருத்தப்படும் நேரத்தில் இந்த தலைப்பைபார்த்து பயந்து போனேன்..:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
" தொப்பி அளவெனில்" , நானும் போட வேண்டியது தான்

த.அகிலன் said...

நீங்க இப்பவெல்லாம் ஏன் அதிகம் பேசுறதில்லை.....

மலைநாடான் said...

பிரபா!

ம்..நாட்கள் நீண்டுதான் போய்விட்டன. சரி அதை விடுங்க.

அதிகம் பேசுகின்றீர்கள் என்பதை அதிகமாய் பேசிச் சொல்லக் கூடாதுதானே?

மலைநாடான் said...

கொழுவி!

இருங்கோ இருங்கோ.. நல்லா இருங்கோ :)

துளசி கோபால் said...

ஆமாம். அதனால்தான் பேச்சைக் குறைச்சு, பேச நினைச்சதையெல்லாம் எழுத்துலே கொட்டிக்கிட்டு
இருக்கேனோ? (-:

மலைநாடான் said...

முத்துலெட்சுமி!

நீங்கள் குறிப்பிடும் தவறும் கூட நடக்கத்தான் செய்கிறது.

மலைநாடான் said...

யோகன்!

எம்மில் பலருக்கும் இந்தத் தொப்பி அளவாகத்தான் இருக்கும் போ..:)

மலைநாடான் said...

அகிலன்!

அதிகம் பேசாமலிருப்பது நான் மட்டுமல்லவே :)

குமரன் (Kumaran) said...

ஒற்றை வரியில் அழகாகச் சொன்னீர்கள் மலைநாடான். அதிகம் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். :-(

வசந்தன்(Vasanthan) said...

உது உங்களுக்கு இப்பதானோ விளங்கினது?

பாரதி தம்பி said...

எனக்கு அதிகம் பேசுபவர்களை ரொம்பப் பிடிக்கும். எதுவுமே செய்ய இயலாத கையறு நிலையிலிருப்பவர்கள் பேசவாவது செய்யலாம்தானே..


(இதன்மூலம் நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், 'நான் ஒரு வாயாடி பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறேன்..:)