Wednesday, October 11, 2006

சுபதினம்

நேற்று..
ஒரு சுபதினம்.

எப்படி....?

காலைக் கருக்கலில்
நெற்றியில் வடிந்து
நிலம் சேரும்
குருதி சகதியுடன்
சந்திகளில் கிடக்கும்
"பொடிகள்" பற்றி, மக்கள்
பேசக்காணோம்....

நிலத்திலோ
நீரிலோ
புலிவேட்டை ஆடியதாய்
புழுகு வானொலிகள்
புலம்பக் காணோம்....

ஆதலால்
ஐயமின்றிச் சொல்வேன்
நேற்று ஒரு சுபதினம்.

களனிக் கரையிலும்
களுபோவிலச் சந்தியிலும்
தலையில்லா
முண்டங்கள் பற்றிய
பத்திரிகைத் தலைப்புக்கள் எதுவும்
பரபரப்பாயில்லை.

ஆதலினால் சொல்வேன்....
ஐயமின்றிச் சொல்வேன்...
இலங்கைத் தீவில்
நேற்று ஒரு சுபதினம்.


இந்தக்கவிதை(?) சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால், அப்போதுள்ள சூழலைக்கருத்தில் கொண்டு என்னால் எழுதப்பட்டு, எனது முதலாவது கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றது. இன்றுள்ள இலங்கைச் சூழலுக்கும் இது பொருந்தி வருகிறது எனும் போது..... என்ன செர்லவது..?

5 comments:

Anonymous said...

//தற்போதைய இலங்கைச் சூழலுக்கும் இது பொருந்தி வருகிறது எனும் போது..... என்ன செர்லவது..? //

:(

சின்னக்குட்டி said...

வணக்கம்... இந்த கவிதையை முன்பே வாசித்ததாக ஞாபகம்... எனது நண்பர்களால் கூடி இந்த கவிதையை சிலாகித்து கதைத்தாக ஞாபகம்.... உந்த கவிதையை மலை நாடன் என்ற பெயரிலா எழுதினீர்கள்.... இல்லை என்று நினைக்கிறன்...சொல்ல முடியும் எனில்....

கானா பிரபா said...

//ஆதலினால் சொல்வேன்....
ஐயமின்றிச் சொல்வேன்...
இலங்கைத் தீவில்
நேற்று ஒரு சுபதினம்.//

நேற்றய சுபதினங்களின் நினைவுகளோடு தானே கழிகின்றது எம்மவர் வாழ்வு

மலைநாடான் said...

//இந்த கவிதையை முன்பே வாசித்ததாக ஞாபகம்... எனது நண்பர்களால் கூடி இந்த கவிதையை சிலாகித்து கதைத்தாக ஞாபகம்.... உந்த கவிதையை மலை நாடன் என்ற பெயரிலா எழுதினீர்கள்.... இல்லை என்று நினைக்கிறன் //

சின்னக்குட்டி!

நீங்கள் சொல்வது சரி. இக்கவிதை பாரிஸ் ஈழநாடு பத்திரிகையில் அல்லது ஐரோப்பிய தமிழ்சஞ்சிகை ஒன்றில் வந்திருக்கலாம். என் நண்பரொருவர் அதை அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
மற்றும்படி 'உயிர்த்தெழுதல்' எனும் சிறிய கவிதைத் தொகுப்பில் வந்திருந்தது. வேறு பெயரில்தான் எழுதியிருந்தேன்..
தங்கள் பகிர்வுக்கு நன்றி!

மலைநாடான் said...

அனானி!, பிரபா!

உங்கள் வருகைக்கு நன்றி.

பிரபா!
நீங்கள் சொல்லியிருப்பது மெத்தச் சரி

நன்றி!