Friday, December 01, 2006

என்னவென்று சொல்வது ?

இது நேற்று (30.11.2006) வெளியாகிய Corriere della sera எனும் இத்தாலியப்பத்திரிகையின் மாலைப்பதிப்பில் முதன் பக்கத்தில் பிரசுரமாயுள்ள கேலிச்சித்திரம்.






பாப்பாண்டவர் சொல்லும் வாசகத்தின் தமிழாக்கம்: '' நீயூம் இறைவனின் ஒரு ஆட்டுக்குட்டிதான் ''

இச்சித்திரம் சொல்லும் கருத்தாக்கத்தை என்னவென்று சொல்வது?

11 comments:

Anonymous said...

It is very difficult to express the meaning in words.

Good. Are you live in italy? I am from PISA, Italy.

சின்னக்குட்டி said...

இதிலை ஆச்சரிய பட தேவையில்லை... இவையின்ரை மதம் இன குரோதம் தான் இவையை திருப்பி தாக்குது......

Anonymous said...

மலைநாடான்,

பின்னாலிருப்பது மசூதியா?

இத்தாலியிலுள்ள ஒரு பத்திரிகை பாப்பாண்டவரை முட்டாளாகக் காட்டுவது ஆச்சரியமாக இருக்கின்றது.

ஓநாய் பாப்பாண்டவரைப் பார்த்து நான் ஆட்டுக்குட்டியானால் இறைவன் என்னையும் சேர்த்துத் தான் மேய்க்க வேண்டும். ஆனால் நானோ ஆடுகளை வேட்டையாடுபவன். அவருக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை? என்று கேட்டால் எப்படியிருக்கும்.

இவர் சொல்வதை எல்லாம் நாம் கேட்டுக்கொண்டிருந்தால் இன்னும் ஆடுகளாகவேயிருப்போம். அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

பி.கு - மன்னிக்கவும். நான் யேசுவை நேசிப்பவன். அவரது நேரடியான கருத்துக்களை மிகவும் விரும்புபவன். ஆனால் இன்றுள்ள எந்த ஒரு மதத்துடனும் அதன் தலைவர்களுடனும் எனக்கு உடன்பாடில்லை.

மலைநாடான் said...

படிப்பவன்!
ஓ..உலக அதிசயம் ஒன்றிற்குப் பக்கத்தில் இருக்கின்றீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் இத்தாலிக்குப் பக்கத்தில்தான்..:))

மலைநாடான் said...

சின்னக்குட்டி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

மலை நாடர்!
இவர் விவகாரங்களை விலைக்கு வாங்குபவர் போல் தான் தெரிகிறார்.போகப் போகத் தெரியும்
யோகன் பாரிஸ்

Anonymous said...

ஆடுகளுக்கு தெரியுமா இந்த சங்கதி,
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!மலைநாடரே?

NONO said...

//பின்னாலிருப்பது மசூதியா?//

முன்பு மசூதியாய் இருந்து பின் தேவாலையமாய் மாறி இப்ப அருங்காச்சியமாய் உள்ளது!!

http://en.wikipedia.org/wiki/Hagia_Sophia

படத்தில் இருப்பது இஸ்தாம்புவில் உள்ள Hagia Sofia மாதிரி தெரிகின்றது பாப்பரசரின் சமிபத்திய துருக்கி விஜயம் சம்மந்தப்பட்டதாய் இருக்கலாம்!!

வெற்றி said...

மலைநாடான்,
இதில் வேதனைப் படவோ வருத்தப்படவோ என்ன இருக்கிறது? இது இந்த கேலிச்சித்திரத்தை வரைந்தவரின் கருத்துச் சுதந்திரம். அவர் தன் எண்ணத்தில் தோன்றியதை வரைந்திருக்கிறார். எல்லோரும் ஒரே மாதிரிச் சிந்திப்பதில்லையே! ஒவ்வொருவரின் எண்ணங்களும் சிந்தனைகளும் மாறுபட்டவை. வேறுபட்டவை. மற்றவர்களும் எம்மைப் போல் சிந்திக்க வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அடுத்து பாப்பரசரும் ஒரு மனிதர் தானே? வத்திக்கானில் நடக்கும் அரசியல் நீங்கள் அறியாததா?

நன்றி.

Anonymous said...

மலைநாடானுக்கு வணக்கம்!
கடந்த வருடம் ஆவணி மாதம் ஜேர்மனில் நடைபெற்ற "உலக இளையோர் தினம்" நிகழ்விற்கு சென்றுவரும் வாய்ப்பு திருமறைக் கலாமன்றத்தின் மூலமாக எனக்கு கிடைத்தது. இதில் எலகெங்கிலுமிருந்து 8லட்சத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர். அத்துடன் தற்போது தற்போதய பாப்பரசர் 16ம் பெனடிக்றின் திருப்பலியையும் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அந்த அனுபவங்களை நான் பின்னர் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். இருப்பினும் முந்தைய பாப்பரசர் இரண்டாம் இருளப்பர் சின்னப்பரிடம் உள்ள கைங்கரியம் இவரிடம் இல்லை போலும்!

மலைநாடான் said...

நவன், யோகன், இளஞ்சூரியன், நோநோ, வெற்றி,கலீஸ்!

உங்கள் அனைவரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இது நோநோ குறிப்பிட்டது போன்று பாப்பரசரரின் துருக்கி விஜயத்தை சுட்டி வெளிவந்துள்ள சித்திரம்தான்.

சித்திரத்தை நோக்குமிடத்து, பாப்பரசரின் பெருந் தன்மை கிண்டலடிக்கப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

கேலிச்சித்திரம் வரைந்தவரின் எண்ணப்பாடு அதுவாக இருக்கலாம். ஆனால் கருத்துச் சுதந்திரம் எனும் பேரில், மனித மனங்களில் குரோதம் வளர்ப்பதை என்னவென்று சொல்வது.