Tuesday, March 27, 2007

Weird - வினையா விளையாட்டா ?

சிந்தாநதி , குமரன் இருவரும் என்னை இந்த தொடர்பகிரலுக்கு அழைத்திருக்கிறார்கள். இதை எவ்வளவு தூரம் சிறப்பாகச் செய்யமுடியும் என்று தெரியவில்லை. இது வினையா, விளையாட்டா? புரியவில்லை. இதற்கான விளக்கத்தை நான் விளங்கிக்கொண்ட வகையில் ஒருவித குழப்பத்துடனே எழுதுகின்றேன். எழுதப்பட்ட பதிவுகள் சிலதை வாசித்த போதும், குழப்பமான புரிதலே ஏற்பட்டது. எனக்குப் பிடித்த ஒரு விடயம், மற்றவர்களுக்கு வித்தியாசமாக அல்லது வேடிக்கையாகத் தெரியலாம் என்ற புரிதலுடன் எழுதுகின்றேன்.

மலைமுகடுகளுக்குப் போவதும், அதன் சூழலில் லயிப்பதும் எனக்குப் பிடிக்கும். அதன் மிதமிஞ்சிய ஆர்வத்தில், என்னிடம் வரும் நண்பர்களை, உறவினர்களை , வாறீர்களா மலைக்கு போகலாம் என்றழைத்தால், அவர்களும் சம்மதித்து வருவார்கள். சென்றபின் என்னை நோகடிக்கக்கூடாதென்று, பிரயத்தனப்பட்டுச் சமாளித்துக்கொண்டிருக்கும் அவர்களிடம் மலைகள்பற்றி நான் அளந்து கொட்டுவேன். அவர்களோ...
இறுதியில், இனி யாரையும் அப்படி அழைத்துச் செல்லக் கூடாதென எண்ணுவேன்.. வெறுமனே எண்ணுவேன்.

ஏரியில் படகுச் சவாரியை, அதுவும் பெடல் படகினை, ஏதோ கப்பல் ஓடுவது போன்று ரசித்துச் செய்வேன், பார்ப்பவர்களுக்கு அது சிறுபிள்ளை விளையாட்டாகத் தோன்றும்..ஆனாலும் செய்வேன். அதுபோலவே பயனிக்கும் படகுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பிடிக்கும். ஆனால் மற்றவர்களுக்கு..

வீட்டில் எல்லோரும் திட்டித் தீர்த்தாலும், மலசலகூடத்திற்குப் போகும் போது, புத்தகம், பத்திரிகை கொண்டுபோய் வாசிப்பது.

ஒவ்வொரு வருடமும் அக்கறையாக வரவு செலவுக் கணக்கெழுத ஆரம்பித்து, ஒன்றிரண்டு மாதத்தில் நின்றுவிடுவது.

தேவையென ஒரு பொருளைத் தீர்மானித்து விட்டால் வேண்டித் தீருவது.

கடைகடையாய் ஏறியிறங்கி பொருள் பார்த்து வாங்கத் தெரியாது, ஆனால் வாங்கிவரும் பொருள் தரமாயிருப்பது.

ஒரு இடத்தில் இருக்கப்பிடிக்காது, இருந்தால் இலகுவில் எழும்பப்பிடிக்காது.


எழுதத் தொடங்கினால், வாசிக்கத் தொடங்கினால், மற்றவை மறந்து போவது.

வீட்டில் ஐந்து பொருள் வாங்கிவரும்படி வழிக்கு வழி சொல்லி விட்டாலும், ஏதாவது இரண்டு பொருளை மறந்துவிட்டு வந்து நிற்பது. ஆனால் வெளியே என் ஞாபகசக்திக்குப் பாராட்டப்படும்.

சடுதியாக யோசிக்க நினைவுக்கு வந்த இவைகளுடன் நிறைவு செய்கிறேன்.

