Sunday, December 17, 2006

நத்தார் பாப்பாவின் கிராமம்.

நத்தார்க் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில், கலந்திருப்பது நத்தார்பாப்பாவின் வருகை. கிறிஸ்துவின் பிறப்புக்கும், நத்தார் தாத்தாவின் கதைக்கும், எதுவித தொடர்பும் இல்லையெனினும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு குதுகலத்தைத் தருவது என்பது மறுப்பதற்கில்லை.

வணிகப்பொருளாதார சமூக அமைப்பு, இயல்பு வாழ்க்கையின் மரபுக்கூறுகள் பலவற்றையும், தூக்கிச் சாப்பிட்டு ஏப்பமிட்டு நிற்கும் இக்காலத்தில்,
வெளிநாகளிலுள்ள மத்தியதர வர்க்கமும், மறுவடிவாக்கம் செய்யப்பட்ட இக் கொண்டாட்டங்களின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கி முனகிக் கொள்வது தெளிவாகத் தெரியத் தொடங்கிற்று.

வாடித்துவழும் மக்கள் கூட்டத்தை வணிகசமூகம் அவ்வளவு விரைவாக விட்டுவிடுமா என்ன? விருப்பந் தரும் விடயங்களை, அலங்காரமாகத் தருகிறது, அதனூடு நுகர்வோரை அழைத்துக் கொள்கின்றது. அப்படி ஒரு வணிகவளாகத்தின் மத்தியில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும், நத்தார் தாத்தா கிராமத்தை காணலாம் வாருங்கள்.

6 comments:

Anonymous said...

மலைநாடர்!
இந்த பாப்பா-பப்பா ; குறும்பை ரசித்தேன்.(ஈழத்தவர்கள் ரசிப்பார்கள்)
நன்கு வினைக்கெட்டுள்ளீர்கள்; இந்த அலங்காரங்களை நான் குதூகலத்துடன் விரும்பிப் பார்ப்பேன்.
குறிப்பாகப் பாரிசில் "கலரி லபயற்" வியாபார நிறுவனம்; மிகச் சிறப்பாக வருடாவருடம் செய்வார்கள்; இவை எனக்கு இலங்கை வெசாக் காலத்தையும் நினைவூட்டும்.
இவை வியாபார உலகில் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. குழந்தைகள் மிக ரசிப்பார்கள்.
இக்காலத்தில் இந்த அலங்காரங்களைப் பார்க்கச் செல்வது. அவர்கள் விருப்பப் பட்டியலில் ஒன்று!!
சலனப் படமாகப் போட்டதற்கு நன்றி
யோகன் பாரிஸ்

வெற்றி said...

மலைநாடார்,
இந்த நத்தார்த் தாத்தா கிராமம் எந்த நாட்டில் உள்ளது?

கானா பிரபா said...

நல்ல வீடியோ பதிவு, வெற்றின் கேள்வி தான் என் கேள்வியும்.

கொழுவி said...

சுச்சர்லாந்து

மலைநாடான் said...

யோகன்!
பாப்பா - பப்பா, இதில் நான் குறும்பேதும் செய்யவில்லை. இத்தாலியர்கள் போப்பாண்டவரை பாப்பா என்றுதான் அழைப்பார்கள். அதுபோலவே கிறிஸ்மஸ் தாத்தாவை, பாபோ நத்தாலே என்றுதான் குறிப்பிடுவார்கள். அந்தப்பழக்கத்திலேயே நானும் எழுதிவிட்டேன்.
வணிக மையங்களின் உள்சூத்திரம் வேறாக இருந்தபோதும், இவ்வகை அலங்காரங்களை நானும் மிகவும் ரசிப்பேன். ஒவ்வொரு விடயத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்திருப்பார்கள். இந்தப்படத்தில் கூட களைத்துத் தூக்கும் தாத்தாவைப் பாருங்கள், அவர் சுவாசிப்பது போன்று, வயிறு ஏறிஇறங்கிக் கொண்டிருக்கும். அப்படிப் பல விடயங்கள்..சின்னச் சின்னனாக நிறைய உண்டு.

//நன்கு வினைக்கெட்டுள்ளீர்கள்//

என்னைச் சொல்லிவிட்டு நீங்கள்தான் சொல் விளையாடியுள்ளீர்கள். ரசித்தேன். என்துணைவியும் சொல்லுவா நீங்கள் ஒரு வேலை மினக்கெட்ட ஆளப்பா வென்று..
ஆனாலும், ரசிக்கத் தக்க வினைக்கேடுதானே?

மலைநாடான் said...

வெற்றி!, பிரபா!

இத்தாலியிலும், சுவிஸின் இத்தாலிய எல்லைகளிலும், நத்தார் காலங்களில் சில கிராமங்களைத் தெரிவு செய்து நத்தார் கிராமங்களாக அழகுபடுத்தி, நத்தார் கொண்டாட்டங்களுக்குரிய சந்தைகள் எல்லாம் வைப்பார்கள். ஆனால் இங்கே நான் காட்டியிருப்பது, ஒரு வணிகவளாகத்தின் மத்தியில் அலங்காரத்துக்காக உருவாக்கிய மினிக்கிராமம். இது எங்கே என்பதற்குச் சிரயான பதில் சொல்லியுள்ள கொழுவி க்குப் பாராட்டுக்கள்.