நான் அழைப்பது

சயந்தன்
வசந்தன்
வி.ஜெ. சந்திரன்
மழை.ஷ்ரேயா
கொழுவி

12 comments:

துளசி கோபால் said...

என்ன........?வியர்டு விளையாட்டை சிறப்பாச் செய்யணுமா?

சரியான வியர்டுதான் நீங்க:-)))))

சின்னக்குட்டி said...

மலைநாடன் என்று பெயரிருந்தாலே மலை ஏற பிடிக்க விருப்பம் வருமோ

கானா பிரபா said...

இன்னும் பல அந்தரங்க விஷயங்களை மறைச்சுப்போட்டியள் எண்டு பட்சி சொல்லுது ;-) கேட்டவரைக்கும் இனிமை.

காட்டாறு said...

அடடா... நமக்கும் மலை பயித்தியம் உண்டுங்க. ஆனா மலை பத்தி கத சொல்ற அளவுக்கு போகல. ஆனா hiking, treking-ன்னு ஒரு காலத்துல... போய் மலய ரசித்துக் கொண்டு இருந்தேன். இப்போ அதுக்கு நேரமில்லாமல் போயிற்று.

சினேகிதி said...

enna neengal nan invite panna ninacha aakala neengal invite panideengal :-(((((

malaiku porathu enakum pidikum...matale sinthakadi malaiku chuma chuma ellam friends oda poirukiran.

Rathodaikum porathu malai paarkathan.

apuram kaluthavali aarum pidikum.

வி. ஜெ. சந்திரன் said...

அழைத்திருக்கிறீர்கள்... இந்த வாரம் முடியுமோ தெரியவில்லை. :(

//தேவையென ஒரு பொருளைத் தீர்மானித்து விட்டால் வேண்டித் தீருவது.

கடைகடையாய் ஏறியிறங்கி பொருள் பார்த்து வாங்கத் தெரியாது, //


//ஒரு இடத்தில் இருக்கப்பிடிக்காது, இருந்தால் இலகுவில் எழும்பப்பிடிக்காது.//


:))

வசந்தன்(Vasanthan) said...

என்னையும் கூப்பிட்டிருக்கிறியள்.
விசரைக் கிளப்பாதைங்கோ.

மலைநாடான் said...

//சரியான வியர்டுதான் நீங்க//

அப்பாடா ரீச்சர் சொல்லிட்டாங்க.. பாஸாயிட்டோம். டாங்சுங்க:))

மலைநாடான் said...

சின்னக்குட்டி!

மலைபிடித்ததால்தான் மலைநாடான் என்று சொல்லியிருக்கிறேனே.

மலைநாடான் said...

பிரபா!

வாப்பு வா. வில்லங்கம் வீட்டுக்கதான் என்டிறத சரியாத்தான் போயிட்டு. பட்சிய அடக்கி வையுங்க:)

மலைநாடான் said...

காட்டாறு!
உங்களுக்கும் மலைப் பைத்தியம் உண்டா. கனபேருக்கு அதில பெரிய விருப்பம் வாறஇல்லை. ஆனால் மிக ரசிக்கத்தக்கவை மலைமுகடுகள்.
நன்றி

சிநேகிதி!

வாங்க. நீங்க கூப்பிட இருந்த ஆட்கள நான் கூப்பிட்டேனா? சரி விடுங்க அவங்க எல்லோர்க்கும் நண்பர்கள்தானே.

றத்தோட்டையில சின்ன அருவி ஒன்டும் இருக்கு தெரியுமோ? ரொம்ப வடிவான இடம்.

நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஒவ்வொரு வருடமும் அக்கறையாக வரவு செலவுக் கணக்கெழுத ஆரம்பித்து, ஒன்றிரண்டு மாதத்தில் நின்றுவிடுவது.//

மலை நாடர்!
என்ன பொருத்தம்;என்ன பொருத்தம் என்று பாடத் தோன்றுது.